"ஈசான்ய மூலை"உங்க வீட்டில இப்படி இருக்கா?..நீங்க தேடினாலும் பணம் வராதாம்..மாத்தி யோசிங்க!
தூய்மையான இடத்தைத் தேடி மகாலட்சுமி வருவாள். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அதனால் வீட்டில் நிம்மதியும் செல்வமும் நிறைந்திருக்கும்.
சென்னை: சிலருடைய வீட்டிற்குள் நுழைந்தாலே லட்சுமி கடாட்சமாக இருக்கும். நறுமணம் வீசும் இடத்தில் செல்வம் செழிப்போடு இருக்கும். அன்னை மகாலட்சுமியின் அருளினால் நம்முடைய வீட்டில் செல்வம் பெருக, பண வருமானம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆன்மீகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு சில நேரங்களில் பண வருமானம் தடைபடும். அதற்கு ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ள பரிகாரங்களை செய்வதன் மூலம் தடைகள் நீங்கி வருமானம் அதிகரிக்கும்.
என்னதான் சம்பாதித்தாலும் நம் கையில் பணம் நிற்கவில்லையே என்று சிலர் கவலைப்படுவார்கள். சிலரோ கடன் பிரச்சினையில் சிக்கித்தவிப்பார்கள். அதற்கான காரணம் தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். அதற்குக் காரணம் அவர்கள் வீட்டில் இருக்கும் சில குறைபாடுகள்தான்.
செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி. மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். எப்போதும் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக அமங்கல சொற்களை பேசிக்கொண்டிருப்பவர்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய மாட்டார். மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், வீட்டில் சில பொருள்களை அவசியம் வைத்துக்கொள்ள வேண்டும். சில பொருள்களை வீட்டில் வைத்துக்கொள்ளாமல் தூக்கி எறிந்து விட வேண்டும். பண வருமானத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

நுழைவு வாயில்
நம்முடைய வீட்டின் வாசற்படியில் செருப்பை விடும்போது அதை சரியான முறையில் வைக்க வேண்டும். பலர் கண்களில் படும் வகையில் குறிப்பாக செருப்புகளை போடக்கூடாது எனவேதான் முன்பெல்லாம் செருப்பை கழற்றி விட தனியாக ஒரு பகுதியை கட்டி வைத்திருந்தனர். இன்றைய சூழ்நிலையில் அது முடியாது என்றாலும் நம்முடைய செருப்புகளை நாம் ஒழுங்காக நேரான முறையில் கழற்சி விட வேண்டும். இதன் மூலம் எதிர்மறை சக்திகள் குறைந்து நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.

மகாலட்சுமி வாசம் செய்யும் கண்ணாடி
கண்ணாடி, சீப்பு, அலங்கார பொருட்கள் எல்லாமே மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள். ஒருபோதும் உடைந்த கண்ணாடி, உடைந்த பற்களைக் கொண்ட சீப்புகளை பயன்படுத்தக்கூடாது. அதன்மூலம் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் எனவே உடைந்த பொருட்களை வீசி எறிந்து விடுவதுதான் நல்லது. முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமல்ல மூக்குக் கண்ணாடி உடைந்து இருந்தாலும், அதை உடனே மாற்றிவிட வேண்டும்.

ஈசான்ய மூலை
நம்முடைய வீட்டின் ஈசான்ய மூலை என்பது இறைவன் வாசம் செய்யும் இடம். வடகிழக்கு மூலையை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் அந்த மூலையில் குப்பையை குவிக்கக்கூடாது. கனமான பொருள்களையும் அந்த பகுதியில் வைக்கக்கூடாது. முடிந்த அளவிற்கு ஈசானிய மூலையை சுத்தமாக வைத்திருப்பதே நல்லது.

உடைந்த பொருட்கள்
நாம் எந்த காரணம் கொண்டு உடைந்த பொருட்களையோ, கட்டில், நசுங்கிய பொருட்களையோ பயன்படுத்தக்கூடாது அது நல்லதல்ல. அதுபோல கிழிந்த, தீயில் கருகிய பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஓடாத கடிகாரம், ரிப்பேர் ஆன உடைந்த கடிகாரங்களை எந்த காரணம் கொண்டும் ஹால்களில் மாட்டி வைக்காதீர்கள்.

ஒட்டடையை சுத்தம் செய்யுங்கள்
வீட்டின் வரவேற்பறை, நிலைவாசல் பகுதிகள் இவற்றிலெல்லாம் ஒட்டடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். நிலைவாசல் கதவின் பிடி அல்லது தாழ்ப்பாள் உடைந்துபோய் இருந்தால் உடனே மாற்றி விடுங்கள். கதவு திறக்கும் பொழுது சத்தம் வரக்கூடாது. அப்படி சப்தம் வருவது வீட்டின் செல்வ வளத்தை குறைக்கும். பழுதுபட்ட கதவுகளை பயன்படுத்த வேண்டாம்.

பூஜை அறை சுத்தம்
பூஜை அறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எல்லாமே சுத்தமான பொருட்களாக இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு பூஜை அறையை நன்கு துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குத்துவிளக்குகளை சுத்தமாகத் துடைத்து பளிச்சென்று இருக்கும் படியாக பார்த்துக் கொள்ளவும். கிழிந்த படங்களும் உடைந்த கண்ணாடிச் சட்டங்களில் இருக்கும் படங்களையும் பூஜையறையில் வைக்க வேண்டாம். பூஜை அறையில் உள்ள படங்களில் தூசி, ஒட்டடை படிய விட வேண்டாம். அப்படி இருந்தால் எதிரான பலன்களே ஏற்படும்.

சத்தம் போடும் ஃபேன்
உடைந்த ஸ்விட்ச் பாக்ஸ், வயர்களை பயன்படுத்த வேண்டாம். அது வீட்டின் அழகை கெடுப்பது மட்டுமல்ல, ஆபத்தையும் வரவழைக்கும். கீச் கீச் என்று சத்தம் போடும் மின்விசிறிகளை பயன்படுத்த வேண்டாம். சத்தமிடும் மின்விசிறிக்கு கீழ் அமர்ந்தால் ஒருவித எரிச்சல், கோபம் ஏற்படும் மன அழுத்தமும் உண்டாகும். எனவே சத்தம் போடும் மின்விசிறிகளை மாற்றி விடுவது நல்லது.

ஒழுகும் குழாய்கள்
தண்ணீர் ஒழுகி வீணானால் வறுமை வரும் என்று பெரியவர்கள் சொல்வர்கள், பாத்ரூம், பாத்திரம் கழுவும் இடங்களில் லீக் ஆகும் தண்ணீர் குழாய்களை உடனடியாக மாற்றி விடவும். டாய்லெட் பேசின் மற்றும் வாஷ் பேசின் அழுக்கு படிந்து காணப்படும் எனவே அவை எதிர்மறை சக்திகளை ஏற்படுத்தும். இவை எல்லாமே உங்களுக்கு தெரிந்தவைதான் என்றாலும் தெரிந்தே சில தவறுகளை சிலர் செய்வார்கள் இதன் மூலம் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார்கள். எனவே வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டால் அது பண வருமானத்தை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். அன்னை மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications