சங்கரா தொலைக்காட்சியில் பெரியவா தொடர்..வீடு தேடி வரும் காஞ்சி பரமாச்சாரியாரின் அருள் மழை
சென்னை: சங்கரா தொலைக்காட்சியில் ஜனவரி 7 முதல் 'பெரியவா' எனும் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. பெரியவாவின் அருட் கருணை நம் எல்லோருக்கும், சங்கரா டிவியின் இந்தத் தொடரின் மூலம் கிடைக்கும் என்று நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
சங்கரா தொலைக்காட்சி கடந்த 14 ஆண்டுகளாக ஆன்மிகம், கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 7ஆம் தேதி முதல் காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதி காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புதிய தொடரான பெரியவா' ஒளிபரப்பாக உள்ளது.
இந்த தொடரின் தொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்கராலயம்' வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவைத் தொடங்கி வைத்து பேசிய பத்மா சுப்ரமணியம், சங்கரா டிவி மூலமாக காமகோடி குடும்பம் இங்கே சேர்ந்திருக்கிறது. ஜனரஞ்சகமாகவும் ஆத்மானுபவமாகவும் பெரியவா' குறித்த தொடரை உருவாக்குவதற்கு சங்கரா டிவிக்கு பெரியவாவின் ஆசி இருந்திருக்கிறது.

தலைமுறை தலைமுறையாக பெரியவாவின் அருள் தொடர்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தலாய் லாமா ஒரு பேட்டியில் நாங்களெல்லாம் பெரிய சன்யாசிகள் அல்ல, காஞ்சி பெரியவர்தான் பெரிய சன்யாசி என்று கூறியிருக்கிறார். பெரியவாவின் அருட் கருணை நம் எல்லோருக்கும், சங்கரா டிவியின் இந்தத் தொடரின் மூலம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பெரியவா' தொடரின் இயக்குநர் பாம்பே சாணக்யா பேசும்போது, ''அடுத்த தலைமுறைக்கு பெரியவாவின் கருத்துகளை, தத்துவங்களை கொண்டு செல்வதுதான் இந்தத் தொடரின் நோக்கம். தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே வளரும் கதையாக இந்தத் தொடரை உருவாக்கியுள்ளோம். பெரியவாவின் உபதேசங்கள் தற்போதைய வாழ்க்கைக்கும் எப்படிப் பொருந்துகிறது என்பதை புரியவைக்க முயன்றிருக்கிறோம்.
நான்கு தலைமுறைகளின் வழியாகப் பயணிக்கும் கதையில் 80 வயது பெரியவாவாகத் தோன்றுபவர் முத்துவெங்கட்ராமன். 30 வயது பெரியவாவாகத் தோன்றுபவர் ராகவன். 13 வயது பால பெரியவாவாகத் தோன்றுபவர் வருண். பெரியவாவின் வாழ்க்கையை எளிதில் விளக்கவோ, வரையறைக்குள் கொண்டுவர முடியாது. இப்போதைக்கு 26 வாரத்துக்குதொடரை எடுத்திருக்கிறோம். இதுமேலும் விரிவடையக் கூடும் என்றார் இயக்குநர் பாம்பே சாணக்யா.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமானுஜர் சீரியல் பெரும்பாலானவர்களால் ரசிக்கப்பட்டது. அது போல சங்கரா டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஆன்மீக சீரியல் பெரும்பாலான ரசிகர்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications