தாலி கட்டும்போது அட்சதை போடுவது ஏன்? மணப்பெண் காலில் அரிசியை எட்டி உதைப்பது ஏன்? மகாலட்சுமி சிறப்பு
சென்னை: திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் அட்சதை தூவுவது ஏன் தெரியுமா? புதுமணப்பெண் மாமியார் வீட்டுக்குள் நுழையும்போது, அரிசியை காலால் எட்டி உதைப்பது ஏன் தெரியுமா? அரிசிக்கும், மணப்பெண்ணுக்கும் உள்ள தொடர்பு என்ன? சுருக்கமாக பார்ப்போம்.
அக்ஷதம் என்பது சமஸ்கிருத சொல்லாகும்.. இடிக்கப்படாத அல்லது பாதிக்கப்படாத என்பதே இதன் அர்த்தமாகும். அதாவது, முனை உடைபடாத பச்சரிசியில்தான் அட்சதை தயார் செய்வார்கள்.. இந்த அரிசியில் மஞ்சள், பசு நெய்யை சேர்த்து தயாராவதுதான் அட்சதை.

ஆன்மீகத்தை பொறுத்தவரை, உடல் அரிசியாகவும், மஞ்சள் ஆன்மாவாகவும், நெய் இறைவனாகவும் கருதப்படுகிறது. இதில் அரிசி என்பது சந்திரனுக்குரிய தானியமாகும்... குருவிற்குரிய நிறம் மஞ்சள் ஆகும்.. மகாலட்சுமியின் அம்சம் நெய் ஆகும்.. எனவே, அரிசி, மஞ்சள், நெய் இந்த மூன்றுமே கடவுள்களுக்கு சமமாக கருதப்படக்கூடியவை.. எனவே, இவைகளை மணமக்கள் மீது தூவி ஆசிர்வதிக்கும்போது, அந்த கடவுள்களே ஆசீர்வதிப்பது போல அர்த்தமாம். எனவேதான், அட்சதை தட்டில் வைத்து தரப்படுகிறது.
அதேபோல, மணமகள் திருமணம் முடிந்தவுடன் புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைப்பது என்பது வாழ்வில் மறக்க முடியாத தருணமாகும். புதுமணப்பெண், மாமியார் வீட்டுக்குள் நுழையும்போதும் பல சடங்குகள் செய்யப்படுகின்றன..
மரப்பலகையில் மணமக்களை நிற்க வைத்து, ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்று, பூஜையறையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வைப்பார்கள். சிலர் புகுந்த வீட்டிற்கு வரும் மணமகள், குடம் நிறைய தண்ணீர் எடுத்து வருவார்.. சிலர் கையில் விளக்கேந்தி வருவார்கள்.. அதுபோல, சிலர் கால் படியில் அரிசியை வைத்து அதை வலதுகாலால் மணப்பெண் லேசாக தள்ளிவிட வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது..
இதற்கும் காரணம் உள்ளது.. மணப்பெண் என்பவள், அந்த வீட்டின் மகாலட்சுமியாக கருதப்படுகிறார்.. மகாலட்சுமியே வீட்டிற்கு வந்து வாசம் செய்ய போகிறாள் என்பது அர்த்தம்.. இந்த மகாலட்சுமியின் அம்சங்கள்தான் அரிசி உள்ளிட்ட தானியங்கள் ஆகும். பச்சரிசி, நெல் போன்றவற்றில் லட்சுமியின் வாசம் முழுமையாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவேதான், காலால் அரிசியை உதைக்க சொல்கிறார்கள். புதுப்பெண் வலது காலை எடுத்து வைக்கும் நேரத்திலிருந்து அந்த குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் சூழ்ந்து கொள்ளுமாம்..












Click it and Unblock the Notifications