For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடனில் மூழ்காமல் இருக்கனுமா? வெள்ளிக்கிழமை மறந்தும் கூட இந்த வேலையை செய்யாதீர்கள்..அப்புறம் பாருங்க!

கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும்.

Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்க கூடாது அப்படி கொடுத்தால் வீட்டில் உள்ள லட்சுமி போய் விடுவாள் என்பது அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாகும். தங்க நகை ஆபரணங்களையும் யாருக்கும் வெள்ளிக்கிழமை கடனாகத் தரக்கூடாது. சுக்கிரனுக்கும் மகாலட்சுமிக்கும் உகந்த வெள்ளிக்கிழமை என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும். வாரத்தின் ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமையே பெரும்பாலும் தெய்வத்திற்கு உகந்த நாளாக அனைவரும் கடைபிடிக்கின்றனர். வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தப்படுத்தி விரதமிருந்து தெய்வ வழிபாடுகள் செய்வார்கள்.

ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ் ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்

எல்லாக் கிழமையிலும் எல்லாவற்றையும் நாம் செய்துவிடக் கூடாது. குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. இவற்றை செய்வதால் வீட்டில் கடன் பிரச்சினை ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிப்பது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிலும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடிப்பது கூடவே கூடாது.

கிக்சன் துடைக்காதீர்கள்

கிக்சன் துடைக்காதீர்கள்

வெள்ளிக்கிழமை அன்று அடுப்புகளை துடைக்கக் கூடாது வியாழக்கிழமை இரவே துடைத்து வைத்துவிடுவது நல்லது. வெள்ளிக்கிழமை என்றால் அனைத்து பெண்களும் வாசலில் கோலம் போடுவர் அவ்வாறு போடும் கோலம் புள்ளி வைத்து போடக்கூடாது ரங்கோலி கோலம் போட்டாலே போதுமானது.

நகை, பணம் கடனாக தர வேண்டாம்

நகை, பணம் கடனாக தர வேண்டாம்

வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது வியாழக்கிழமை அன்றே செய்துவிடவேண்டும். வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழட்டுவதோ அல்லது கழட்டி சுத்தம் செய்வதோ கூடாது. தங்க ஆபரணங்களை பிறருக்கு கடன் கொடுக்கக் கூடாது. பணத்தையோ, தயிர், உப்பு, ஊறுகாய், இட்லி, தோசைக்கு அரைத்து வைத்த மாவை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

பூஜை அறை சுத்தம்

பூஜை அறை சுத்தம்


வெள்ளிக்கிழமை அன்று பூஜை பொருட்களை விளக்கவும் அல்லது தொடைக்கவும் கூடாது பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்கு உகந்த நாள் வியாழக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.
வெள்ளிக்கிழமையில் பூஜை அறையை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. அதே போல் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அழுக்கு துணிகளை சேர்த்து வைத்திருப்பது கூடவே கூடாது. வெள்ளிக்கிழமை அன்று துவைப்பதை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகள் வீட்டில் இருக்கக்கூடாது. இதனால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும்.

எதையும் சுத்தம் செய்யாதீர்கள்

எதையும் சுத்தம் செய்யாதீர்கள்

பாத்ரூம், கழிவறையையும் இந்த நாளில் சுத்தம் செய்யக்கூடாது. அதே போல் சமையலறையில் அலமாரிகளில் போடப்பட்டிருக்கும் பேப்பர்களை புதிதாக மாற்ற கூடாது. மளிகை பொருட்களை எதுவாக இருந்தாலும் அதனை துடைத்து எடுக்க கூடாது. அதை எல்லாம் மறுநாள் தாராளமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்வது கூடாது.

 முடி, நகம் வெட்டாதீர்கள்

முடி, நகம் வெட்டாதீர்கள்


வெள்ளிக் கிழமையில் ஆண்கள் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. அதேபோல் முடி வெட்டுவதும் முகசவரம் செய்வதும் கூடாது. வெள்ளி கிழமை அன்று தேவையற்ற செலவுகளை செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
முடி, நகம் இரண்டையும் வெள்ளிக்கிழமை வெட்டக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இந்த இரண்டுமே நம் உடலில் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது . இதனால் வெள்ளிக்கிழமை நம் உடலில் உள்ள இந்த அங்கத்தை நான் இழக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் தவிர்ப்பதன் மூலம் இருக்கின்ற கடன் பிரச்சனையையும் சுலபமாக குறைக்க முடியும்.

மகிழ்ச்சி அதிகரிக்க பூஜை

மகிழ்ச்சி அதிகரிக்க பூஜை

வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும். இந்நாளில் லட்சுமி தேவிக்கு விரதம் இருந்து சிறப்பு பூஜை செய்வதால், மகா லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைகிறாள். அன்னை லட்சுமி தேவியை மகிழ்விக்க வெள்ளிக்கிழமை செய்யப்படும் சில பரிகாரங்கள் மற்றும் பூஜைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை உப்பு வாங்கலாம்

வெள்ளிக்கிழமை உப்பு வாங்கலாம்

வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி நிரப்பி வைக்கலாம். இதனால் உணவுக்கு ஏற்படாது என்பார்கள். மேலும் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். கடன் சுமை குறையும். உங்கள் வீட்டில் அன்னை மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்ய வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமையன்று, 5 சிவப்பு மலர்களை கையில் எடுத்து, அன்னை லட்சுமியை தியானித்து, அந்த மலர்களை பெட்டகத்திலோ அல்லது பணப்பெட்டியிலோ வைக்க பண வரவு அதிகரிக்கும்.

English summary
It is a well known fact that Lakshmi will leave home on Friday if she does not lend money to anyone. Gold jewelry should not be lent to anyone on Fridays. Let’s see what can and cannot be done on the optimal Friday for Venus and Mahalakshmi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X