For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய்கிழமை மறந்தும் கூட இந்த காரியங்களை செய்துவிடாதீர்கள்..கஷ்டதை வீடு தேடி அழைத்து விடாதீர்கள்

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட சில காரியங்களை செய்யக்கூடாது. அப்படி செய்தால் கஷ்டங்களை நாமே வெற்றிலை பாக்கு வைத்தது போல ஆகி விடும்.

Google Oneindia Tamil News

சென்னை: மங்களகரமான நாளான செவ்வாய்கிழமை நாளில் சில காரியங்களை மறந்தும் செய்யக்கூடாது. சில காரியங்களை செவ்வாய்கிழமை நாட்களில் செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கையாகும். செவ்வாய்கிழமையன்று என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அவ்வாறு செவ்வாய்க்கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருப்பது செவ்வாய் கிரகத்திற்கு தான். செவ்வாய் பகவான் செம்மை நிறம் உடையவர். இவர் மனிதனின் இரத்தத்திற்கு காரகமானவர், மனிதனுக்கு ஆற்றல், வலிமை, சக்தியை கொடுப்பவராகவும் செவ்வாய் பகவான் திகழ்கிறார். இவரது ஆசி இருந்தால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கனிமொழிக்கு ஸ்டாலின் இட்ட கட்டளை! டெல்லிக்கு டிக்கெட் ரெடி! நேரம் ஒதுக்கி தந்த 2 மத்திய அமைச்சர்கள்! கனிமொழிக்கு ஸ்டாலின் இட்ட கட்டளை! டெல்லிக்கு டிக்கெட் ரெடி! நேரம் ஒதுக்கி தந்த 2 மத்திய அமைச்சர்கள்!

செவ்வாய் பகவானின் அருள் மட்டும் கிடைத்து விட்டால் மனிதனுக்கு வீடு, மணை, கார் போன்றவை வாங்கும் யோகம் எளிதாக கிடைத்துவிடும். ஆகவே செவ்வாய் பகவானின் அருள் எப்பொழுதும் நமக்கு கிடைக்க வேண்டும். அவரின் கடைக்கண் பார்வை கிடைத்து விட்டால் போதும். நாம் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். வீடு,நிலம் வாங்கி செல்வத்திற்கு அதிபதியாக மாறலாம். ஆகவே செவ்வாய்க்கிழமை ஒரு சில பொருள்களை வாங்கிக் கொண்டு வந்தால் செவ்வாய் பகவானின் அருள் குறைந்து வறுமை ஏற்படும்.

முருகப்பெருமான் வழிபாடு

முருகப்பெருமான் வழிபாடு

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆற்றல், வீரம், வலிமை போன்றவற்றை தரக்கூடியவர் அங்காரகன் என்று சொல்லப்படும் செவ்வாய் ஆவார். ஆகவேதான் நவகிரகங்களில் முதன்மையானவராக செவ்வாய் கிரகத்தை அழைக்கின்றோம். அவ்வாறு செவ்வாய் கிரகத்திற்கு உரியவராகவும் இருப்பவர் முருகப்பெருமானாகவும் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபடுவதற்கு சிறந்த நாளாகவும் அமைகின்றது.

மங்களகரமான நாள்

மங்களகரமான நாள்

பெரிய அளவில் மங்களகரமான காரியங்கள் செய்வதற்கும், ஆன்மீக வழிபாடு செய்வதற்கும் செவ்வாய்க்கிழமை ஏற்ற நாளாக அமைகிறது. நாம் வணங்கும் இந்த தெய்வம் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள் புரிகிறார்கள். இந்த காரணத்தினால் தான் அன்றைய தினம் பணப் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதையும், மற்றவர்களுக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

இரும்பை வாங்காதீர்கள்

இரும்பை வாங்காதீர்கள்

அடுத்ததாக செவ்வாய்க்கிழமையில் இரும்பும், இரும்பு சம்பந்தமான பொருட்களை வாங்குவதும் அசுப காரியமாக பார்க்கப்படுகிறது. நிலம், வீடு வாங்குவதாக இருந்தால் செவ்வாய் கிழமையில் அதை செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த வீட்டில் வறுமை, நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதை வாங்கவே வாங்கவீர்கள்

இதை வாங்கவே வாங்கவீர்கள்

செவ்வாய்க்கிழமை கருப்பு நிற ஆடைகளை வாங்கவோ, கருப்பு நிற உடைகளை அணியவும் கூடாது. இந்த கிரகம் செம்மை நிறத்தில் இருப்பதால் செவ்வாய் என அழைக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் சிவப்பு நிற உடைகளை அணிவது மிகவும் நல்ல பலனைத்தரும். ஆரஞ்சு நிறத்தினால் ஆன ஆடைகளை செவ்வாய் கிழமையில் அணிவதன் மூலம் செவ்வாய் தோஷத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடமுடியும்.

பணக்கஷ்டம் ஏற்படும்

பணக்கஷ்டம் ஏற்படும்

அதேபோல் செவ்வாய்க்கிழமையில் கண்ணாடி சம்பந்தமான பொருட்களை வாங்குவதும், கண்ணாடி சம்பந்தப்பட்ட பொருட்களை மற்றவர்களுக்குக் பரிசளிப்பது உங்களுக்கு பண நஷ்டத்தை ஏற்படுத்தும். அதே போல் அழகு சாதன பொருட்கள், அசைவ உணவுகள் இவற்றை வாங்குவதும் நமது குடும்பத்திற்கு வீண் விரயத்தையும், பண கஷ்டத்தையும் கொடுத்து விடும். எனவே செவ்வாய்க்கிழமை இவற்றை வாங்குவதைத் தவிர்த்து விட வேண்டும்.

செல்வம் செழிக்க என்ன செய்யலாம்

செல்வம் செழிக்க என்ன செய்யலாம்

செவ்வாய்க்கிழமைகளில் புது ஆடை உடுத்தினால் அதிகம் சேரும். தான தருமங்களை செவ்வாய்க்கிழமை செய்தால் புண்ணியம் அதிகரிக்கும். முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமையில் தொடர்ந்து வழிபட்டு வர உங்கள் வீட்டில் செல்வம் செழித்து ஓங்கும். வீட்டின் பூஜை அறையில் செவ்வாய்கிழமையில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும் இதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

English summary
Spiritual News in Tamil : Don't do these mistakes on Tuesday (செவ்வாய்கிழமை செய்யக்கூடாத காரியங்கள்)Some things should not be forgotten on a gloomy Tuesday. The hope is that wealth will increase if certain things are done on Tuesdays. Let’s see what can and can’t be done on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X