For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருதாணியை வீட்டில் வளர்த்தால் இத்தனை நன்மைகளா?..எங்கே எப்படி வளர்க்கலாம் தெரியுமா?

மகாலட்சுமியின் பரிபூரண அருள் பெறுவதற்கு மருதாணி செடியை கட்டாயம் வீட்டில் வைத்து வளர்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: செக்கச் சிவக்க மருதாணியை கையில் வைத்தாலே மனதில் புது உற்சாகம் குடி கொள்ளும் முகமும் மலர்ச்சியாக இருக்கும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் மருதாணியை வைத்தாலும் மகாலட்சுமியின் அம்சம் குடியேறும். அதே போல வீட்டில் மருதாணி செடியை வளர்த்து வந்தால், வீட்டிற்கு மகாலட்சுமி அம்சம் கிடைக்கும் என்பது உண்மை.

அழகிற்காக மட்டுமே இந்த செடி வளர்க்கப்படுவதில்லை. மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் இந்த செடி காரிய வெற்றி, செல்வ வளத்தை அதிகமாக நமக்கு கொடுக்கும். குறிப்பாக வீட்டிற்கு முன் பக்கத்தில் மருதாணி செடியை வளர்த்தால் நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலால் எந்த பிரச்சினையும் வராது.

எதிர்மறை ஆற்றலை வாசலிலேயே தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி மருதாணி செடிக்கு உண்டு. இதே போல் இந்த மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்துக் கொண்டால் பெண்களை எந்த ஒரு துஷ்ட சக்தியும் தாக்காது.

முதல்வர் முன்னிலையில்.. ராஜ்ய சபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்!முதல்வர் முன்னிலையில்.. ராஜ்ய சபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்!

மருதாணி செடி

மருதாணி செடி

மருதாணி செடியை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இந்த ஒரு செடி மட்டும் வீட்டில் எந்த ஒரு திசையிலும் வைத்து வளர்க்கலாம். தோஷம் இல்லாத மருதாணி செடி மிகவும் மகத்துவமானது.

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள்

மருதாணி செடி உடைய இலைகளை வேப்பிலையுடன் சேர்த்து சிறிதளவு வண்டி, வாகனங்களில் வைத்துக் கொண்டால் எந்த ஒரு திருஷ்டி தோஷமும் அணுகாது. வீட்டின் கேட்டிலும் மருதாணி மற்றும் வேப்பிலை சேர்த்து சொருகி வைக்கலாம். நேர்மறை அதிர்வலைகள் உருவாகும். வீட்டில் துஷ்ட சக்திகள் இருந்தாலும் வெளியேறிவிடும்.

கையில் மருதாணி

கையில் மருதாணி

மருதாணி செடியின் இலைகளை பறித்து வேறு எந்த ஒரு பொருளையும் அதனுடன் சேர்க்காமல் அரைத்து மாதம் ஒரு முறையாவது பெண்கள் கைகளில் இட்டுக் கொண்டால் அவர்களுடைய கைகளில் எப்பொழுதும் மகாலட்சுமி வாசம் செய்வாள். மருதாணி வைக்கப்படும் கைகளில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். காரிய தடை என்பது இருக்கவே இருக்காது.

அழகும் ஆரோக்கியமும்

அழகும் ஆரோக்கியமும்

சுபகாரியங்களில் பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வதற்கும் இதுவே காரணமாகும். வெறும் அழகிற்காக மட்டு மருதாணி இடப்படுவதில்லை. அதில் இருக்கும் அதிர்வலைகள் ஒரு விதமான உற்சாகத்தைக் கொடுக்கும்.

தினமும் மருதாணி இலையை அரைத்து வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், மாதம் ஒரு முறையாவது பெண்கள் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டால் உங்களுடைய கைகளில் பணம் விரயமாகாமல் தங்கும். திருமணம் சுபகாரிய தடை இருக்கும் பெண்களும் இதனை செய்வதால் காரியத்தடை நீங்கி சுபகாரியங்கள் கைகூடும்.

கண் திருஷ்டி நீங்கும்

கண் திருஷ்டி நீங்கும்

மருதாணி செடியின் விதைகளை நீங்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடும் பொழுது சேர்த்துப் போட்டால் அதனுடைய வாசம் வீடு முழுவதும் பரவி நல்ல அதிர்வுகளை உண்டு பண்ணும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற எதுவும் அங்கு பலிப்பதில்லை. உடம்பில் ஒருவித சோர்வுடன் எப்பொழுதும் காணப்படும் பொழுது இந்த தூபத்தை போட்டு பார்க்கலாம். இதனுடன் வெண்கடுகு சேர்த்து தூபம் போடும் பொழுது உடலில் இருக்கும் துர் சக்திகள் நீங்கி சுறுசுறுப்பு அடைவீர்கள்.

சண்டை சச்சரவுகள் நீங்கும்

சண்டை சச்சரவுகள் நீங்கும்

தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களில் மருதாணி இலைகளை வைப்பது விருத்தியை உண்டாக்கும். பணம் கொழிக்கும் இடங்களில் இருக்கும் கண் திருஷ்டிகள் நீங்கி நல்ல முன்னேற்றம் காணப்படும். மகாலட்சுமியின் பரிபூரண அருள் பெறுவதற்கு மருதாணி செடியை கட்டாயம் வீட்டில் வைத்து வளர்க்கலாம், திருமண வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்கிறது. உங்கள் வீட்டில் மருதாணி செடி வளர்த்து பாருங்கள் எவ்வளவு சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் அவைகள் படிப்படியாக நீங்கிவிடும்.

English summary
Maruthani benefits: (மருதாணி வளர்ப்பதால் பலன்கள்) Growing Maruthani on the front side of the house will not cause any problem with the negative energy in our house. The Maruthani plant has the power to stop negative energy at the door. This plant is not only grown for its beauty. Considered an aspect of Mahalakshmi, the success of this plant will give us more wealth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X