Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபலமான பன்றி உண்டியல்.. அள்ள அள்ள அதிர்ஷ்டம்.. பணம் சேமிக்க பன்றி உருவ பொம்மை.. அதென்ன பிக்கி பேக்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பன்றி உருவ உண்டியல்கள் என்றால் என்ன? உண்டியலில், பன்றிகளின் உருவம் பொறிக்க என்ன காரணம்? அதிர்ஷ்டத்தை தரக்கூடிய பன்றி உண்டியல்களின் முக்கியத்துவங்கள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

உலகின் பல பகுதிகளில் பன்றிகள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன... ஜெர்மனியிலும் நெதர்லாந்திலும் பன்றி உண்டியல்கள் அதிர்ஷ்ட பரிசாகவும், புத்தாண்டு பரிசாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

spirituality piggy bank pig hundiyal

உண்டியல்கள்: இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவுகளில், 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்குடியினர் பன்றி உருவிலான உண்டியல்களை பயன்படுத்தியதாக பல ஆய்வுகளிலும் தெரியவந்துள்ளது.. அதேபோல, 13ம் நூற்றாண்டில் ஜெர்மானியர்கள் பன்றி உருவிலான உண்டியலை பயன்படுத்தி வந்தார்களாம். அந்தவகையில் மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில், காலம் காலமாக பன்றிகள் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் விலங்கினமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இன்று உலகில் பல நாடுகளில் பன்றி வடிவ உண்டியல்கள் புகழ்பெற்றுள்ளன.. பல தனியார் வங்கிகளும், பைனான்ஸ் நிறுவனங்களும் பன்றி வடிவத்தில் லோகோ டிசைன்களை அமைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.. இந்த பன்றி உண்டியலுக்கு "பிக்கி பேங்க்" என்று பெயர்.. இந்த பெயருக்கும் ஒரு பின்னணி காரணம் உள்ளது.

பிக்கி பேங்க்: அதாவது, மத்திய காலங்களில் உண்டியலை செய்வதற்கு, ஆரஞ்சு வண்ண களிமண் பயன்படுத்தப்பட்டுள்ளது.. இதற்குதான் 'Pygg' (பிக்) என்று பெயர்.. இதுவே, "Pygg Bank" என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் "Piggy Bank" என்றாகிவிட்டதாம்.. இந்த பெயருக்கு மாறியபிறகுதான். பன்றி வடிவ உண்டியல்கள் உலகளவில் பிரபலமடைந்ததாக சொல்கிறார்கள்.

ஆனால், பன்றி உருவத்தை உண்டியலுக்கு வைக்க மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.. பன்றிகளை வளர்ப்பவர்கள் அவற்றுக்கு அதிகம் உணவு தருவார்களாம்.. மாத இறுதியில் அவைகளை தேவைக்கு பயன்படுத்தி கொள்வார்கள்.. அதுபோல, நாமும் பணத்தை பிக்கி பேங்க் உண்டியலில் போட்டு வைத்தால், கண்டிப்பாக நம்முடைய தேவைக்கு உதவும் என்பதால்தான், "பிக்கி பேங்க்" உண்டியல்கள் பன்றி உருவத்தில் அமைத்தார்களாம்.

பிக் பேங்க்: அதேபோல, பன்றி உருவ உண்டியலுக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, அந்த காலத்தில் ஒரு குயவரிடம் "பிக் பேங்க்" செய்யுமாறு சொன்னார்களாம்.. அதாவது, காசு சேமிக்க களிமண்ணில் பாத்திரம் செய்து தரும்படி சொல்லியிருக்கிறார்கள்... அதுவரை அப்படியொரு பழக்கத்தை அறியாத அந்த குயவர், அதை தவறாக புரிந்துகொண்டு, பன்றி வடிவத்தில் ஒரு களிமண் பொம்மையை செய்து, அதன் முதுகில் நாணயம் போட ஒரு துளையை அமைத்து தந்தாராம்.

தவறான புரிதலில் இப்படி உண்டியலை அந்த குயவர் அமைத்து தந்தாலும், இதற்குமுன்பிருந்த உண்டியல் வடிவங்களைக் காட்டிலும், இந்த பன்றி வடிவ உண்டியல் வர்த்தக ரீதியாக உச்சத்தை தொட்டு, உலகப்புகழ் அடைந்துவிட்டதாம்.

கணிசமான தொகை: இப்படி காரணங்கள் பலவிருந்தாலும், சேமிப்பு என்பது நல்ல பழக்கமாகும்.. சிறிய தொகையை நாம் போட்டு வந்தாலும், பல நாள் கழித்து அதை எடுக்கும்போது, அது ஒரு கணிசமான தொகையாக பெருகியிருக்கும்.. போதுமான பணம் கிடைப்பதுடன், சேமிப்பை தொடர வேண்டும் என்ற எண்ணமும் எழும்..

அதிர்ஷ்டம் தரக்கூடிய விலங்காக பன்றி கருதப்படுவதால், பன்றி வடிவ உண்டியலில் பணம் விரைந்து சேரும் என்பது நம்பிக்கையாகும். அதுமட்டுமல்ல, பன்றிகளால் முன்னோக்கி மட்டுமே நடக்க முடியுமே தவிர, பின்னோக்கி நடக்க முடியாது. அதுபோல, நாம் செய்யும் எல்லா செயல்களும், நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளும் பின்னடையாமல், முன்னேற்றமே கிடைக்கும் என்றும் நம்பப்பட்டது. அதுமட்டுமல்ல, இந்த பன்றி வடிவ உண்டியலில் பணம் சேமிக்கும்பொழுது, சேமிக்கும் பணம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்குமாம்.

வரவேற்பு: இப்போது பல்வேறு வண்ணங்களில் இந்த பன்றி வடிவ உண்டியல்கள் வந்துவிட்டால், குழந்தைகளின் கவனத்தை அதிகம் பெறுகிறது. இது அவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் முக்கிய பங்காற்றி கொண்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+