திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி..நள்ளிரவு 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு..காத்திருக்கும் பக்தர்கள்
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய காத்துக்கொண்டுள்ளனர். இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்ட ஒரே நாளில் 4 நாட்களுக்கான 2 லட்சம் தரிசன டிக்கெட் வினியோகிக்கப்பட்டது.
தினமும் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் 11ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். அந்தந்த நாட்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்கப்பட்டு வருவதால் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஜனவரி 2ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்ந்து வரும் 11ம் தேதி இரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர். எந்தவித டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்பட்டாலும் திருமலையில் உள்ள மற்ற பகுதிகளை சுற்றி பார்க்க செல்லலாம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்வதற்காக நாளை முதல் 11ம் தேதி வரையிலான பத்து நாட்களுக்கு உண்டான இலவச டோக்கன்கள் திருப்பதியில் பிரத்யேகமாக 9 இடங்களில் அமைக்கப்பட்ட 96 கவுன்டர்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன்களை பெறும் பக்தர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
சொர்க்கவாசல் தரிசனத்துக்கு இலவச டோக்கன்களை பெறுவதற்காக வரும் பக்தர்கள் சிரமமின்றி அந்தந்த கவுன்டர்களுக்கு செல்லும் விதமாக திருப்பதி நகரின் பல்வேறு இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கும் கவுன்டர்களுக்கு செல்லும் விதமாக க்யூஆர் கோடு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து அருகில் உள்ள இலவச கவுன்டர் மையத்திற்கு சென்று டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் ரூ 300 ஆன்லைன் டிக்கெட் மற்றும் இலவச தரிசன நேர டோக்கன் பெற்ற பக்தர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என அறிவித்து இருந்த நிலையில் நேற்று பகல் 1.30 மணி அளவில் முன்கூட்டியே சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்ட ஒரே நாளில் 4 நாட்களுக்கான 2 லட்சம் தரிசன டிக்கெட் வினியோகிக்கப்பட்டது. தினமும் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் 11ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். அந்தந்த நாட்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்கப்பட்டு வருவதால் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அன்றைய தரிசனம் டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்குவதை நிறுத்தி அன்றே வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications