Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி ஏழுமலையானுக்கு 6 மாதத்தில் அள்ளிக்கொடுத்த பக்தர்கள்.. உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதத்தில் இந்த ஆண்டில், பக்தர்கள், அதிகபட்சமாக ரூ.166.14 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதத்தில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையின் மூலம் ரூ.777.9 கோடி தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது.

பக்தர்கள் காணிக்கை: நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் ஒன்றான திருப்பதிக்கு, ஆண்டு தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள், பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். பக்தர்கள் தங்களின் சக்திக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அம்பானி போன்றவர்கள் தங்கம் வைரம் என உண்டியலில் செலுத்துகின்றனர். அதே நேரத்தில் ஏழை நடுத்தர மக்கள் தங்களால் இயன்ற பணத்தை காணிக்கை செலுத்து கின்றனர். தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக கிடைத்த தலைமுடியை ஏலம் விடுவதன் மூலம் பல கோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.

Tirupati Balaji Temple June month Hundial revenue Rs. 166 Crore says TTD

குவிந்த பக்தர்கள்: ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து. கடந்த ஜுன் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 20 லட்சத்து 187 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.166.14 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

உண்டியல் காணிக்கை: ஜூன் 11ஆம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 92,238 பக்தர்களும், 10ஆம் தேதி 88,626 பேரும், 17ஆம் தேதி 87,762 பேரும், 25ஆம் தேதி 87,407 பேரும் ஏழுமலையானை தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன் 18ம் தேதி அதிக பட்சமாக ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4.59 கோடியாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். ஜூன் மாதத்தில் 11 நாட்களாக ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடிக்கு மேல் பக்தர்கள் செலுத்தினர்.

வருமானம் எவ்வளவு: 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன் ஏழுமலையான் கோயிலிக்கு காணிக்கை வருமானம் ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக அதிகரித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டில் ஏழுமலையானின் காணிக்கை வருமானம் 833 கோடியாக இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு 1450 கோடி ரூபாயாக அதிகரித்தது.

ஆறு மாத உண்டியல் காணிக்கை: இந்த ஆண்டு இதுவரை ஜனவரியில் ரூ.123.07 கோடியும், பிப்ரவரியில் ரூ.114.29 கோடியும், மார்ச்சில் ரூ.120.29 கோடியும், ஏப்ரலில் ரூ.144.12 கோடியும், மே மாதத்தில் ரூ.109.99 கோடியும், ஜூன் மாதத்தில் அதிகப்பட்சமாக ரூ. 166.14 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டில் 6 மாதத்தில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையின் மூலம் ரூ.777.9 கோடி தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது.

குபேரனுக்கு வட்டி: உண்டியல் காணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுதவிர, பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை, தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மூலமும் தேவஸ்தானத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. எனினும், இந்த வருவாய் அனைத்தும், ஏழுமலையான், தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது. இதன்பின்னால் ஒரு புராண கதை உள்ளது. பிருகு முனிவர் தனது பதியான நாராயணரை மித்ததையும், அந்த கால்களை நாராயணர் பிடித்து விட்டதையும் பார்த்து கோபமுற்ற லட்சுமிதேவி பூலோகம் வந்து விட்டார். இங்கு ஆகாசராஜனின் மகளாக பத்மாவதி என்ற திருப்பெயருடன் அவதரித்தார்.

ஏழுமலையான் கடன்: வைகுண்டத்தில் லட்சுமிதேவி இல்லாததால் அவரை கரம் பிடிக்க ஸ்ரீநிவாசனாக பூலோகத்தில் அவதரித்தார் நாராயணர். லட்சுமிதேவி உடனில்லாததால் நாராயணரிடம் செல்வம் இல்லை. எனவே, பத்மாவதியை மணப்பதற்காக, குபேரனிடம் கடன் பெற்றார். கலியுகம் முடியும் வரை, தான் பெற்ற கடனுக்கு, வட்டி செலுத்துவதாகவும், வாக்களித்தார். அதன்படியே, பக்தர்களின் காணிக்கை அனைத்தும், ஏழுமலையானின் கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+