திருப்பதிக்கு போகாமலேயே ஏழுமலையானின் லட்டு பிரசாதம் வேண்டுமா? இந்த ஊர்களில் இனி கிடைக்கும்!
திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த கர்நாடகா மாநிலம் கூட்டுறவு சங்கம் தயாரிக்கும் நந்தினி நெய்யை உபயோகிப்பது என தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. லட்டு பிரசாதம் பரவலாக கிடைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஆந்திரா மாநிலங்களில் உள்ள கோயில்களிலும் லட்டு பிரசாதம் இனி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதின்னாலே லட்டு பிரசாதம்தான். 175 கிராம் எடை கொண்ட இந்த லட்டு ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டுகளை காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். ஒருவருக்கு இத்தனை லட்டுகள்தான் என டோக்கன் வழங்கப்படும்.

இந்த லட்டு பக்தர்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. ஏழுமலையான் கோயிலில் 3 வகைகளில் லட்டு தயார் செய்யப்படுகிறது. அவற்றில் ஒன்று பக்தர்களுக்கு கவுன்ட்டர்களில் விற்பனை செய்யப்படும் 175 கிராம் லட்டு. இரண்டாவது லட்டு 1750 கிராம் எடையில் தயார் செய்யப்படும் பெரிய லட்டு ஆகும். அது போல் மூன்றாவது லட்டு, சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்காகவே தயார் செய்யப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பூந்தி பிரசாதம் வழங்கப்பட்டு இருந்தது.
175 கிராம் எடை கொண்ட 5100 லட்டுகளை தயாரிக்க 185 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 160 கிலோ நெய், 30 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கல்கண்டு, 4 கிலோ ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்காக நெய் வழங்க 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
லட்டு தரமும், சுவையும் குறைந்துள்ளதாக பக்தர்கள் புகார் கூறியிருந்தனர். இதையடுத்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்.
திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் வழங்கும் நெய்யில்தான் கலப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் நிறுவனம் 8.50 லட்சம் கிலோ நெய் வழங்க ஒப்பந்தம் பெற்றிருந்தது. இதுவரை 68 ஆயிரம் கிலோ நெய் வழங்கியுள்ளது. அதில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றது என திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தரமற்ற நெய்யை விநியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறு டெண்டர் விடப்பட்டதில் கர்நாடகா மாநில கூட்டுறவு சங்கம் டெண்டரில் பங்கேற்று தரமான நெய்யை வழங்குவோம் என உத்தரவாதம் அளித்தது. இதைத் தொடர்ந்து அந்த நெய் பரிசீலிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. நேற்று டேங்கர் லாரி மூலம் நந்தினி நெய் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெட்டிங் துறைக்கு வரவழைக்கப்பட்டது.
அப்போது சியாமளா ராவ் கூறுகையல், லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அப்போது அக்குழு நெய்யின் தரத்தை உயர்த்த வேண்டும் என அறிக்கை கொடுத்தது. அதன் பேரில் டெண்டர் கோரப்பட்டது.
இதில் கர்நாடகா மாநில கூட்டுறவு சங்கத்தின் நந்தினி நெய்யை உபயோகிப்பது என முடிவு செய்யப்பட்டது. பக்தர்களும் லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் அது பரவலாக கிடைக்க வழி வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆதலால் சென்னை, வேலூர், பெங்களூர் தகவல் மையங்களில் மட்டுமே கிடைத்து வந்த லட்டு பிரசாதம் இனி ஆந்திர மாநிலம் ரம்ப சோவரம், ஒண்டிமிட்டா, பித்தாபுரம், விசாகப்பட்டினம் , விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் 75 ஆயிரம் லட்டு பிரசாதங்கள் திருப்பதியில் உள்ள கபிலதீர்த்தம் சிவன் கோயில், ஸ்ரீனிவாச மங்காபுரம், அப்பலைய்ய குண்டா ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இவ்வாறு சியாமளா ராவ் தெரிவித்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications