Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா நாளை கொடியேற்றம்..இன்று முருகன் தேர் வெள்ளோட்டம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. புதியதாக புனரமைக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளைய தினம் காலையில் கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்க உள்ளது.

விழாவை முன்னிட்டு காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற்றது. கோயிலின் 3 ஆம் பிரகாரத்தில் அமைந்துள்ள காவல் தெய்வம் பிடாரி அம்மன் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கோயிலில் ஊர்வலமாக வந்த பிடாரியம்மன், ராஜகோபுரம் அருகே 16 கால் மண்டபத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பிடாரி அம்மன் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை வழிநெடுக திரண்ட ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.

பத்து நாட்கள் திருவிழா

பத்து நாட்கள் திருவிழா

நாளைய தினம் கொடியேற்றம் தொடங்கி பத்துநாட்களும் காலையில் விநாயகர், சந்திரசேகரும் , இரவு நேரங்களில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர்,வள்ளி, தெய்வானையும் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையாரும் , பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் மாடவீதியில் வீதி உலா நடைப்பெற்றும் அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

தேரோட்டம்

தேரோட்டம்

கொரோனா தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய உற்சாகத்துடன் மீண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து சுவாமி வாகனங்களும் பழுது நீக்கும் பணியிலும், பஞ்சமூர்த்திகளின் திருத் தேர்கள் பழுது நீக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்றது. ஏழாம் திருநாளான டிசம்பர் 3ஆம் தேதியன்று மாட வீதிகளில் விநாயகர், சுப்ரமணியர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச ரதங்களும் மாட வீதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியே பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வலம் வரவுள்ளனர்.

மகாதீப திருவிழா

மகாதீப திருவிழா

டிசம்பர் 6 ஆம் தேதி தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவரையினுள் பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையே சிவனாக வணங்க கூடிய தீப மலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தேர் வெள்ளோட்டம்

தேர் வெள்ளோட்டம்

மாட வீதியில் வலம் வரவுள்ள சுப்பிரமணிய தேரினை பழுது பார்க்கும் பணியில் கடந்த மூன்று மாதங்களாக ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில் 45 அடி உயரம் கொண்ட சுப்ரமணியர் தேரில் புதியதாக அலங்கார கால்கள், ஐந்து அடுக்குகள், கலச மட்டம் வரை ஊழியர்களால் 30 லட்சம் மதிப்பில் புதியதாக செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேரின் உறுதி தன்மையை அறிய இன்று காலை வெள்ளோட்டம் நடைபெற்றது.

கந்தனுக்கு அரோகரா

கந்தனுக்கு அரோகரா

முருகன் தேருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் நான்கு மாட வீதிகளை சுற்றி முருகர் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது 'கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று பக்தர்கள் பக்தி முழக்கமிட்டனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள்

லட்சக்கணக்கான பக்தர்கள்

இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபத்திருவிழாவிற்காக சிறப்பு ரயில்களும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+