Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாலட்சுமியின் அம்சம்.. திருநங்கைகளிடம் ஆசி வாங்குங்கள் அற்புதம் நிகழும்.. திருஷ்டி மாயமாகும்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருநங்கைகள் உண்மையில் இந்த உலகில் வாழும் தேவதைகள் நீங்கள் வரம் வாங்குவதும் பிரபஞ்சம் உங்களை ஆசீர்வதிப்பதும் அவர்கள் கையில் உள்ளது. திரு என்றால் மகாலட்சுமி நங்கை என்றால் பெண் மகாலட்சுமியின் பெண் திருநங்கைகள் என்பதை உணருங்கள்.

திருநங்கைகள்: திரு என்றால் மகாலட்சுமி நங்கை என்றால் பெண் மகாலட்சுமியின் பெண் திருநங்கைகள் என்பதை உணருங்கள். திருநங்கைகள் உண்மையில் இந்த உலகில் வாழும் தேவதைகள் நீங்கள் வரம் வாங்குவதும் பிரபஞ்சம் உங்களை ஆசீர்வதிப்பதும் அவர்கள் கையில் உள்ளது. திருநங்கைகளிடம் ஆசி பெற்றால் கண் திருஷ்டி காணாமல் போகும் என்றும் அவர்கள் கையால் பணம் வாங்கி பர்ஸில் வைத்தால் பணம் பெருகும் என்றும் பலரும் நம்புகின்றனர். எனவேதான் ரயிலில் செல்லும் போதும், வெளியில் திருநங்கைகள் பணம் கேட்கும் போதும் அவர்களுக்கு பணம் கொடுத்து ஆசி பெறுகின்றனர். குழந்தைகளுக்கும் ஆசி வழங்கச் சொல்கின்றனர்.

Transgenders blessings best for life: Mahalakshmis aspect Kan Drishti will disappear!

திருநங்கைகளின் ஆசி: திருநங்கைகளிடம் ஆசி பெறுவதானாலும் அவர்கள் ஆசிர்வாதம் செய்து கொடுக்கும் காசை வீட்டில் பத்திரப்படுத்துவதனாலும் என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்று பலரும் இணையதளங்களிலும் முகநூலிலும் எழுதியுள்ளனர். திருநங்கைகள் சிலர் சில கடைகளில் காசு வாங்கிக் கொண்டு திருஷ்டி சுற்றி, கையை கீழே குத்தி மளமளவென்று திருஷ்டி முறித்து ஆசிர்வாதம் செய்வார்கள். இதுபோன்று செய்வதால் கண் திருஷ்டி, ஓம்பல் விலகுவதாக கருதுகிறார்கள். கண்திருஷ்டி பலரின் வீழ்ச்சிக்கு காரணமாகிறது. நோய்களை வரவழைக்கிறது. திருநங்கைகளின் ஆசி இந்த திருஷ்டியை போக்கவல்லது என்று வட இந்தியர்கள் பலரும் நம்புகின்றனர்.

தம்பதியர் ஒற்றுமை: திருநங்கைகள் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் எனவும் சிலர் நம்புகின்றனர். திருமணம் நடக்காதவர்கள் அவர்களிடம் சொல்லி திருமணம் நடக்க ஆசீர்வாதம் வாங்குங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் தடை உள்ளவர்கள் அவர்களிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்குங்கள் நடக்கும் திருமணம் ஆனவர்கள் கணவனோ மனைவியோ கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டால் அவர்களிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்குங்கள். திரு என்றால் மகாலட்சுமி நங்கை என்றால் பெண் மகாலட்சுமியின் பெண் திருநங்கைகள் என்பதை உணருங்கள்

திருநங்கைகள் தரும் பணம்: திருநங்கைகள் புதன், சனியின் காரகத்துவம் என்று ஜோதிடத்தில் கூறியுள்ளது. எனவே அவர்களை என்றைக்கும் புறக்கணிக்காதீர். மகாபாரதத்தில் அரவாணை களப்பலி கொடுத்து கிருஷ்ணர் பாண்டவர்களை வெற்றி பெற வைத்ததாக கூறப்படுகிறது. இன்றைக்கு அந்த புராண கதையின் நினைவாக கூத்தாண்டவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. யாராலும் செய்ய முடியாத சில விஷயங்களை திருநங்கைகள் செய்ய முடியும். திருநங்கைகளிடம் பணத்தை கொடுத்து சில்லறை வாங்கி பாருங்கள் அப்புறம் அதன் மகிமையை உணர்வீர்கள்.

வலம் வரும் தேவதைகள்: திருநங்கைகள் சனி புதன் கிரக காரகத்துவத்தில் வருவார்கள் அவர்களை இழிவுபடுத்தி பேச கூடாது அவர்களின் பிறவி அப்படி அமைந்ததற்கு அவர்களின் கர்மா காரணமாகும் அவர்கள் சிவசக்தி சொரூபம் என்பதை உணருங்கள். திருநங்கைகளிடம் ஆசீர்வாதம் வாங்குங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். வடநாட்டவர்கள் அவர்களை தெய்வமாக மதிப்பார்கள். மும்பை டெல்லி போன்ற நகரங்களில் பெரிய கடைகளை திறக்கும் பொழுது முதன்முதலாக அவர்களுக்கு கொஞ்சம் பணத்தை அளிப்பதை முக்கியமான அம்சமாக வடநாட்டவர்கள் வைத்திருக்கின்றார்கள்.

கர்மாவினை தீரும்: திருநங்கைகள் பிச்சை எடுப்பதாக கருத வேண்டாம் அவர்கள் உங்களின் கர்மாவினை வாங்கி செல்கின்றார்கள் என்று கருதுங்கள் உங்களால் இயன்றால் அவர்களுக்கு ஒரு நல்ல நண்பனாக சகோதரனாக சகோதரியாக நினைத்து பழகுங்கள். எந்த ஒரு உயிரினம் இந்த சமூகத்தில் புறக்கணிக்கப்படுகின்றதோ அவர்கள்தான் கடவுளின் முதல் குழந்தை ஏனெனில் இங்கு புறக்கணிப்படுபவர்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகள். வடநாட்டவர்கள் தங்கள் இல்லத்தில் திருநங்கைகளை உதவிக்கு வைத்திருப்பார்கள் அவர்களின் முகத்தில்தான் விழிப்பார்கள் அவர்கள் மூலமாக கூட வியாபாரத்தை தொடங்குவார்கள்.

கண் திருஷ்டி கழியும்: திருநங்கைகளில் நிறைய நல்ல குணங்கள் மனங்கள் கொண்ட ஆட்களை சந்தித்திருக்கும் வாய்ப்பு அமைந்திருக்கும். உங்கள் குழந்தைகளை அவர்களின் கைகளில் கொடுத்து ஆசி பெறுங்கள் குழந்தைகளின் அனைத்து திருஷ்டியை எடுக்கும் சக்தி இவர்களுக்கு உண்டு. திருநங்கைகள் உண்மையில் இந்த உலகில் வாழும் தேவதைகள் நீங்கள் வரம் வாங்குவதும் பிரபஞ்சம் உங்களை ஆசீர்வதிப்பதும் அவர்கள் கையில் உள்ளது.

தொழில் லாபம் பெருகும்: நாம் செய்யும் தொழிலில் முடக்கம் தொழில் நஷ்டம் தொழில் விரக்தி வருமான தடை உள்ளவர்கள் உங்கள் அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து ஒரு லக்ன நேரமான இரண்டு மணி நேரம் உட்கார வைத்து சாப்பாடு விருந்து போட்டு அனுப்பி பாருங்கள். உண்மையிலேயே மார்வாடிகள் சேட்டுகள் வடநாட்டு இந்தியர்களுக்கு அவர்களின் அருமை தெரியும். தொழில் சிக்கல்கள் தடைகள் உள்ளவர்கள் தொழில் முடக்கம் உள்ளவர்கள் அவர்களிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்குங்கள்.

திருநங்கைகளுக்கு உதவுங்கள்: திருநங்கைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள்.திருநங்கைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் உங்களை ஆசீர்வதிக்கும் புகைப்படத்தை அடிக்கடி பாருங்கள். திருநங்கைகள் உங்கள் கர்மாவினை குறைப்பதற்கு இறைவனால் படைக்கப்பட்ட ஜீவன்கள் என்பதை உணருங்கள். திருநங்கைகளை பற்றி இவ்வளவு எழுதுவதற்கு காரணம் இருப்பதிலேயே ரொம்பவும் எளிமையான சக்தி வாய்ந்த பரிகாரம் திருநங்கைகளுக்கு உதவி செய்தல். இந்த உலகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதே அவர்களுக்குதான் முதலில் தெரியும் ஆனால் வெளியே சொல்ல மாட்டார்கள்.உங்களால் முடிந்தால் அவர்களை கடவுளாக கருதுங்கள் அப்படியில்லையென்றாலும் ஒரு உயிராக கருதுங்கள் என்றென்றும் இழிந்து பேசி விடாதீர்கள் என்று முகநூலில் மிதுன் என்பவர் பதிவிட்டுள்ளதாக பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இதே போல திருநங்கைக்கு பணம் கொடுத்து அவர் கையால் சில்லறை காசு வாங்கியதால் பல நன்மைகள் நடந்ததாக ஒருவர் தனது பிளாக்கில் பதிவிட்டுள்ளார். உங்களுக்கும் இதுபோல சம்பவங்கள் நடந்திருந்தால் எங்களுக்கு எழுதுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+