வைகுண்ட ஏகாதசி..திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கோயில்களின் பொருளாதாரா நிலையை ஆய்வு செய்து சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசிக்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது. பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.200லிருந்து ரூ.100ஆக குறைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
தமிழகத்தில் இன்று முதல் மார்கழி மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைத்து இருப்பதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் பெருமாள் கோவில்கள் அனைத்திலும் வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலையில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற பெருமாளின் 108 திவ்ய தேசங்களில், இந்த திருக்கோயில் 61வது திவ்ய தேசம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலாகும். குடும்ப சமேதராக பார்த்தசாரதி பெருமாள் காட்சியளிக்கிறார். 9 அடி உயர திருமால், சாரதிக்குரிய மீசையோடு காட்சிதருவது ஆலயத்தின் சிறப்பு.
பெரும்பாலும் 4 கரங்களுடன் இருக்கும் பெருமாள் இந்த கோயிலில் கிருஷ்ணர் எனும் மானிட வடிவில் காட்சி தருவதால் இரண்டு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். பீஷ்மர் எய்த அம்புகளை அர்ஜுனனுக்காக தானே தன் மீது தாங்கியதால், திருமாலின் முகத்தில் பல்வேறு வடுக்கள் ஏற்பட்டன. இப்படி ஏற்பட்ட வடுக்களை இப்போதும் உற்சாவர் திருமுகத்தில் காணலாம். இந்த ஐதீகத்தினால் தான் இந்த ஆலய மூலவர் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார். காயங்களுடன் இருப்பதால், எம்பெருமானுக்கு நைவேத்தியத்தில் சற்று அதிகமாக நெய் சேர்க்கப்படுகிறது. அதோடு மிளகாய் போன்ற காரமான பொருட்களை அதில் சேர்க்கப்படுவதில்லை.
மகாபாரதப் போரில் பார்த்தனுக்கு தேரோட்டியாக போரில் பங்கேற்றார். பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், சக்கரமும் பிரதானமாது. இருப்பினும் இந்த ஆலயத்தில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. காரணம் மகாபாரதப் போர் முடியும் வரை தான் ஆயுதம் எடுப்பதில்லை என்று உறுதி எடுத்தார். அதனால் சக்கரம் இல்லாமல் கையில் ஏந்தாமல், போரை அறிவிக்கும் சங்கு மட்டும் கையில் வைத்துள்ளார்.
பெரும்பாலும் 4 கரங்களுடன் இருக்கும் பெருமாள் இந்த கோயிலில் கிருஷ்ணர் எனும் மானிட வடிவில் காட்சி தருவதால் இரண்டு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். பீஷ்மர் எய்த அம்புகளை அர்ஜுனனுக்காக தானே தன் மீது தாங்கியதால், திருமாலின் முகத்தில் பல்வேறு வடுக்கங்கள் ஏற்பட்டன. இப்படி ஏற்பட்ட வடுக்களை இப்போதும் உற்சாவர் திருமுகத்தில் காணலாம். இந்த ஐதீகத்தினால் தான் இந்த ஆலய மூலவர் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார். காயங்களுடன் இருப்பதால், எம்பெருமானுக்கு நைவேத்தியத்தில் சற்று அதிகமாக நெய் சேர்க்கப்படுகிறது. அதோடு மிளகாய் போன்ற காரமான பொருட்களை அதில் சேர்க்கப்படுவதில்லை.
அழகாக பிறக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருப்பவர்கள், இந்த ஆலயத்தில் உற்சவரின் வடுக்கள் நிறைந்த கோலத்தை தரிசித்தால், அழகு என்பது அழியக்கூடியது. நிரந்தரமற்றது என்ற தத்துவத்தை உணர்வார்கள்.
இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறும். மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து, ராப்பத்து விழாக்களாக நடைபெறும். சொர்க்கவாசல் திறப்பின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்தசாரதி கோவிலுக்கு வருகை தருவார்கள்.
இந்நிலையில் இன்று முதல் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் விழாக்கள் நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான முன்னேற்பாடுகளை இன்று ஆய்வு செய்தார். ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, வைகுண்ட ஏகாதசிக்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைக்கப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே இந்த கோவிலில் டிக்கெட் விலை ரூ. 200 இருந்த நிலையில் தற்போது ரூ.100ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications