வரலட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம், வரலட்சுமி மந்திரம் என்ன தெரியுமா? செய்யும் முறை இதோ!
சென்னை: வரலட்சுமி விரதம் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விரதம் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையில் வருகிறது மற்றும் பௌர்ணமி நாளுடன் இணைந்து வருவது மிகவும் விசேஷமானதாகும். வரலட்சுமி பூஜை செய்ய பல நல்ல நேரங்கள் உண்டு (Varalakshmi Pooja Timings 2025). காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளில் எப்போது வேண்டுமானாலும் இந்த நல்ல நேரத்தில் (Nalla Neram) நீங்கள் பூஜை செய்து பலன் பெறலாம்.

சுப முகூர்த்த நேரங்கள்
காலை பூஜை நேரம்:
- காலை 5:46 முதல் 6:53 வரை (சுக்கிர ஹோரை)
- காலை 6:29 முதல் 8:46 வரை (சிம்ம லக்ன முகூர்த்தம்)
- காலை 8:12 முதல் 9:16 வரை (சந்திர ஹோரை)
பகல் வேளை பூஜை:
- பகல் 12:30 முதல் 1:30 வரை (சுக்கிர ஹோரை) - இது மிக முக்கியமான நேரம்
- மதியம் 1:00 முதல் 3:13 வரை (விருச்சிக லக்னம்)
மாலை பூஜை நேரம்:
- மாலை 5:30 முதல் 7:00 வரை (சுக்கிர ஹோரை)
- மாலை 7:11 முதல் 8:50 வரை (கும்ப லக்னம்)
மகாலட்சுமியின் மூல மந்திரம்
வரலட்சுமி பூஜையில் மகாலட்சுமியின் மூல மந்திரம் சொல்லலாம் (Varalakshmi Pooja Mantra in Tamil):
ஓம் ஸ்ரீம் க்லீம் மகாலட்சுமி
மகாலட்சுமி ஏய்யேஹி
ஏய்யேஹி சர்வ
ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
லட்சுமி காயத்ரி மந்திரம்
ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ்: ப்ரசோதயாத்
அஷ்டலட்சுமியின் அருள் பெற மந்திரங்கள்
அஷ்டலட்சுமிகளின் ஆசி பெற சொல்லும் சிறப்பு மந்திரங்கள்:
- சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
- நமஸ்தே செளபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
- வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
- நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
- தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
- நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
வரலட்சுமி விரத ஸ்லோகங்கள்
பக்தியுடன் சொல்ல வேண்டிய விசேஷ ஸ்லோகங்கள்:
ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம:
ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:
ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம:
ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம:
ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம:
ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம:
விரதத்தின் சிறப்பு பலன்கள்
வரலட்சுமி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு:
- செல்வ வளம் பெருகும்
- மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்
- நல்ல ஆரோக்கியம், வீரம், வெற்றி கிடைக்கும்
- குழந்தை பாக்கியம் மற்றும் கல்வி ஞானம் பெறலாம்
- அஷ்ட லட்சுமிகளின் ஆசி ஒருசேரப் பெறலாம்
இந்த புனிதமான விரத நாளில் மகாலட்சுமியின் அருளைப் பெற, மேற்கண்ட மந்திரங்களை பக்தியுடன் சொல்லி வழிபடுங்கள். ஆடி மாத பௌர்ணமியுடன் இணைந்து வரும் இந்த சிறப்பு நாளில் அம்பிகையின் கருணை கடாட்சம் அனைவரையும் சூழட்டும்.












Click it and Unblock the Notifications