Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணம் சரளமாக புழங்கணுமா.. இந்த ஒரு பொருளை பாக்கெட்டில் வைங்க.. பஞ்சமே இருக்காது!

சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது. ஒரு வேருக்கு பணத்தை ஈர்க்கும் தெய்வீக சக்தி உள்ளது. அந்த வேர் இருந்தால் பயணத்திற்கு பஞ்சமே வராது தாராளமாக பணம் புழங்கும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெட்டி வேரு வாசம்... என்ற பாடல் அந்த வேரின் வாசனை பறைசாற்றுகிறது. வாசனையான அந்த வேர் குளிர்ச்சி தரக்கூடியது. இந்த வேர் உங்களிடம் இருந்தால் பணத்திற்கு பஞ்சமே வராது! கையில் தாராளமாக பணம் புழங்கும் என்பது ஆன்மிக ரீதியான நம்பிக்கை.

வெட்டிவேரின் மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் ஆன்மிக ரீதியாகவும் வெட்டிவேர் நிறைய விஷயங்களை செய்யும்.

பணத்தை ஈர்ப்பதற்கு பல்வேறு பொருட்கள் இருந்தாலும் அதில் பச்சை கற்பூரத்திற்கு தனி மதிப்பு உண்டு. அந்த வகையில் வெட்டி வேர் நம்முடைய வீட்டில் இருந்தால் பணம் சரளமாகப் புழங்கும் என்கிற ரகசியமும் உண்டு.

வெட்டி வேர் வாசம்

வெட்டி வேர் வாசம்

மருத்துவ குணமும் மகத்துவமும் நிறைந்து இருக்கக்கூடிய வெட்டிவேர் உங்களுடைய வீட்டில் எப்போதுமே இந்த வெட்டிவேரின் வாசம் வீசும் படி பார்த்துக் கொள்ளுங்கள். வெட்டி வேரை போட்டு தண்ணீர் குடித்தால் எண்ணற்ற நோய்கள் குணமாகும். நீர் கடுப்பு, காய்ச்சல், சோர்வு, தோல் நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தீரும். அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த இந்த வேர் தர்பை புல் வகையை சார்ந்தது.

மனம் லேசாகும்

மனம் லேசாகும்

ஒரு சிறிய டப்பாவிலோ கிண்ணத்திலோ போட்டு வீட்டில் ஆங்காங்கே இந்த வெட்டிவேரை வைத்துவிடுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு வெள்ளை துணியில் வெட்டிவேரை போட்டு முடிந்து ஆங்காங்கே ஒரு முடிச்சை வைத்து விட்டால் அந்த வெட்டி வேரில் இருந்து ஒரு லேசான வாசம் உங்கள் வீடு நிரம்ப இருக்கும். இதை நீங்கள் சுவாசித்துக் கொண்டே இருந்தால் உங்களுடைய மனது எப்போதும் லேசாக இருக்கும்.

மன அமைதி அதிகரிக்கும்

மன அமைதி அதிகரிக்கும்

இன்னும் சில பேருக்கு வேலை பளு காரணமாக மன அழுத்தம் காரணமாக இரவில் நல்ல தூக்கம் இருக்காது. இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படும் சமயத்தில் தலையணைக்கு அடியில் ஒரு வெட்டி வேர் முடிச்சை வைத்து தூங்கலாம். இந்த வெட்டி வேர் வாசத்தை சுவாசித்துக் கொண்டே தூங்கும் போது நம்முடைய மனது அமைதியாகி நல்ல தூக்கத்தை தரும். ஆனால் மாதத்திற்கு ஒருமுறை பழைய வெட்டிவேரை எல்லாம் எடுத்து வீட்டிற்கு வெளிப்பக்கமாக வைத்து ஒரு கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி அதில் எரித்து விட வேண்டும். மீண்டும் புதிய வெட்டிவேரை மாற்றி வைக்க வேண்டும்.

 பணத்தை ஈர்க்கும் வெட்டி வேர்

பணத்தை ஈர்க்கும் வெட்டி வேர்

ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வெட்டிவேர் பணத்தை ஈர்க்கவும் செய்யும். ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரில் வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் வைத்து வெட்டிவேரை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு முழு எலுமிச்சை பழத்தை போட்டுக் கொள்ள வேண்டும். அதிலிருந்து வரும் ஆற்றலானது, வீடு முழுவதும் பரவ செய்து லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.

பணம் வீடு தேடி வரும்

பணம் வீடு தேடி வரும்

தேவையான நேரத்திற்கு பணம் கைக்கு கிடைக்க செய்யக் கூடிய அற்புதமான ஆற்றலும் இந்த வேருக்கு உண்டு. இந்த வேரை கையில் வைத்துக் கொண்டு உங்கள் குல தெய்வத்தை வேண்டினால் எங்கிருந்தாவது பணம் உங்கள் தேவைக்கு ஏற்ப வந்து சேரும். வீட்டில் இருக்கும் தேவையற்ற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறி விடும். வீட்டில் அடிக்கடி பிரச்சினை நடப்பவர்கள் இது போல் செய்து பார்க்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை அதில் எலுமிச்சை பழத்தை மட்டும் மாற்றி விட வேண்டும். தண்ணீரை வாரம் ஒரு முறை அல்லது தினமும் கூட மாற்றலாம். வெட்டி வேரை மட்டும் அப்படியே வைத்திருக்கலாம்.

நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்

நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்

கண் திருஷ்டிகள் நீங்கவும், நல்ல சக்திகள் நம் வீட்டிற்குள் வரவும், பணவரவு தடையின்றி நடைபெறவும் வெட்டிவேரில் எலுமிச்சை பழத்தை நன்கு சுற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வெள்ளை நூலை மஞ்சளில் தோய்த்து இறுக்கமாக நன்கு கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிப்பை வீட்டின் நில வாசல் படி அமைத்துள்ள இடத்தில் மேலே நடுவில் கட்டி வைக்க வேண்டும். 48 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக எலுமிச்சையை மாற்றி விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது நேர்மறை எண்ணங்கள் உண்டாகும். இதன் மூலம் பணம் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.

தொழில் வளர்ச்சியடையும்

தொழில் வளர்ச்சியடையும்

தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களும் பணம் புழங்கும் அந்த இடங்களில் இது போல் செய்து வைத்தால் கண் திருஷ்டிகளும், எதிர்மறை சக்திகளும் நீங்கி வருமானம் பல மடங்கு பெருகும். தொழில் விருத்தி அடையும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். வீட்டிலும், தொழில் செய்யும் இடங்களிலும் வெட்டிவேரை எப்பொழுதும் இது போல் செய்து வைத்துக் கொள்ளுங்கள் பணம் சரளமாக உங்கள் கையில் புழங்க துவங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பாருங்கள். பணம் சரளமாக புழங்கும் மனம் அமைதியடையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+