பூஜை அறையில் தண்ணீர் வைங்க! அப்பறம் பாருங்க உங்கள் வாழ்க்கை மாற்றத்தை!
சென்னை: பூஜை அறையில் தண்ணீர் வைப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் அவ்வாறு வைக்கப்படும் தண்ணீரை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: பூஜை அறையில் தண்ணீர் வைப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன ? தினமும் நாம் பூஜையின்போது சுவாமிக்கு நெய்வேத்தியம் படைப்பதுண்டு. எச்சில் படாத உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நாம் கடவுளுக்கு வைக்கலாம்.

நம்முடைய பூஜை அறையில் மண் பானையிலேயோ அல்லது செம்பு பாத்திரத்திலேயோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்ல பலனை கொடுக்கும். வழிப்பாட்டின் போது தினமும் தியானத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் (நேர்மறை ஆற்றல்) அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும்.
இவ்வாறு செய்து அந்த தண்ணீரை அருந்துவதால் நன்மைகள் உண்டாகும். பூஜையின்போது தீபாராதனை காட்டி, தெரிந்த தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப் பொருள்களை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. இரும்பு யமனுக்கு உரியது. இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது.
வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு நாள் பூஜையின்போதும் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த நாள் அதைக் கூரையில் ஊற்றிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது.
பூஜையின்போது மணியோசை எழுப்புவதும் கூட துர்சக்திகள் நெருங்காமல் இருப்பதற்குத்தான். மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்விக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது. இவ்வாற தெரிவித்துள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications