விளக்கு திரியை எப்படி மாற்றுவது? தப்பித்தவறியும் பூஜைகளில் தீபத் திரியை இப்படி செய்யாதீங்க.. டிப்ஸ்
சென்னை: வீடுகளில் விளக்கேற்றும்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாத செயல்கள் குறித்தெல்லாம் ஆன்மீகத்தில் தெளிவாகவே விளக்கி சொல்லப்பட்டுள்ளது.
வீடுகளில் விளக்குகளை ஏற்ற சரியான நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும்.. சூரியன் உதிப்பதற்கு முன் நம்முடைய வீட்டில் விளக்கேற்றுவது என்பது, மிக மிக நன்மையை அளிக்கும். இந்த விளக்கு ஏற்றும்போது குளித்து விட்டு விளக்கேற்ற வேண்டும்.

சரியான நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை விளக்கு ஏற்றினால் நல்ல பலனை கொடுக்கும். நாம் ஏற்றும் விளக்கு கிழக்கு நோக்கியும், விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்தபடி இருக்க வேண்டும்.. எப்போதுமே விளக்குகளை கிழக்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். ஆனால், இறந்தவர்களின் படத்திற்கு விளக்கேற்றும்போது வடக்கு திசையில் ஏற்ற வேண்டும்.
எப்போதுமே விளக்குகளை அரை மணி நேரமாவது எரிய விட வேண்டும். வீட்டின் நிலை வாசலில் முதலில் தீபம் ஏற்றிவிட்டு, பிறகுதான் பூஜை அறையில் ஏற்றி வைக்க வேண்டும். ஒரு விளக்கு தீபத்திலிருந்து இன்னொரு விளக்கை ஏற்றுதல் கூடாது. ஒவ்வொரு விளக்குகளையும் தனித்தனியாக ஒளியூட்ட வேண்டும்.
வெளிச்சம்: விளக்கு எரியத் தொடங்கியவுடனேயே, திரியின் கசடைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. அவ்வாறு செய்தால் தோஷங்கள் ஏற்படும் என்பார்கள்.. வேண்டுமானால், திரியை பெரிதாக்கி ஒளியை கூட்டிக் கொள்ளலாம்.. ஒருவேளை, விளக்கின் வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரிக்கு பக்கத்திலேயே இன்னொரு புது திரியை ஏற்றி வைக்க வேண்டும். அதற்கு பிறகே பழைய திரியை வெளியே எடுக்க வேண்டும்.
எண்ணெய் முழுவதும் தீர்ந்து, விளக்கு அணையும் வரை விடக்கூடாது.. விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கு திரிகள்: மேலும் விளக்கை அணை எனக்கூற கூடாது, விளக்கை குளிரவை எனக் கூற வேண்டும். விளக்கை எப்போதுமே பெண்களே ஏற்ற வேண்டும்.. பெண்களே அணைக்க வேண்டும்.. ஆனால், வாயினால் ஊதி விளக்கை அணைக்கக்கூடாது..
வெறுங்கையினாலும் தீபத்தை அணைக்கக்கூடாது. எண்ணெய்யிலுள்ள திரியின் அடிப்பகுதியை 'ஓம் சாந்த ஸ்வலரூபிணே நம' என்று சொல்லியே பின்புறமாக இழுக்கும்போது, தீச்சுவாலை மெல்ல மெல்ல குறைந்து, எண்ணெயில் அமிழ்ந்துவிடும்.
தவிர்க்க வேண்டும்: எக்காரணம் கொண்டும் விளக்கேற்றியதும் தலை சீவக்கூடாது, வீட்டை சுத்தம் செய்யக்கூடாது.. விளக்கேற்றிய பிறகு சுமங்கலிப் பெண் வெளியே செல்லக்கூடாது.. விளக்கேற்றிய உடனேயே சாப்பிடக்கூடாது. விளக்கேற்றும்போது தூங்க கூடாது. விளக்கு வைத்தபிறகு குளிக்கக்கூடாது.. வீடுகளிலுள்ள குப்பையை வெளியே கொட்ட கூடாது.. தலைவாசல் படியில் அமர்ந்து பேன் பார்க்க கூடாது. வீட்டில் விளக்கேற்றியதுமே பால், தயிர், காய்கறிகளை இரவில் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications