ஸ்டெர்லைட் ஆக்சிஜன் எங்களுக்கே- நாங்க மாநிலங்களுக்கு தருவோம்.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் எங்களுக்குதான்; நாங்கள்தான் மாநிலங்களுக்கு பிரித்து தருவோம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
தமிழகத்தின் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தது. இன்றைய உச்சநீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகள் சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ், ரவீந்தர பட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுகள்:
- ஆக்சிஜன் உற்பத்திகான அனுமதியைப் பயன்படுத்திக் கொண்டு வேதாந்தா குழுமம், தாமிர உருக்காலைக்குள் நுழையவோ, அதை செயல்படுத்தவோ கூடாது.
- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர், தூத்துக்குடி துணை ஆட்சியர், பிரச்சனைகளை நன்கு அறிந்த இரு அரசு அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்.
- கண்காணிப்புக் குழுவானது உள்ளூர் மக்களின் கவலைகள் குறித்து கேட்டறிய வேண்டும்
- ஆக்சிஜன் தயாரிப்புக்கான பணியில் ஈடுபடக் கூடிய டெக்னிக்கல் பணியாளர்கள், டெக்னிக்கல் அல்லாத பணியாளர்கள் விவரங்களை வேதாந்தா நிறுவனம் தர வேண்டும்.
- மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமானது தமிழ்நாட்டைச் சேர்ந்த சூழலியல் வல்லுநர்கள் உள்ளடங்கிய 3 நபர் குழுவை அமைக்க வேண்டும். வேதாந்த குழுமத்தால் பாதிக்கப்பட்டோரில் 2 பேர் இக்குழுவில் இடம்பெற வேண்டும். வேதாந்தா குழுமத்தால் பாதிக்கப்பட்டோர் 48 மணிநேரத்துக்குள் தங்களது பிரதிநிதிகளை பரிந்துரைக்காவிட்டால் தமிழக அரசு அந்த இடத்தை நிரப்பலாம்.
- உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியானது 2021-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி வரையிலானது.
இவ்வழக்கு விசாரணையின் போது நடைபெற்ற விவாதங்களும் நீதிபதிகளின் கருத்துகளும்:
மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்யநாதன்: ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மட்டுமே திறக்க வேதாந்தாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தாமிர உருக்காலையை வேதாந்தா குழுமம் இயக்கக் கூடாது. மாநில அரசு அமைத்துள்ள குழு இதனை கண்காணிக்கும்.
நீதிபதி சந்திரசூட்: இது தேசிய பிரச்சனை. இதனை மாநில அரசின் குழு கண்காணிக்க முடியாது. ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கிய உடன் வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: மாநில அரசுக்கும் வேதாந்தா குழுமத்துக்குமான பிரச்சனை பற்றி கவலைப்படவில்லை. ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் அதை மத்திய அரசுக்குதான் தர வேண்டும். மத்திய அரசுதான் மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யும்
நீதிபதி சந்திரசூட்: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்ட்டு மனுவை நாங்கள் விசாரிக்கவில்லை. ஆக்சிஜன் ஆலையை மீண்டும் திறப்பது பற்றித்தான் விசாரிக்கிறோம். இது தேசிய அளவிலான பிரச்சனை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் செத்து மடிகிறார்கள்.
அப்போது, சி.எஸ். வைத்தியநாதன் குறுக்கிட்டு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசின் சார்பில் ஆஜராகிவிட்டு வேதாந்தா குழுமம் சார்பான கருத்துகளை முன்வைக்கிறார் என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி சந்திரசூட், இந்த அரசியலுக்குள் நாங்கள் போகவிரும்பவில்லை. தேசிய அளவில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பிரச்சனையாகவே நீதிமன்றம் இதனை கருதுகிறது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications