வீடியோ கேம் வெறியர்களுக்கு தெறி மாஸ் செய்தி! இனி GTA Vice city கேம் இலவசம்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன்
வாஷிங்டன்: கேம் பிரியர்களுக்கு ஒரு கலக்கலான செய்தி வந்துள்ளது. ஜிடிஏ கேம்களை செல்னோவில் காசு கொடுத்தே விளையாட வேண்டும் என்ற நிலை இருந்த சூழலில் இப்போது அது மாறியிருக்கிறது.
இந்தக் காலத்தில் ஒடிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு ஒடிடியின் தாக்கம் நமது நாட்டில் வேகமாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

அதற்கேற்ப ஒடிடி தளங்களிலும் உள்ளூர் நிகழ்ச்சிகள் முதல் உலக நிகழ்ச்சிகள் வரை அனைத்தும் இருப்பதால் பலரும் அதன் பக்கமே சென்றனர். இப்போது இளைஞர்கள் பலரும் கேபில் டிவியை காட்டிலும் இதுபோன்ற ஒடிடியை பயன்படுத்தவே விரும்புகின்றனர்.
நெட்பிளிக்ஸ்: மாதச் சந்தா, ஆண்டுச் சந்தா செலுத்தி ஒடிடி சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். இந்தியாவைப் பொறுத்தவரை நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் ஆகிய ஒடிடி தளங்கள் தான் முக்கியமானதாக இருக்கிறது. படங்கள், டாக்குமென்டரி, வெப் சீரிஸ் என அனைவருக்கும் தேவையான கன்டென்டுகள் இதில் இருக்கும். மேலும், நாம் விரும்பிய நேரத்தில் பார்க்கலாம் என்பதும் இதன் பளஸ் பாயிண்ட் ஆகும்.
அதிலும் குறிப்பாக ஒடிடி தளத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் அது நெட்பிளிக்ஸ் தான். அமெரிக்காவில் தொடங்கி நெட்பிளிக்ஸ் சாம்ராஜ்ஜியம் இப்போது உலகெங்கும் பரவி இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரே கணக்கைப் பலர் பயன்படுத்துவதைத் தடுக்க நெட்பிளிக்ஸ் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. அப்போது பலரும் அதுவே நெட்பிளிக்ஸை அழித்துவிடும் என்றார்கள். ஆனால், உண்மையில் அதன் பிறகு நெட்பிளிக்ஸ் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தே இருக்கிறது.
அடுத்த இலக்கு: இப்படி வெற்றிகரமான ஒன்றாகவே நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது. மேலும், நெட்பிளிக்ஸ் தளத்தைப் பொறுத்தவரை இப்போது ஒடிடியை தாண்டி கேமிங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. நெட்பிளிக்ஸ் செயலி மற்றும் தளத்தில் கேமிங்கிற்கு என்று தனியாக ஒரு பகுதியே இருக்கும். அதில் இருக்கும் கேம்களை நெட்பிளிக்ஸ் சந்தா கட்டியிருந்தால் இலவசமாக விளையாடலாம். நெட்பிளிக்ஸ் ஒட்டி அளவுக்கு இது இன்னும் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் கூட இதில் நெட்பிளிக்ஸ் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறது.
கேம் விளையாடுவோரைக் கவர நெட்பிளிக்ஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே நெட்பிளிக்ஸ் தனது தளத்தில் 3 புதிய கேம்களை இணைத்துள்ளது. இவை ஏதோ சின்ன சின்ன கேம் என நினைத்துவிடாதீர்கள். உலகளவில் புகழ்பெற்ற ஜிடிஏ எனப்படும் Grand Theft Auto (GTA) சீரியஸ் கேம்கள் ஆகும். இந்த கேம்களை நிச்சயம் நம்மில் பலரும் விளையாடி இருப்போம். அதைத்தான் நெட்பிளிக்ஸ் தனது தளத்திற்கு எடுத்து வந்துள்ளது.
இலவசம்: GTA Triology: Definitive Edition கேமை நெட்பிளிக்ஸில் விளையாட முடியும். இது ஜிடிஏ சீரியஸில் வந்த Liberty City, Vice City, San Andreas ஆகிய மூன்று கேம்களை உள்ளடக்கி உள்ளதாகும். இந்த கேம்களை நாம் ஏற்கனவே மொபைலில் இப்போதே விளையாடலாம். ஆனால், அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும் இந்த மூன்று கேம்களையும் விளையாட சுமார் 1000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.
ஒரே ஒரு கண்டிஷன்: ஆனால், இதைத்தான் இப்போது நெட்பிளிக்ஸ் இலவசமாக வழங்குகிறது. நெட்பிளிக்ஸ் சந்தா இருந்தால் போதும்.. இனிமேல் இந்த கேம்களை இலவசமாக விளையாடலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐோபன் என்று இரண்டிலும் நெட்பிளிக்ஸ் பயனாளர்கள் இந்த கேமை விளையாட முடியும். வரும் டிசம்பர் 14ஆம் தேதி முதல் இதை நெட்பிளிக்ஸ் பயனர்கள் விளையாட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முன்பதிவும் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications