சுவிட்ச் ஆப் ஆனாலும் லொகேஷன் காட்டும்! செல்போன் எங்கே இருக்குனு ஈசியா கண்டுபிடிக்கலாம்! அசத்தல் வசதி
சென்னை: சுவிட்ச் ஆப் ஆனாலும் தொலைந்து போன செல்போனில் லொகேஷன் காட்டும் வசதி இனி வருகின்ற ஆண்ட்ராய்டு -15 அப்டேட் வெர்ஷனில் அறிமுகம் ஆகும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. நெட்வொர்க் வசதி இல்லாவிட்டாலும் கூட போன்கள் இருக்கும் இடம் அதன் உரிமையாளருக்கு தெரிந்து விடும் வகையில் இதன் வசதி இருக்கும்.
தெழில் நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தும் கூகுள் வருடம் தோறும் கூகுள் ஐ.ஓ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கூகுள் நிறுவன சேவைகளில் அடுத்து எந்த மாதிரியான அப்டேட் இருக்கும், ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் ஆகியவற்றை இந்த நிகழ்ச்சியில் கூகுள் வெளியிடும். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ஐ.ஓ நிகழ்ச்சி வரும் மே 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் கூகுள் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் பல வசதிகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பயனர்கள் மத்தியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ஒரு அப்டேட் ஒன்று ஆண்டராய்டு 15 வெர்ஷனில் கிடைப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 15 அப்டேட் வெர்ஷனில்: அதாவது, செல்போன்கள் தொலைந்து போன பிறகு ஸ்விட்ச் ஆப் ஆனாலும் கூட போன்கள் இருக்கும் லோகேஷனை அதன் உரிமையாளர்களுக்கு அனுப்பும் வசதி ஆண்ட்ராய்டு 15 அப்டேட் வெர்ஷனில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது பயனர்களுக்கு குஷியை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு முதலே இது தொடர்பான யூகங்கள் பரவி வருகிறது.
இருந்தாலும் இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு வெர்ஷனில் பயனர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக் இந்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் செல்போன்களில் இருக்கும் ஃபைண்ட் மை நெட்வொர்க் போலவே ஆண்ட்ராய்டு போன்களிலும் இந்த வசதி இருக்கும். மொபைல் நெட்வொர்க் வசதி இல்லாவிட்டாலும் கூட போன்கள் இருக்கும் இடம் அதன் உரிமையாளருக்கு தெரிந்து விடும். புளூடுத் பைகன் கருவி மூலம் இது செயல்படும்.
இப்படியொரு வசதியா.. வேற லெவலில் மாறும் வாட்ஸ் அப்.. வரப்போகும் அசத்தலான அப்டேட்!
பாதுகாப்பு லேயர் போல: இது வரப்போகும் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 15-ல் அறிமுகம் ஆனால் பைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க் செல்போன்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டும் இன்று பிரைவேசியை பாதுகாகும் விதமாகவும் இருக்குமாம். அதாவது, மூன்றாம் தரபு செயலி மூலாமக நமது லொகோஷன் நமக்கே தெரியாமல் கண்காணிக்கப்பட்டால் உடனடியாக அலர்ட் செய்யப்படும். இது தனிநபர் பிரவேசியில் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஒரு பாதுகாப்பு லேயர் போல செயல்படும்.
எந்தெந்த போன்களில் கிடைக்காது: ஆண்ட்ராய்டு வெர்ஷன் 15 பைண்ட் மை டிவைஸ் அப்டேட் ஆவது உறுதியாகும் பட்சத்தில் விரைவில் வெளியாக உள்ள கூகுள் பிக்ஷல் 9 மாடலில் இந்த வசதி இருக்கும் என்று தெரிகிறது. அதேபோல், கூகுள் பிக்ஷல் 8 க்கும் இந்த அப்டேட்கள் கிடைக்கலாம். அதற்கு முந்தைய மாடல்களில் கிடைக்க வாய்ப்பு குறைவு என்று தெரிகிறது.
ஏனெனில், பைண்ட் மை டிவைஸ் மூலம் செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆனாலும் அதன் இருப்பிடத்தை கண்டறியும் நடைமுறை மென்பொருள் மட்டும் இன்றி ஹார்டுவேரிலும் சில மாற்றம் செயய்ப்பட வேண்டியுள்ளது. எனவே, அதற்கு முந்தைய மாடல்களில் சாப்ட்வேர் அப்டேட் ஆனாலும் இந்த வசதி கிடைக்காது என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications