Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடையில் நிற்பது போல! அதிகாலையே ஆப்பிள் ஸ்டோர்களில் லைனில் நின்ற இளைஞர்கள்.. ஐபோன் வாங்க போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுக்க அதிக மக்களால் பயன்படுத்தப்படும் போன்களில் ஆப்பிள் ஐ போனும் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளன. சாம்சங் நிறுவனத்தின் மாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலத்தை இழந்து வரும் நிலையில் சீனாவிற்கும் - அமெரிக்காவின் ஆப்பிள் போனுக்கும் இடையில் உலகம் முழுக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

இதில் இந்தியாவின் மார்க்கெட்டை பிடிக்க ஆப்பிள் நிறுவனம் தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. அதற்கான பல அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மும்பை மற்றும் டெல்லியில் துவங்கப்பட்டு உள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டன. இந்தியாவில் இதற்கு முன் ஆப்பிள் போன்கள் நேரடியாக விற்கப்பட்டது இல்லை. ஆப்பிள் நிறுவனத்தின் டீலர்கள் வழியாகவே இந்தியாவில் ஆப்பிள் போன் மற்றும் அதன் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

Apple iPhone 15 series in markets today: Youth standing in line from early morning in shops

இதில் இந்தியாவின் மார்க்கெட்டை பிடிக்க ஆப்பிள் நிறுவனம் தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. அதற்கான பல அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மும்பை மற்றும் டெல்லியில் துவங்கப்பட்டு உள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டன. இந்தியாவில் இதற்கு முன் ஆப்பிள் போன்கள் நேரடியாக விற்கப்பட்டது இல்லை. ஆப்பிள் நிறுவனத்தின் டீலர்கள் வழியாகவே இந்தியாவில் ஆப்பிள் போன் மற்றும் அதன் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இனி நேரடியாக ஆப்பிள் இந்தியாவில் விற்கப்படும். இது போக இந்தியாவிலேயே.. சென்னையில் ஆப்பிள் போன் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது ரிலீஸ் ஆகி உள்ள ஆப்பிள் ஐ போன் 15 முழுக்க முழுக்க சென்னையில் தயாரிக்கப்பட்டது ஆகும்.

ஆப்பிள் 15 ரிலீஸ்: ஆப்பிள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 தொடரை இன்று விற்பனைக்கு கொண்டு வருகிறது. கடந்த வாரம் நடந்த "வொண்டர்லஸ்ட்" வெளியீட்டு விழாவில் இந்த போன் வெளியிட்டது. தற்போது இந்திய மார்க்கெட்டில் இது விற்பனைக்கு வருகிறது. இதையடுத்து மும்பை, டெல்லி ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த போனை வாங்க கடும் கூட்டம் நிலவியது.

காலை 6 மணிக்கே லைனில் வந்து மக்கள் நிற்க தொடங்கினார்கள். புக்கிங் செய்தவர்கள், புக்கிங் செய்ய வந்தவர்கள் என்று பெரிய கூட்டமே இங்கே லைனில் நின்றார்கள். தற்போதும் கூட நேரடி ஆப்பிள் ஸ்டோர்கள், டீலர்கள் கடைகளில் மக்கள் வரிசையாக லைனில் நின்று வருகின்றனர்.

முக்கியமாக இளைஞர்கள் பலர் அதிகாலையிலேயே ரேஷன் கடையில் நிற்பது போல லைனில் நிற்கிறார்கள். ஐபோன் 15 இன் நான்கு பதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது - ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். இந்த மாடல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐபோன் உற்பத்தி மையத்தில் இந்த போன்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

ஐபோன் 15 இந்தியாவில் விற்பனை தொடங்கியது: ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் இன்று - செப்டம்பர் 22 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறி உள்ளது.

iPhone 15 தொடரின் விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன் என்ன?

128 ஜிபி அடிப்படை சேமிப்பகத்துடன் வெளியாகும் ஐபோன் 15 விலை ₹ 79,900. இதே மெமரியுடன் வெளியாகும் iPhone 15 Plus இன் விலை ₹ 89,900.

iPhone 15 Pro (128 GB) இன் விலை ₹ 1,34,900 இல் தொடங்குகிறது, மேலும் 256GB சேமிப்பகத்துடன் iPhone 15 Pro Max ஐ வாங்க விரும்பினால், ₹ 1,59,900 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Apple iPhone 15 series in markets today: Youth standing in line from early morning in shops

ஐபோன் 15 அறிமுகம் காரணமாக , iPhone 14 இன் விலை ₹ 69,900 ஆகவும், iPhone 14 Plus இன் விலை ₹ 79,900 ஆகவும் இருக்கும் குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

"Wonderlust" வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு, iPhone 14 Pro தொடர் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் நீங்கள் அதை Apple இன் மறுவிற்பனையாளர்கள் மூலம் மட்டும் வாங்க முடியும்.

இந்த மாடல்களில் ஐபோன் 15 மாடலில் ஆப்பிள் சிலிகான் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு அல்ட்ரா வைடு-பேண்ட் சிப்செட் உள்ளது. இத்துடன் 5ஜி, அழைப்புகளின் போது உங்களின் குரல் தெளிவாக கேட்க செய்யும் மெஷின் லெர்னிங் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+