எகிறுதே.. அதிகரிக்கும் ஆப்பிள் யூசர்களே ‘டார்கெட்’.. களத்தில் குதிக்கும் ‘ஆப்பிள் பே’.. பலே திட்டம்!
சென்னை: இந்தியாவை தனது முக்கியமான வணிக மையமாக குறிவைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், தனது முக்கியமான சேவையை இந்தியாவிலும் களமிறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அது, ஆப்பிள் பே எனப்படும் யுபிஐ பேமெண்ட் சேவை.
உலகளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்திய நாட்டின் சந்தை மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு ஆப்பிள் போன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு அதிரடி ஆக்ஷனில் இறங்கி வருகிறது ஆப்பிள்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது நேரடி விற்பனை மையங்களை அண்மையில் தான் திறந்தது. மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் நேரடி விற்பனை மையங்களை அதன் சி.இ.ஓ டிம் குக் திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கிளைகளை திறக்க ஆப்பிள் திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் ஆப்பிள்: இந்தியாவில் மார்க்கெட்டை குறிவைத்து இறங்கியுள்ள ஆப்பிள், அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த பயனர்களுக்கு ஆப்பிள் பே வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இரு தரப்புக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இந்திய பயனர்களுக்காக பிரத்யேகமாக இந்தியாவில் பயன்படுத்தும் வகையில் ஆப்பிள் பே செயலியின் இயக்கம் இருக்கும் எனத் தெரிகிறது. ஆப்பிள் பே மூலம் ஆப்பிள் சாதன பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
யுபிஐ செயலி: இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் எப்படி செயல்படுகிறதோ அது போலவே க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் வகையில் ஆப்பிள் பேவின் இயக்கம் இருக்கும் எனத் தெரிகிறது. ஆப்பிள் போன்களில் மூன்றாம் தரப்பு ஆப் எதுவும் இல்லாமல் ஆப்பிள் பே மூலம் டிஜிட்டல் பேமெண்ட் மேற்கொள்ளலாம்.
பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர்போன ஆப்பிள் நிறுவனம், யுபிஐ செயலியிலும் வாடிக்கையாளர்களின் தகவல்கள், பணம் சார்ந்த விஷயங்களுக்கு மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மார்க்கெட்டை குறிவைத்து: இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறை பயனர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் யுபிஐ பரிவர்த்தனையின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், கூகுள் பே, பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவில் உருவெடுக்க உள்ளது ஆப்பிள் பே.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தனது கிரெடிட் கார்டை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இது ஆப்பிள் கார்டு பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய சந்தையில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவையை வழங்குவதற்காக இந்திய வங்கிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தையை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் ஆப்பிள் கிரெடிட் கார்டும் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications