கண்ணீரோடு நீயா நானாவில் பேசினோம்.. ஆனால் இப்போ! இந்த தப்பை யாரும் செய்யாதீங்க! பிரபலம் வேண்டுகோள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்பு குழந்தைத்தனம் மாறாத மனைவிகள் அதனால் கஷ்டப்படும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட கணவன் மனைவி இப்போது தனியார் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர்கள் இருவரும் பேசும் போது எங்களுக்கு கல்யாணம் முடிந்து ஏழு வருடங்கள் ஆகின்றது. ஆனால் எங்களுக்கு குழந்தை இல்லை. அதனால் எனக்கு என்னுடைய கணவர் தான் குழந்தை என்று அவருடைய மனைவி நீயா நானா நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அந்த வீடியோ சில வருடங்கள் கழித்து இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில் அந்த தம்பதி எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றி இதில் விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி 10 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சில தலைப்புகளில் விவாதிக்கப்படும் போது சிலர் பேசும் வார்த்தைகள் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று விடுகிறது.
அந்த வரிசையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் பிரபலமடைந்திருக்கின்றார்கள். அதுபோல சில வருடங்களுக்கு முன்பு குழந்தைத்தனம் மாறாத மனைவிகள் அவர்களால் கணவர்கள் படும் அவஸ்தை என்ற தலைப்பில் விவாதம் செய்யப்பட்டது. அதில் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். ஜெயசித்ரா மற்றும் யுவராஜ் என்ற தம்பதியினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பெரிய அளவில் பிரபலமடைந்து விட்டார்கள்.

அதிலும் யுவராஜ் தன்னுடைய மனைவி தன்னை ஒரு குழந்தை போல நடத்துகிறார். ஹோட்டலுக்கு போனால் கூட நான் தான் உங்களுக்கு சாப்பாடு ஊட்டி விடுவேன் என்று சொல்கிறார் என்று கோபிநாத்திடம் கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தார். அதற்கு அவருடைய மனைவி ஜெயசித்ரா எனக்கு கல்யாணம் முடிந்து ஏழு வருஷம் ஆகுது இன்னும் குழந்தை இல்ல. அதனால இவர்தான் என்னுடைய குழந்தை அவரை நான் குழந்தையா தாங்கி பார்த்துக்கிறது எனக்கு தப்புன்னு தெரியல என்று சொல்லி இருப்பார்.
அது குறித்து கோபிநாத் இப்படிப்பட்ட ஒரு மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் நீங்க. அவருக்கு கணவராக மட்டுமல்லாமல் குழந்தையாகவும் இருக்கிறீங்க என்று பாராட்டி இருந்தார். இந்த வீடியோ இப்ப வரைக்கும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதோடு இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதும் பலருடைய ஆறுதல் வார்த்தைகளாகவும் இருக்கிறது.
இப்படியான நிலையில் இந்த தம்பதி மெர்க்குரி என்ற youtube சேனலில் பேட்டி கொடுத்திருக்கின்றனர். அதில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தை பிறந்த பிறகு என்னுடைய வாழ்க்கை அப்படியே மாறிவிட்டது. குழந்தை இல்லாமல் நாங்கள் பட்ட கஷ்டம் வேற யாரும் படக்கூடாது என்று தான் நினைக்கிறேன். அதனால் தயவு செய்து கல்யாணம் முடிந்ததும் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள்.
அதற்கு பிறகு தள்ளி போடுவது உங்களுடைய இஷ்டம். ஆனால் இருக்கும்போது அதை வேண்டாம் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். பிறகு இருக்குமா இல்லையா என்பதே தெரியாது என்று கண்கலங்கி அழுதபடியே ஜெயசித்ரா பேசியிருக்கிறார். அதோடு நாங்கள் குழந்தை இல்லாததால் அவ்வளவு வேதனைகள் அனுப்பி விட்டோம். ஒரு நல்ல விசேஷத்திற்கு போக முடியாது பார்க்கிறவர்கள் எல்லாம் கேட்கிற கேள்வி குழந்தை என்ன ஆச்சு என்பதாகத்தான் இருக்கும்.

எனக்கு பொதுவாகவே குழந்தைகள் ரொம்ப பிடிக்கும். ஆனால் ஏழு வருடங்களாக குழந்தைகள் இல்லை என்ற போது நரக வேதனை தான் அனுபவித்துக் கொண்டிருந்தேன் என்று ஜெயசித்ரா பேசியிருக்கிறார். அதற்கு யுவராஜ் எனக்கு குழந்தை இல்லை என்ற வருத்தம் ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது. அதன் வெளிபாடு தான் நாங்கள் நீயா நானா நிகழ்ச்சியில் பேசியது கூட.
ஆனால் என்னுடைய குழந்தை பிறந்த நேரம் நான் அவளை கையில் வாங்கிய பொழுது நான் அதுவரைக்கும் பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் எல்லாம் காற்றோடு போய்விட்டது. இப்போது எனக்கும் என் மனைவிக்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் வருகிறது என்றால் அது குழந்தையை வைத்து தான். ஆனால் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று இந்த தம்பதி பேசியிருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications