Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயம் ரவிக்காக 15 ஆண்டு தியாகம்.. சோசியல் மீடியாவில் அறிக்கை வெளியிட காரணம் இதுதான்! ஆர்த்தி ரவி அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரவி மோகன் மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ரவி இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இருவரும் மாறி மாறி சோசியல் மீடியா பக்கங்களில் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆர்த்தி ரவி இன்று வெளியிட்ட அறிக்கையில் தான் எதற்காக சோசியல் மீடியா பக்கத்தில் அறிக்கை வெளியிடுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே நடிகர் ரவி மோகனின் குடும்பப் பிரச்சனை இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. ரவி மோகன் தன்னுடைய மனைவியான ஆர்த்தியை பிரிய போவதாக கடந்த வருடத்தில் அறிவித்திருந்தார். அதற்கு பிறகு பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. அதற்கு கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவருமே மறுப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் கடந்த வாரத்தில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இதை பார்த்து கோபமான ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Jayam Ravi Ravi Mohan Kenisha

ஆர்த்தி ரவி அறிக்கை

அதற்கு ஆர்த்தி ரவி மற்றும் அவருடைய குடும்பத்தினரின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து ரவி மோகன் நான்கு பக்கத்திற்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் ஆர்த்தி ரவி இன்று ரவி மோகன் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக மறுப்பு தெரிவித்து நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் தான் எதற்காக சோசியல் மீடியா பக்கங்களில் தங்களுடைய குடும்பப் பிரச்சனையை அறிக்கையாக வெளியிடுகிறேன் என்ற ஆதங்கத்தையும் தெரியப்படுத்தி இருக்கிறார்.

15 ஆண்டு தியாகம்

15 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எனது சொந்த கனவுகள் லண்டனில் பெற்ற முதுகலை பட்டம், இலட்சியம் என அனைத்தையும் துறந்து விட்டு வாழ்ந்தேன். வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பதாக உறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி மீறப்பட்டது. அவருக்காக வாழாமல் எனக்காகவும் என் லட்சியங்களுக்காகவும் நான் வாழ்ந்து இருந்தால் என் சொந்த அடையாளத்தில் இதைவிட இரண்டு மடங்கு வசதியாக உயர்வான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து இருப்பேன். ஆனால் காதலின் பெயரில் நம்பிக்கையின் பேரில் வாழ்ந்து முடிந்துவிட்டேன்.

இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு

நாங்கள் இதுவரை எடுத்த அணைத்து பொருளாதார முடிவுகளும் இருவரும் சேர்ந்து எடுத்தவைகள் தான். அதன் எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அவை முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த சூழ்நிலையில் என்னுடன் துணை நிற்கும் செய்தி துறை சமூக ஊடகம் மற்றும் பொதுமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு உண்மையில் எனக்கு வெகுந்த பலன் அளிக்கிறது.

Jayam Ravi Ravi Mohan Kenisha

தனிப்பட்ட வேதனை

மேலும் இத்தனை நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் என் இரண்டு பிள்ளைகள் எங்கள் வீட்டு பெரியவர்கள் மற்றும் என் நண்பர்களுக்கு ஒன்றே ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இந்த தனிப்பட்ட வேதனை பிரச்சனையை இப்படி நான் பொதுவெளியில் இந்த உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். இந்த சூழ்நிலையில் என் சுய கவுரவத்தை பாதுகாக்கவே இப்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை வருடங்களாக உங்களுக்காக உங்களோடு வாழ்ந்த ஒருத்தியை உதறி தள்ள வேண்டும் என முடிவெடுத்த நீங்கள் அதை கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம். இன்று என் கண்ணியமும் நேர்மையும் உங்களால் ஒரு பொது விவாதமாக மாற்றப்பட்டுள்ளது, இதை வேதனையோடு கடக்க முயற்சிக்கிறேன்.

நம்பிக்கை

நடக்கும் பிரச்சினைகள் பற்றிய உண்மை தெரிந்த ஒரே நபர் என் கணவர் எனக்காக நின்று பேச மறுக்கிறார். அவருடைய மவுனத்திற்கு பின் ஒரு நோக்கம் உள்ளது. அவருக்கு நிம்மதி கிடைக்க உண்மையில் விரும்புகிறேன். ஆனால் அந்த நிம்மதி உங்களோடு எல்லா கடினமான நேரத்திலும் துணை நின்ற ஒருவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் கிடைக்காது. நான் பலவீனமானவள் அல்ல. என் மீது நம்பிக்கை கொண்டுள்ள அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன். ஒருபோதும் தாழ்ந்து போக மாட்டேன். இதற்கு மேல் நான் பேச எதுவும் பேசபோவதில்லை. ஏனென்றால் நான் இன்னும் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன் எனக்கு நீதி கிடைக்க காத்திருக்கிறேன் என அந்த பதிவில் ஆர்த்தி ரவி கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+