ஆர்த்தி ரவிக்கு சப்போர்ட் செய்து அவருடைய அம்மா போட்ட போஸ்ட்.. கடைசியில் சொன்ன வரி.. பாராட்டிய பிரபல நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவி மோகனும் அவருடைய மனைவி ஆர்த்தி ரவியும் பிரிந்திருக்கும் செய்தி பலருக்கும் தெரிந்திருந்தாலும் நேற்று பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் திருமண விழாவில் கலந்து கொண்டார். இதனால் கோபமான ஆர்த்தி ரவி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது குறித்து ஆர்த்தியின் அம்மாவான சுஜாதா விஜயகுமார் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் ரவி மோகன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த வருடத்தில் ரவி மோகன் தன்னுடைய திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஆனால் ஆர்த்தி தான் விவாகரத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி விவாகரத்து அறிவித்த நேரத்தில் பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி பழகி வருவதாக செய்திகள் வெளியானது. அதற்கு கெனிஷா மற்றும் ஜெயம் ரவி இருவருமே மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

Jayam Ravi ravi mohan

ரவி மோகன் விளக்கம்

நாங்கள் இருவரும் ஹீலிங் சென்டர் வைக்கப் போகிறோம் அது தொடர்பாகத்தான் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறோம் எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது என்று விளக்கம் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தன.

ஆர்த்தி ரவி பதிவு

இதனால் ரவி மோகன் மனைவி ஆர்த்தி ரவி கோபமாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்த்தி அதில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த ஒரு வருடம் ஆக நான் மௌனமாக இருந்து வருகிறேன், அதற்கு காரணம் நான் பலகீனமானவள் என்பதல்ல.

என் பேச்சை விட என்னுடைய குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிக முக்கியமாக என்று கருதியதால் தான் அந்த விரதம் இருந்தேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பழி சொற்கள் அனைத்துக்கும் மௌனமாக தாங்கிக் கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும் இருந்தும் நாம் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவர்களிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் வந்து விடக்கூடாது என்பதால் தான்.

குழந்தைகளின் பொறுப்பு

இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாடகங்களும் வேறு. நடந்த உண்மை என்பது முற்றிலும் வேறு, எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும் நம்பிக்கையுடன் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கை உதறி சென்று இருக்கிறார். பல மாதங்களாக அந்த குழந்தைகளின் பொறுப்பை என் தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன்.

குழந்தைகளின் கண்ணீர்

யாரும் அறியாமல் அந்த குழந்தைகள் சிந்தும் கண்ணீரை என் கைகள் தான் துடைத்து கொண்டிருக்கிறது. இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதோரு உறவை உருவாக்கிக் கொண்டதால் பழைய உறவு இப்போது வெறும் செங்கல் சுவர் போல அவர் கண்களுக்கு காட்சி அளிக்கிறது. என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதி பறந்து விட்டது. ஆனால் இன்றும் என்னை தான் பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள். அது மட்டும் உண்மை என்றால் இப்போது அனைத்தும் இழந்து நிற்கும் இந்த நிலையில் இல்லாமல் நான் சுயநலத்துடன் எப்போதோ எனது பாதுகாப்பை கவனித்திருப்பேன்.

காதலுக்காக வருத்தப்படவில்லை

ஆனால் கணக்கு போட்டு வாழ்வதைவிட காதலுடன் வாழ்வது சிறந்தது என்று நான் முடிவெடுத்ததால் தான் இன்று இந்த நிலையில் நிற்கிறேன். இன்றும் அந்த காதலுக்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அது பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவதை தான் தாங்க முடியவில்லை. இன்று என் குழந்தைகளுக்கு 10 மற்றும் 14 வயதாகிறது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு உறுதியும் மிக முக்கியம். இன்று நடந்து கொண்டிருக்கும் சட்ட விவகாரங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் கைவிடப்பட்டதன் வலி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும் என்று அந்த அறிக்கையில் ஆர்த்தி கூறி இருக்கிறார்.

ஆர்த்தி ரவியின் அம்மா பதிவு

இதனால் ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை சப்போர்ட் செய்து அவருடைய அம்மா சுஜாதா விஜயகுமார் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். இது பலருடைய கவனம் பெற்று வருகிறது. அதில் "உண்மை வெல்லும்.. உண்மைக்கு அதன் சொந்த சக்தி உண்டு. கடவுளின் சக்தி தான் உண்மை. தன் குழந்தைக்கு என்ன நடக்கிறது என்பதை அந்த கடவுள் அறிவான். அவனுடைய வழிகளை ஒருபோதும் சந்தேகிக்காதே! நமக்கு எது சிறந்தது என்று தெய்வங்களுக்கு தெரியும். இருள் சூழ்ந்திருக்கும் போது ஒரு கை நீட்டுகிறது நம்பி பிடித்துக் கொள்" என்று பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவை நடிகை குஷ்பூ தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். அதுபோல இந்த பதிவுக்கு நடிகை ராதிகா சரத்குமார், குஷ்பூ உட்பட பலர் லைக் செய்து இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+