Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா உடம்புக்குள் அப்பா ஆவி போவதை பார்த்தேன்...அபிஷேக் சொன்ன பேய் கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சும்மாவே அபிஷேக் என்ன சொன்னாலும் கலாய்க்கும் ரசிகர்கள் இப்போ அவருடைய கதையை மீம்ஸ்களாக தெறிக்க விட்டு வருகின்றனர்.

கதை சொல்லச் சொன்னால் எவ்ளோ பீல் பண்ணி சொல்கிறார் பாருங்கள் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடியை தூக்கி இருக்கிறார்கள்.

தந்தை மரணத்தை கண்முன்னே பார்த்து அந்த வலியில் இருந்து மீளவில்லை என்று அபிஷேக் உருக்கமாக கதை கூறியிருக்கிறார்.

தொடரும் அழுகாச்சி சீன்கள்

தொடரும் அழுகாச்சி சீன்கள்

பல சீசன்களை கடந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து வரும் பாரம்பரிய போட்டியாகவும் ஒரு டாஸ்க் ஆகவும் கதை சொல்லும் போட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை சீசன்கள் போனாலும் இந்த ஒன்றை மட்டும் மாற்ற மாட்டார்களா?? என ரசிகர்கள் பலர் புலம்பி வருகின்றனர். போட்டியாளர்கள் ஒருபுறம் கண்ணீரை கசக்கி கசக்கி பிழிந்து கொண்டிருக்கும்போது ரசிகர்களுக்கு ஓடிச்சென்று துடைத்துவிட வேண்டும் என்று தோன்றுகிற மாதிரி தான் தற்போது போட்டியாளர்கள் தங்கள் திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அழவைக்கவில்லை என்றால் அன் லைக்கா? ?

அழவைக்கவில்லை என்றால் அன் லைக்கா? ?

ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதையைத் தொடங்கி எப்படியும் ரசிகர்களை அழ வைத்து விடவேண்டும் என்பதில் கவனமாக கூறிக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சில போட்டியாளர்கள் நிஜத்தில் நடந்ததை நாங்கள் சொல்லுவோம் என்று அடாவடியாகவும், அழுகையாகவும் இல்லாமல் அன்லைக் வாங்கிவிட்டு இருக்கிறார்கள். கதை சொல்லும் போது இவர்கள் அழுது அடுத்தவர்களை அழ வைத்தால்தான் சக போட்டியாளர்களும் லைக் கொடுத்து வருகின்றனர். இதனை நன்றாகப் புரிந்துகொண்ட திறமைவாய்ந்த போட்டியாளர்கள் பலர் இதற்காகவே பார்த்து பார்த்து காய் நகர்த்தி வருகின்றனர்.

Recommended Video

    4 மாதம் மகனை பார்க்கவில்லை கண் கலங்கிய Thamarai Selvi | Bigg Boss 5 Tamil
    கதையைக் கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்

    கதையைக் கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்

    கடந்த நான்கு சீசன்களையும் நன்றாக பார்த்து அதை கரைத்து குடித்துவிட்டு வந்திருக்கும் அபிஷேக் தன்னுடைய ரசிகர்களை மட்டுமல்லாமல் தனக்கு இதுவரைக்கும் நெகட்டிவ் கமெண்ட்கள் கொடுத்துக் கொண்டிருந்தவர்களையும் தற்போது ரசிகர்களாக மாற்றிவிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். அதனால் ஒவ்வொரு டாஸ்க்கிலும் இவருடைய அலப்பறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. செய்யும் செயல்களால் அனைத்து இடங்களிலும் நிறைந்து இருக்கும் இவர் தன்னுடைய கதையை கூறி ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கிறார். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று என்ன தோன்றும் வகையில் இவர் பேசியிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    அட. ..உண்மையாவா??

    அட. ..உண்மையாவா??

    தந்தையின் இழப்பு பற்றியும் அவர்தான் தனக்கு பெரிய ஹீரோ என்றும் அதற்குப் பிறகுதான் சாதித்த செயல்களைப் பற்றியும் கூறி கொண்டிருந்தவர், தந்தை இறக்கும் போது இவர் அவருடைய ஆவி இவருடைய தாயின் உடலுக்குள் சென்றதை நேரடியாக பார்த்திருக்கிறாராம். இவர் இந்த வார்த்தையை கூறியது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பக்கம் ரசிகர்கள் உண்மையில் அப்படித்தான் இருக்கும் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மற்றொரு பக்கம், கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்கிறான் பாருங்கள்...என்று சொல்வது சரியாக அபிஷேக்குக்கு தான் பொருந்தும் என்று கமெண்டுகளில் கலாய்த்து வருகின்றனர். என்ன இருந்தாலும் இவருடைய கதை பலருக்கும் நல்ல என்டர்டைன்மென்ட் கொடுத்திருக்கிறது என்று பலர் என்ஜாய் பண்ணியும் வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+