அபிஷேக்குக்கு அள்ளு கொடுத்த கமல்... கடைசியில் விட்ட பெருமூச்சு.. கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: அந்தா...இந்தா...என்று கமல் நேத்து அபிஷேக்குக்கு அள்ளு கொடுத்த மூவ்மெண்ட் தான் ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஒவ்வொருத்தரும் சேவ் ஆக...ஆக அபிஷேக்குக்கு பிபி எகிறி கொண்டு இருக்கிறது. அது அவருடைய முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நாடியா சாங்க் தான் இந்த வார எலிமினேஷன் என்னும் செய்தியை கேட்டதும் அனைவரின் கண்களும் அபிஷேக்கின் முகத்தில்தான் நிலைகொண்டிருந்ததாம்.

சமூக வலைத்தளத்தில் பரவும் கருத்துக்கள்
இந்த வாரம் எலிமினேஷனில் எப்படியும் அபிஷேக் வெளியே சென்று விடுவார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்து இருந்தது போல அபிேஷக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் போல, அதனால் தான் அவருடைய முகத்தில் ஈயாடவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒருபுறம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீணாகி விட்டதே என்று பலர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கும்போது, இன்னும் ஒரு சிலர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் செய்யும் செயல்கள் எரிச்சல் ஊட்டுவதாக இருக்கிறது என்று அவரைப் பற்றி நெகட்டிவ் கமெண்ட்களையும் அனுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தான் இதுவரைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கவே இல்லை என்று கூறிய அபிஷேக் நிகழ்ச்சி பார்க்காமலே இந்த அளவிற்கு எப்படி சக போட்டியாளர்களை மேனேஜ் செய்து கொண்டு செல்வது என்பதை நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டும், சில நேரங்களில் அடுத்தவர்களின் மீது கோபம் பட்டு திட்டிவிட்டு அதற்கு மேல் மேல் நடிப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கும்படி பாசமான வார்த்தைகளை கூறி, உரிமை எனக்கு இருக்கிறது என்று உரிமையாக சண்டை போட்டு விடுகிறார். இது பலருக்கும் பார்ப்பதற்கு வேடிக்கையாக தான் இருந்து வருகிறது அதனாலேயே இவர்தான் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார் என்று முதல் வாரத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
Recommended Video

ராஜுவின் காமெடி
நேற்றைய எபிசோடில் கடைசியாக நாடியா சிங் மற்றும் அபிஷேக் இருவரும் இருக்கும்போது கமல் சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திப்போம் என்னும் வார்த்தையைக் கூறி விட்டு கிளம்பிவிட்டார். அப்பொழுது தான் வெளியே போய் விடுவோம் என்றோ அல்லது ரசிகர்கள் நம்மளை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவோ ராஜுவை தனியாக அழைத்து அவரிடம் எதை எதையெல்லாமோ பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அதைப் பற்றி ஒன்றுமே புரியாத ராஜு இவன் என்ன சொல்ல வரான் என்று கேள்வி கேட்டிருப்பது ரசிகர்களுக்கு காமெடியை கொடுத்திருக்கிறது.

பெரிய....பெருமூச்சு
யார் இந்த எலிமினேஷனில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை ரசிகர்களும் போட்டியாளர்களும் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்த நேரத்தில் அதில் மீதமிருந்த நாடியா சிங் மற்றும் அபிஷேக் இருவருமே கலவரத்தை மனதிற்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டுதான் இருந்தனர். ஆனால், கமல் நாடியாவின் பெயரை சொன்னதும் பெருமூச்சு விட்ட அபிஷேக்கை தான் பலரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் யாருடைய கண்ணும் நாடியா விடம் செல்லவே இல்லையாம். ஒரு வழியா இந்த வாரம் தப்பித்து விட்டோம் என்று இவர் நினைத்ததாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications