நடிகர் அர்ஜுன் குடும்பத்திற்கு கோவிலில் பரிவட்டம்.. பள்ளியில் தம்பி ராமையா சொன்ன திருக்குறள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் அர்ஜுன் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதி, அவருடைய அப்பா தம்பி ராமையா உடன் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதோடு பக்கத்தில் இருந்த அரசு பள்ளியில் சிறப்பு விருந்தினராகவும் அர்ஜுன் குடும்பத்தினர் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது நடிகர் தம்பி ராமையா திருக்குறள் சொல்லி குட்டி கதையும் சொல்லி இருக்கிறார்.

பொதுவாக பல நடிகைகள், நடிகர்கள் சினிமாவில் புகழில் உச்சத்தில் இருந்தாலும் சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் அங்கேயும் என்ட்ரி கொடுத்து விடுகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் அர்ஜுனும் இணைந்திருக்கிறார். தமிழ் ரசிகர்களால் ஆக்சன் கிங் என்று அழைக்கப்படும் அர்ஜுன் கன்னடத்தில் தான் முதலில் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். அதற்கு பிறகு தான் தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

Television Arjun Thambi Ramaiah

அதிலும் அவர் நடிப்பில் வெளியான காக்கி சட்டை, ஜென்டில்மேன், ரிதம், முதல்வன், ஏழுமலை, ஜெய்ஹிந்த் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. தேச உணர்வை ஊட்டி வளர்க்கும் கேரக்டரில் தான் ஆரம்ப காலகட்டத்தில் அர்ஜுன் அதிகமாக நடித்து வந்தார். ஆனால் சமீப காலமாகத்தான் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். இறுதியாக அவர் நடிப்பில் வெளியான லியோ படம் அர்ஜுனின் இன்னொரு நடிப்பு முகத்தையும் வெளியே கொண்டு வந்தது.

சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை பிரிய காரணமே இதுதான்.. நடிகர் ராஜ்கிரண் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு
அது போல அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதிக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் நடிகர் அர்ஜுன் ஜீ தமிழில் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் தான் காதல் ஏற்பட்டது என்று அவர்களே பேட்டியில் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தன்னுடைய மகள் திருமணத்திற்கு பிறகு அர்ஜுன் தன்னுடைய மருமகன் மற்றும் சம்மந்தியை கூட்டிக்கொண்டு திருமயம் அருகே உள்ள இராராபுரம் என்ற ஊரில் இருக்கும் திருவேட்டை அழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அப்போது அங்கு அர்ஜுன் மற்றும் தம்பி ராமையாவிற்க்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது.

அதற்குப் பிறகு அர்ஜுன் குடும்பத்தினர் கோவில் பக்கத்தில் இருந்து அரசு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்று இருக்கின்றனர். அங்கு தம்பி ராமையா, ‌ "இன்னாசெய் தாரை ஒருத்தல் அவர்நாண நன்னையஞ் செய்துவிடல்".. என்ற ஒரு திருக்குறள் சொல்லி குழந்தைகளுக்கு குட்டி கதை சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+