அர்னாவ் பணத்திற்காக பல பெண்களோடு தொடர்பு..ஆதாரத்தை வெளியிட்ட மனைவியான நடிகை திவ்யா
சென்னை: சின்னத்திரை நடிகையான திவ்யா தனது கணவரை பற்றி பரபரப்பான ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
பல பெண்களிடம் பணத்திற்காக அர்னாவ் பழகி இருப்பதாக குற்றச்சாட்டுகளை புதியதாக வைத்துள்ளார்.
வெளிநாட்டு பெண் ஒருவர் அர்னாவ் பற்றிய ரகசியங்களை தற்போது தான் கூறியதாக திவ்யா கூறியுள்ளார்.

சில மாதங்களில் குழப்பம்
சமூக வலைத்தளத்தில் சின்னத்திரை நடிகர்களான அர்னாவ் மற்றும் திவ்யா இவர்களுடைய குடும்ப பிரச்சனை தான் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் சீரியல்கள் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமாக இருக்கும் நேரத்தில் கணவன், மனைவியாக வாழ்க்கையை தொடங்கி ஒரு சில மாதங்களில் இவர்களுடைய குடும்ப வாழ்க்கை சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

காதல் திருமணம்
கணவன் மனைவியாக இருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னாவ் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளையும், ஆதாரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இவர்களில் யார் கூறுவது உண்மை என்று கணிக்க முடியாத வகையில் இருந்து வருவதாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கேளடி கண்மணி சீரியலில் மூலமாக தமிழ் சீரியலில் அறிமுகமான திவ்யா அதே சீரியலில் அவரோடு நடித்த அர்னாவ்வை காதலித்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் திருமணம் செய்து உள்ளாராம். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்துள்ளனர்.

பூதாகரமான பிரச்சனைகள்
செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் அர்னாவ் .இவருடைய நிஜ பெயர் நைனா முகமது. இவருக்காக திவ்யா முஸ்லிம் மதத்திற்கு மாறி தான் திருமணம் செய்துள்ளார். 5 வருடங்கள் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் பெரியதாக எடுத்துக் கொள்ளப்படாமல் இருந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகு தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் பழைய பிரச்சனைகள் ஒவ்வொன்றும் இப்போது பூதாகரமாக பார்க்கப்பட்டு வருகிறது. திவ்யா தன்னுடைய கணவருக்கு அவரோடு சீரியலில் நடிக்கும் நடிகையுடன் தவறான பழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

இது புது குற்றச்சாட்டு
திவ்யாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அர்னாவ் திவ்யா தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடைய குழந்தையை தன்னிடம் திருமணத்திற்கு பிறகு தான் தன் குழந்தை என்று கூறியதாகவும், இவர்கள் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது திவ்யா விவாகரத்து வாங்கவில்லை என்று பல்வேறு குற்றசாட்டுகளை கூறியிருந்தார் .இந்த நிலையில் திவ்யா தற்போது அர்னாவ்வுக்கு ஏற்கனவே பல பெண்களோடு தொடர்பு இருந்திருக்கிறது. அதுவும் ஒரு பெண் அர்னாவ் பணம் வாங்கி தன்னை ஏமாற்றி விட்டதாக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் மலேசியாவில் இருக்கும் ஒரு பெண்ணும் இவரும் காதலித்து பிரிந்து பிறகு பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தற்போது அந்த பெண் திவ்யாவிடம் ஆதாரங்களை கொடுத்திருப்பதாகவும் திவ்யா பரபரப்பாக ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications