நடிகர் டெல்லி கணேஷுக்கு இருந்த மிகப்பெரிய வருத்தம்.. கடைசி வரை நடக்கலையே!
சென்னை: நடிகர் டெல்லி கணேஷ்னுக்கு 81 வயது இருந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு திடீரென உயிரிழந்தார். சினிமாக்களில் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்திருக்கும் டெல்லி கணேஷ் தனக்கு இருந்த மிகப்பெரிய வருத்தம் குறித்து விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
டெல்லி கணேஷ் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பல வருடங்களாக சினிமாவில் நிலைத்திருந்தார். ஆனாலும் தமிழ் சினிமாவில் விருது வழங்குபவர்கள் யாரும் தன்னை போன்ற நடிகர்களை கண்டு கொள்வதில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

ஒரு சிலருக்கு திறமை இருந்தாலும் அதற்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதுபோன்றுதான் டெல்லி கணேஷ் வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது. அவர் ஆரம்பத்தில் பத்து வருடங்களாக விமானப்படையில் வேலை பார்த்திருக்கிறார்.
அதிலும் 1965 வது காலகட்டத்தில் இந்திய சீனா போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கூட விமானப்படையில் அவர் பணியாற்றி இருந்தார். இதனால் தான் அவருக்கு டெல்லி கணேஷ் என்ற பெயரே வந்தது. டெல்லி கணேஷின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தான். அவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமானது பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான்.
அதற்கு பிறகு பெரும்பாலான படங்களில் நகைச்சுவை கேரக்டராகவும், துணை நடிகராகவும் நடித்திருப்பார். ஆனால் அபூர்வ சகோதரர்கள் என்று திரைப்படத்தில் தான் இவர் வில்லனாக நடித்திருந்தார். அது மட்டும் அல்லாமல் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி, சங்கமம் என்று பல திரைப்படங்களில் இவருடைய கேரக்டர் மற்றும் நடிப்பு பார்க்கும் ரசிகர்களை இப்போதும் பிரமிக்க வைக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் ஒரு யதார்த்தமான அப்பாவாக நடித்திருப்பார். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம், கஸ்தூரி போன்ற சீரியலில் நடித்திருந்தார். அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் மாரியின் தாத்தா நீலகண்டன் கேரக்டரில் நடித்து வந்தார்.
ஆரம்பத்தில் மர்மதேசம், பொறந்த வீடா புகுந்த வீடா, செல்லமே, வீட்டுக்கு வீடு லூட்டி, மனிதர்கள், திருப்பாவை, ஆஹா மனைவி, பல்லாங்குழி என்று பல சீரியல்களில் நடித்திருந்தார். இத்தனை சீரியல்கள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு நிகழ்ச்சியில் இவர் வருத்தமாக பேசிய வீடியோ இப்போது அவர் மறைந்த பிறகு வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசுகையில் பொதுவாக என்னை எந்த விருது விழாவிற்கும் யாரும் அழைத்தது கிடையாது. எனக்கு விருது வழங்கியதும் கிடையாது. ஏனென்றால் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களை யாரும் மதிப்பதில்லை. இதை சொன்னால் யாரும் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.
மலையாள சினிமா உலகில் குணச்சித்திர நடிகர்களை கௌரவிப்பார்கள். ஆனால் இங்கு எங்களை விருது விழாவிற்கு கூட அழைக்க மாட்டார்கள் என்று அந்த தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications