நடிகர் டெல்லி கணேஷ் ஞாபகம் இருக்கிறதா?அவருக்கு இப்படி ஒரு வருத்தமா?உருக்கமாக சொன்ன காரணம்
சென்னை: வெள்ளி திரையிலும், சின்ன திரையிலும் நடித்துக் கொண்டிருக்கும் டெல்லி கணேஷ் விருது வழங்கும் விழாவில் வருத்தமாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இருக்கும் டெல்லி கணேஷ் தங்களை விருது வழங்குபவர்கள் யாரும் கண்டு கொள்வது இல்லை என்று கூறி இருக்கிறார்.

நடிகர் டெல்லி கணேஷ் முன்னணி குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார். காமெடி, வில்லத்தனம் என பன்முக திறமையில் கலக்கி கொண்டிருப்பவர் தான், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக்கூடியவர்தான். இவர் இவர் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தானாம்.
இவர் இதுவரைக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தட்சிண பாரத நாடக சபா எனப்படும் தில்லி நாடக குழுவில் ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் டெல்லி கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன்பு 1964 முதல் 1974 ஆம் ஆண்டு வரைக்கும் இந்திய வான்படையில் பணியாற்றி இருக்கிறார்.
டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் தான். இந்த திரைப்படத்தில் இவரை அறிமுகம் செய்தவர் கே.பாலச்சந்தர். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதா பாத்திரங்கள் நகைச்சுவையாகவும், துணை நடிகராகவும் இருந்தது. இவர் அபூர்வ சகோதரர்கள் போன்ற திரைப்படங்களில் தான் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் குணசித்திர வேடங்களில் மனம் கவர்ந்த பல படங்கள் இருக்கின்றது. அதில் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி, சங்கமம் என்று பல திரைப்படங்கள் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்திலோ ஒரு யதார்த்தமான கதாபாத்திரத்தை வெளிக்காட்டி இருப்பார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம், கஸ்தூரி போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது கூட ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் மாரி தாத்தாவாக நீலகண்டன் கேரக்டரில் நடித்து வருகிறார்அது மட்டுமல்லாமல் மர்மதேசம், பொறந்த வீடா புகுந்த வீடா, செல்லமே, வீட்டுக்கு வீடு லூட்டி, மனிதர்கள், திருப்பாவை, ஆஹா, மனைவி, பல்லாங்குழி என பல சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தனுக்கு தமிழில் மழலை பட்டாளம் என்ற திரைப்படத்தில் இவர்தான் குரல் கொடுத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சிரஞ்சீவி, பிரதாப் போத்தன் போன்றவருக்கும் இவர் குரல் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் டெல்லி கணேஷிற்கு ஒரு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் பொதுவாக என்னை எந்த விருது விழாவிற்கு யாரும் அழைத்தது கிடையாது. எனக்கு விருது வழங்கியதும் கிடையாது. ஏனென்றால் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களை யாரும் மதிப்பதில்லை.
இதை சொன்னால் யாரும் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. மலையாள சினிமா உலகில் குணசித்திர நடிகர்களை கௌரவிப்பார்கள். ஆனால் இங்கே எங்களை விருது விழாவிற்கு அழைக்க கூட மாட்டார்கள் என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications