மனோஜை, பாரதிராஜா அடிச்சுட்டாரு! சூட்டிங் ஸ்பாட்டில் அப்படி சொல்லி அழுதாரு! மறக்க முடியல! ஜோ மல்லூரி உருக்கம்
சென்னை: இயக்குனரும் நடிகருமான பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த இரண்டு நாட்களுக்கும் முன்பு மாரடைப்பின் காரணமாக காலமானார். அவருடைய நினைவுகள் பற்றி அவருடன் பழகியவர்கள் பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் ஜோ மல்லூரி பாரதிராஜா மற்றும் மனோஜ் இருவருக்கும் இடையில் இருந்த பாசம் பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்களை கதாநாயகர்களாக அறிமுகம் செய்த பெருமை பாரதிராஜாவையே சேரும். பல வருடங்களாகவே இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று இருக்கும் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இயக்குனராக வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த மனோஜ் பாரதிராஜா கடந்த வருடத்தில் மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய இயக்குனர் கனவை நிறைவேற்றி இருந்தார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

நடிகர் ஜோ மல்லூரி பேட்டி
மீண்டும் தான் புதிய ஒரு திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்தார். ஆனால் காலம் அவர் உயிரை 48 வயதிலேயே இந்த உலகத்தில் இருந்து பிரிந்துவிட்டது. இது குறித்து நடிகர் ஜோ மல்லூரி உருக்கமாக பேசியிருந்தார். அதில் நான் பல வருடங்களாக பாரதிராஜா சாருடன் பயணிக்கிறேன். பாரதிராஜா சாரை பொருத்தவரையில் அவருடைய மகன் தான் அவருக்கு எல்லாமே.
மகனை அடித்த பாரதிராஜா
இருவருக்கும் எல்லார் வீட்டில் வருவது போல சில கருத்து வேறுபாடுகள் வந்திருக்கிறது. ஆனால் தன்னுடைய மகன்தான் என்னுடைய உலகம் என்று சொல்லுவார். பொம்மலாட்டம் படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது பாரதிராஜா சார் மனோஜ்க்கு போன் பண்ணி அவனை இங்க வர சொல்லுடான்னு சொன்னாரு. நான் என்னன்னு கேட்டேன். வீட்டில் வைத்து சின்ன பிரச்சனைக்கு அவனை அடித்துவிட்டேன் அவன் எதிர்த்து கூட என்னை பேசவில்லை.
பாரதிராஜா வருத்தம்
நான் அடிப்பதை தடுக்க கூட செய்யவில்லை. அப்படியே நின்று கொண்டிருந்தான். எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு என்று சொல்லி வருத்தப்பட்டார். பாரதிராஜா சார் எந்த விஷயமாக இருந்தாலும் பர்ஃபெக்ட்டா இருக்க வேண்டும் என்று நினைப்பாரு. அது அப்படி நடக்காத போது எமோஷனலாகி டென்ஷனாகி விடுவாரு. அதுபோலத்தான் தன்னுடைய மகனையும் அடித்திருக்கிறார்.
யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது
ஆனால் பிறகு அது அவருக்கு வருத்தத்தை கொடுத்திருந்தது. அதுபோல கடந்த ரெண்டு வருஷமா மனோஜ் தான் பாரதிராஜா சாரை கண்ணுக்குள் வைத்து பாதுகாத்துக் கொண்டு வந்தார். பாரதிராஜா சாருக்கு எல்லா வேலைகளையும் மனோஜ் தான் பார்த்துக் கொண்டார். யார் பாரதிராஜா சாரை பார்க்க வேண்டும் என்றால் மனோஜ் அனுமதி இருந்தால் தான் முடியும்.
மகன்தான் உசுரு
இப்படி இரண்டு வருடங்களாக அவரை பொத்தி பொத்தி பார்த்துவிட்டு இப்போது திடீர்னு இந்த உலகத்தை விட்டு போயிட்டாருன்னு சொன்னபோது அவரால் அதை புரிஞ்சிக்க கூட முடியல. அவருக்கு இப்போ வயது மூப்பு, உடல்நிலை பிரச்சனை நடக்கக்கூட முடியல என பல கஷ்டங்கள் இருக்கிறது. இந்த நேரத்தில் மகனின் இழப்பு அவருக்கு பெரிய வலி. அவரை எப்படி நாங்க பேஸ் பண்ண போறோம்னு தெரியல. மனோஜ் மற்றும் பாரதிராஜா இரண்டு பேருக்கும் ரொம்ப பாண்டிங் உண்டு. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மகன் மேல தான் உசுரா இருந்தாரு, என ஜோ மல்லூரி உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications