Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் கையால நானே எலி மருந்து கொடுத்தேன்! அந்த பார்வை கொன்னுடுச்சு.. கண் கலங்கிய நடிகர் காளி வெங்கட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் காளி வெங்கட் நடித்த அலுங்கு திரைப்படத்தின் பிரமோஷனில் பேசும் போது தன்னுடைய உறவினர் வீட்டில் வளர்த்த நாய்க்கு தான் எலி மருந்து கலந்த உணவை என் கையால் கொடுத்தேன் என்றும் அப்போது நடந்த சம்பவம் குறித்தும் கண்கலங்க பேசியிருக்கிறார்.

ஒரு சில நடிகர்கள் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டர் ஆகவே வாழ்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் நடிகர் காளி வெங்கட் தான் நடிக்கும் திரைப்படங்கள் மூலமாக அதிகமாக மக்களை கவர்ந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் அவர் நடித்த தங்கபுள்ள... என்ற வசனம் பெரிய அளவில் பேசப்பட்டு ட்ரெண்டானது.

kali venkat

அதுபோல சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்திலும் யதார்த்தமாகவும் நம்முடைய பக்கத்து வீட்டு நபர் போலவும் இயல்பாக நடித்திருந்தார். சமீபத்தில் அவர் அலுங்கு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்திற்கான பிரமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை கண்கலங்க பேசியிருக்கிறார்

அதில் என்னுடைய பெரியப்பா வீட்டில் ஒரு நாய் வளர்த்து வந்தாங்க. அதற்கு பெயர் கருப்பன் என்று வைத்திருந்தாங்க. அந்த நாய் ரொம்பவும் கருப்பா இருக்கும் இருட்டில் படுத்திருந்தால் யாருக்கும் தெரியாது. அந்த நாய்க்கு என்னை ரொம்ப பிடிக்கும் எனக்கும் நாய் என்றால் பிடிக்கும். ஆனால் என்னுடைய அப்பா வீட்டில் நாய் வளர்க்க சம்மதிக்க மாட்டார்.

பெரியப்பா வீட்டில் வளர்த்த அந்த நாய் என்னிடம் நல்ல அன்பா இருந்தது. ஒரு முறை அந்த நாய்க்கு திடீரென்று மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. ஊரில் 10, 15 பேரை கடித்துவிட்டது. அதனால் ஊர்காரர்கள் எல்லோரும் அந்த நாயை கொன்றுவிட வேண்டும் என்று கோபத்தோடு இருந்தார்கள்.

அந்த நாய் பக்கத்தில் கூட யாராலும் போக முடியவில்லை. நாய் பிடிப்பதற்காக கார்ப்பரேஷனில் இருந்து வந்தவர்களையும் நாய் பக்கத்தில் விடவில்லை. இதனால் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னை கூப்பிட்டு என்கிட்ட பேசினாங்க, நான் பக்கத்தில் போனால் மட்டும் அந்த நாய் எதுவும் செய்யவில்லை என்பதால் அவங்க நாங்க எலி பேஸ்ட் தடவுன சாப்பாடு தறோம் அது அந்த நாய்க்கு கொடுத்துடு என்று சொன்னாங்க.

நான் மறுக்கிற நிலைமையில் இல்ல. காரணம் ஊரில் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு. அதோடு அந்த நாயால் பலர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. பிறகு வேற வழி இல்லாம எலி பேஸ்ட் கலந்த இட்லியை கொடுத்துட்டேன். அந்த நாயும் சாப்பிட்டுவிட்டு என்னை ஒரு பார்வை பார்த்தது.

அந்த பார்வை என்னை கொன்னுடுச்சு. அந்த நாய்க்கு மருந்து கொடுக்கும்போது ஊரிலிருந்து எல்லார் வீட்டிலிருந்த தண்ணீரையும் மூடி வச்சுட்டாங்க. காரணம் அந்த எலி பேஸ்ட் சாப்டுட்டு தண்ணி குடிச்சா பொழச்சிக்குவாங்கலாம் அதனால் மூடி வைத்திருந்தார்கள். ஆனால் நாய் எலி பெஸ்ட் சாப்பிட்டதும் ஊரை விட்டு எப்படியோ ஓடிப்போய் ஊருக்கு வெளியே இருந்த குளத்தில் தண்ணீர் குடித்துவிட்டது. அதனால் நாய் உயிர் பிழைத்து விட்டது.

எனக்கு அது உண்மையில் நிம்மதியாக இருந்தது. நம்ம கையால் ஒரு உயிர் போகவில்லையே என்று சந்தோசப்பட்டேன். பிறகு வீட்டில் வந்து சொன்னதும் வீட்டில் எங்க அப்பா எல்லாரும் என்னை ரொம்ப திட்டுனாங்க. எக்காரணம் கொண்டும் நீ இப்படி செஞ்சிருக்க கூடாது, ஒரு உயிரை எடுக்கும் உரிமை உனக்கு யார் தந்தா.. அது பெரிய பாவம் என்று திட்டினாங்க.

ஆனால் இப்போ வரைக்கும் அந்த நாய் என் கண்ணுக்குள் அடிக்கடி வரும். அதேபோலத்தான் இந்த அலுங்கு திரைப்படத்திலும் சில காட்சிகள் மனதிற்கு நெருக்கமாகவும் என்னால் மறக்க முடியாத வகையில் இருக்கிறது என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+