படம் ரிலீஸ் அன்றே காதலியை கரம் பிடித்த நடிகர் கிஷன் தாஸ்.. ஆனந்தம் சீரியல் நடிகையின் மகன்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கிஷன் தாஸ் தன்னுடைய தோழியான சுச்சித்ராவை திருமணம் செய்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகர் கிஷன் தாஸ் சீரியல் நடிகையான பிருந்தா தாஸின் மகன் தான். கிஷன் தாஷுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் அபிராமியாக நடித்த நடிகை பிருந்தா தாஸின் மகனான கிஷன் தாஸ் தமிழில் முதலும் நீ முடிவும் நீ என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் பிரபலமானார். அதை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை, சிங்க், சிங்கப்பூர் சலூன் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

sun tv brinda das kisan das

கிஷன் தாஸ் நடித்த தருணம் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளிவராமல் தள்ளிப்போனது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை படக்குழுவினர் ஜனவரி 31ஆம் தேதி வெளியிட முடிவு செய்தனர். படக்குழுவினர் திட்டமிட்டபடி இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது.

கிஷன் தாஸ்க்கு அதனால் இன்று ஸ்பெஷலான நாள். அதோடு இன்று இன்னொரு ஸ்பெஷலும் அவருடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது. அதாவது திருமணம் நடைபெற்று இருக்கிறது. தனது தோழியான சுச்சித்ராவை திருமணம் செய்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் கிஷன் தாஸ் அறிவித்திருந்தார். இன்று இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கிஷன் தாஸ் அம்மாவான நடிகை பிருந்தா தாஸ் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

பிருந்தாவை ஆனந்தம் சீரியல் மூலமாக தான் பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே அவர் டிடி மெட்ரோவில் ஒளிபரப்பான நம் குடும்பம் என்ற சீரியலில் நடித்திருந்தார். அதோடு நடிகையாக மட்டுமல்லாமல் அவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட. அதுபோல டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சினிமா தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல துறைகளில் சிறந்து விளங்கிய பிருந்தா தாஸ்க்கு ஆனந்தம் சீரியலில் வில்லி கேரக்டர் தான் இப்ப வரைக்கும் அடையாளமாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் சின்னத்திரை மற்றும் சினிமா என பிஸியாக இருந்த பிருந்தா தாஸ்

நடிப்பில் இருந்து விலகி ஹாய் டா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் வரிசையிலும் இணைந்து இருந்தார். அந்த திரைப்படத்தில் பலருக்கும் பரீட்சையமான பல சின்னத்திரை நடிகர்களை நடிக்க வைத்திருந்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஆனால் அதற்கு தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனத்திலும் பிருந்தா வேலை செய்திருந்தார். சிங்கிள் மதர் ஆக தன்னுடைய மகனை வளர்த்து வந்த பிருந்தா தாஸ் இன்று தன்னுடைய மகனின் திருமணத்திற்கு மகிழ்ச்சியோடு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+