முகத்தில் “சிறுநீர்”.. மாரி செல்வராஜ் வாழ்க்கையிலும்.. ஒரு மிருகம் போல.."எதிர்நீச்சல்” குணசேகரன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர் மாரிமுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றி பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் நடிகர் மாரிமுத்து பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடிக்கும் போது நடந்த நிகழ்வுகள் மற்றும் மாரி செல்வராஜ் நடந்து கொண்ட விதத்தைப் பற்றியும் பேசி இருக்கிறார்.
அப்போது அந்த திரைப்படத்தில் கதாநாயகனை அடித்து முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்துவது நிஜத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்தது என்று நடிகர் மாரிமுத்து கூறியிருக்கிறார்.
பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் மாரிமுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து மிரட்டி கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் இவருடைய அறிமுகம் முதல் முறையாக இருந்தாலும் முதல் சீரியலிலே இவருக்கு அதிகமான வரவேற்பும் இவருக்கு தகுந்த கேரக்டரும் கிடைத்திருக்கிறது.

அந்த வகையில் இவரை மாரிமுத்து என்று சொல்வதை விடவும் குணசேகரன் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரிகிறது. அந்த அளவிற்கு பிரபலம் அடைந்திருக்கும் இவர் தற்போது இவர் நடித்த "பரியேறும் பெருமாள்" திரைப்படம் பற்றியும் அதில் இயக்குனராக இருந்த மாரி செல்வராஜ் பற்றியும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதாநாயகன் ஆன கதிரை அடித்து அவமானப்படுத்தும் காட்சிக்கு எப்படி மனரீதியாக தயாரானீங்க என்ற கேள்விக்கு, மாரிமுத்து "அந்த காட்சியை எடுக்கும் போது மட்டும் இயக்குனர் ஒரு மிருகம் போல இருந்தார்". தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் கருங்குளம் என்ற ஊரில் திருநெல்வேலிக்கு அருகில் தான் அந்த காட்சி எடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அந்த காட்சி எடுக்கும் போது அனைவரையுமே மாரி செல்வராஜை திட்டி கொண்டு ரொம்பவும் கோபமாக இருந்தார். நான் எதற்காக இவ்வளவு கோபம்? ஏன் என்னாச்சுன்னு கேட்டேன். அதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் சொன்ன வார்த்தை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன்னா, இல்ல சார் இந்த காட்சி என்னோட உண்மையான வாழ்க்கையிலே நடந்திருக்கு என்று கூறினார்.
அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். இவரும் இந்த படத்தில் வருவது போல காதலி வீட்டுக்கு சென்று அவமானப்பட்டு இருக்கிறார் என்று, இதனை தொடர்ந்து தான் நானும் அந்த காட்சியில் நன்றாக நடிக்க வேண்டும் என்று உணர்ந்து நடித்திருந்தேன் என்று அந்த பேட்டியில் மாரிமுத்து கூறி இருக்கிறார்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications