Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முரளி காதலுக்கும் குஷி படத்திற்கும் இப்படி ஒரு சம்பந்தமா? 4 வாரத்தில் அதிசயம்! உண்மை காதல் ஜெயித்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் முரளி பல திரைப்படங்களில் தன்னுடைய காதலை சொல்லாமலையே பலரையும் பீல் பண்ண வைத்திருப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவருடைய காதல் எப்படி கைகூடியது என்ற சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதோடு நடிகர் முரளிக்கும் குஷி திரைப்படத்திற்கும் அதிகமான ஒற்றுமை இருக்கிறதாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

80ஸ் 90 காலகட்டத்தில் வெளியான பல திரைப்படங்கள் இப்போதும் மக்கள் மனதில் பசுமையான நினைவுகளை உருவாக்கி இருக்கும். அதிலும் குறிப்பிட்ட சில நடிகர்களை அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாத அளவிற்கு மக்கள் மனதில் இடத்தை பிடித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் முரளி. கருப்பாக இருந்தாலும் களையாக முரளி போல இருக்க வேண்டும் என்று பலர் சொல்லும் வகையில் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போன்று இருக்கும் முரளி ஆரம்பமான பூவிலங்கு திரைப்படத்திலிருந்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

Television Murali Entertainment

அதிலும் அவர் நடித்த பல படங்களை யாராலும் மறந்து விட முடியாது. அதிலும் இதயம் திரைப்படம் பெரிய அளவில் இப்போதுள்ள ரசிகர்களையும் வியக்க வைத்த திரைப்படம். கதாநாயகியை ஒருதலையாக காதலித்து தன்னுடைய காதலை கடைசி வரைக்கும் சொல்லாமல் தனக்குள்ளையே புதைத்து வைத்து பலரையும் பீல் பண்ண வைத்த முரளி அதிகமாக தான் நடிக்கும் படங்களில் மைக்கில் பாடுவது போன்ற காட்சிகள் இருக்கும்.

துடிதுடிக்க போன உயிர்.. முதுகெல்லாம் கொப்புளம்.. ஏமாற்றி தப்பிச்சி ஓடி வந்தேன்! மதுரை முத்து எமோஷனல்
அதிலும் அவர் நடித்த "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா", "வெண்ணிலவே வெண்ணிலவே" போன்ற பாடல்கள் உண்மையிலே இவர்தான் பாடுகிறாரா என்று சந்தேகப்பட வைத்திருக்கும். மைக் மோகனுக்கு எப்படி மைக் அடையாளமோ அதுபோல இவருக்கும் மைக்கில் பாடுவது போல பல பாடலில் நடித்திருக்கிறார். முரளிக்கு பூவிலங்கு படம் முதல் படமாக இருந்தாலும் அவருக்கு விக்ரமனின் முதல் படமான புது வசந்தம் திரைப்படம் முரளிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொடுத்தது.

காதலுக்கு பெயர் போன நடிகர் என்ற அடையாளத்தை முரளி பெற்றிருந்தார். அதுபோல தான் கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லாமல் பிற நடிகர்களோடும் இவர் சேர்ந்து நடித்திருந்தார். இப்படிப்பட்ட முரளியின் காதல் கதை பலருக்கும் தெரிந்திருக்காது. அவருடைய காதல் கதையும் குஷி படத்தில் கதையும் கிட்டத்தட்ட ஒத்துப் போகும் வகையில்தான் இருந்திருக்கிறது.

குஷி திரைப்பட ரிலீஸ் தேதியும், முரளியின் பிறந்த நாளும் ஒரே நாள் தான். அது போல நடிகர் முரளியும் அவருடைய மனைவி ஷோபாவையும் ரியல் லைஃப் குஷி ஜோடி என்று தான் அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூப்பிடுவார்களாம். நடிகர் முரளிக்கு கந்தா என்ற ஒரு நண்பர் இருந்திருக்கிறார். அவருடைய காதலுக்கு உதவும் போது தான் முதன் முதலாக ஷோபாவை சந்தித்தாராம்.

கந்தாவும் அவருடைய காதலியும் சந்திக்கும்போது கந்தாவிற்கு துணையாக முரளியும் கந்தாவின் காதலிக்கு துணையாக ஷோபாவும் வந்திருக்கிறார்கள். காதல் ஜோடி இருவரும் சந்திக்கும்போது ஷோபா மற்றும் முரளி இருவரும் அவர்களுக்கு துணையாக போவார்களாம். பிறகு அவர்கள் சந்திக்கும் நேரத்தில் இவர்கள் காத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் நட்பாக தொடங்கி பிறகு அந்த நட்பு காதலாக மாறியிருக்கிறது. குஷி படத்தில் எப்படி விஜய் மற்றும் ஜோதிகா நண்பர்களின் காதலை சேர்த்து வைக்க போய் பிறகு இவர்கள் காதலிப்பார்களோ அதுபோலத்தான் ரியல் லைப்பில் முரளி மற்றும் ஷோபாவின் காதலும் கைகூடி இருக்கிறது. சினிமாவில் தான் முரளி கூச்ச சுபாவம் உள்ளவராக இதயம் படத்தில் போல காதலை சொல்லாமல் தனக்குள்ளையே வைத்தவராக நடித்திருந்தாலும் நிஜத்தில் தான் காதலிக்க தொடங்கி 4 வாரத்தில் தன்னுடைய காதலை ஷோபாவிடம் சொல்லிவிட்டாராம்.

ஆனால் நாம் நிறம் குறைவாக இருப்பதால் நம்முடைய காதலை ஷோபா ஏற்றுக் கொள்வாரா? இல்லையா? என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்த முரளிக்கு ஷோபா தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டது தன்னுடைய கனவே நினைவானது போல இருந்திருக்கிறது. ஆனாலும் முரளிக்கு இன்னொரு பிரச்சனை வந்திருக்கிறது.

அதாவது முரளியின் தந்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்த சித்தலிங்கையாவிற்க்கு தன்னுடைய மகனுக்கு சின்ன வயதிலேயே கல்யாணத்தை முடித்து விட்டால் சினிமா வாய்ப்பை அது பாதிக்கும் என்று நினைத்து தன்னுடைய மகன் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவே இல்லையாம்.

ஆனால் முரளியின் அம்மா இவர்கள் இருவருடைய திருமணத்தில் உறுதியாக இருந்து அவரே அவர்களுடைய திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். தன்னுடைய மகனுக்கு காலையில் திருமணம் முடிந்த விஷயம் இரவு எட்டு மணிக்கு மேல்தான் தெரிய வந்ததாம்.

அது போல முரளிக்கு அதர்வா ஆகாஷ் என்று இரண்டு மகன்களும் காவியா என்ற மகளும் இருக்கிறார்கள். ஆனால் முரளி 2010 ஆம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய 48வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+