ஜப்பானை விட்டு திடீரென கிளம்பிய நடிகர் நெப்போலியன் குடும்பம்.. வெளியான வீடியோ.. குவியும் பாராட்டு
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் ஜப்பானில் வைத்து நடைபெற்ற நிலையில் அதற்கு பிறகு மூன்று மாதங்களாக ஜப்பானிலே குடும்பத்தோடு வசித்து வந்த நெப்போலியன் இப்போது ஜப்பானில் இருந்து குடும்பத்தோடு வெளிவந்து இருக்கிறார். அவர் இப்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்ட விஷயங்களில் நடிகர் நெப்போலியன் வீட்டு திருமண விஷயமும் ஒன்று. நெப்போலியன் மூத்த மகன் தனுஷுக்கு திருமணம் நடக்கப்போகிறது என்ற செய்தி வெளியானதும் அது குறித்து பலர் கருத்து தெரிவித்து வந்தனர். சிலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

நெப்போலியன் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். 80ஸ் காலகட்டத்தின் இறுதியில் நடிக தொடங்கிய நெப்போலியன் இப்போது வரைக்கும் சினிமாவில் தொடர்கிறார். ஆனால் சில வருடங்களாக அவர் அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை.
ஆரம்பத்தில் வில்லனாக சினிமாவில் அறிமுகமான நெப்போலியன் அதற்குப் பிறகு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அதுபோல சின்ன வயதிலேயே அதிக வயது உடைய வில்லனாக தான் நெப்போலியன் அதிகமான படங்களில் நடித்திருந்தார்.

நடிகராக மட்டுமல்லாமல் நெப்போலியன் அரசியல் பிரமுகராகவும் பிரபலமடைந்திருக்கிறார். தன்னுடைய மாமாவான அமைச்சர் நேருவிடம் உதவியாளராக இருந்து பிறகு எம்எல்ஏவாக பணியாற்றி இருக்கிறார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். ஆனால் சினிமா மற்றும் அரசியல் என எல்லாவற்றையும் தன்னுடைய குடும்பத்திற்காக விட்டு விலகி இப்போது குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.
அதுபோல நெப்போலியனின் மூத்த மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் ஆசைப்பட்டபடி ஜப்பானுக்கு சுற்றுலா செல்வதற்காக நெப்போலியன் ஏற்பாடுகள் செய்திருந்த போது அவருக்கு அங்கே வைத்து திருமணமும் நடைபெற்று இருக்கிறது.
நெப்போலியன் மருமகள் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சார்ந்த பெண் தான். திருநெல்வேலி வழக்கப்படி திருமணம் பெண் வீட்டில் வைத்து நடக்கும், என்றாலும் மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் மணப்பெண் வீட்டினர் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து திருமணமும் நடைபெற்றது.

திருமணம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்ற போது அதில் பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கொடுத்த பேட்டி இணையத்தில் அதிகமாக வைரல் ஆனது. அதுபோல திருமணத்திற்கு பிறகு நெப்போலியன் குடும்பத்தினர் மூன்று மாதங்களாக ஜப்பானில் தான் தங்கி வசித்து வந்தனர். இப்போது அங்கிருந்து மீண்டும் கடல் வழி பயணமாக அமெரிக்காவிற்கு நாடு திரும்புகிறார்கள்.
ஆனால் அதற்கு முன்பு குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு சென்றிருக்கின்றனர். அப்போது நேற்று தைப்பூசம் என்பதால் சிங்கப்பூர் முருகன் கோவிலில் நெப்போலியன் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெப்போலியன் தன்னுடைய மகனின் சந்தோஷத்திற்காக பார்த்து பார்த்து செய்வதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications