Good Bad Ugly: அஜித் படம் வெளியான நாளில், பிரசன்னா போட்ட உருக்கமான போஸ்ட்.. குவியும் பாராட்டு
சென்னை : நடிகர் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று ஏப்ரல் 10 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் பிரசன்னா அஜித் குறித்து நெகிழ்ச்சியாக போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அது இணையத்தில் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி திரைப்படத்தை அதிகமாக எதிர்பார்த்து இருந்தனர். இந்த திரைப்படத்தின் வித்தியாசமான ட்ரெய்லர் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. அதற்கு பிறகு திரைப்படத்தில் என்ன மாதிரி கதை இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்த்தபடியே இன்று வெளியாகி இருக்கிறது.

அஜித் திரைப்படம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த பல நடிகர்கள் சோசியல் மீடியா பக்கங்களில் போஸ்ட் போட்டு கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் பிரசன்னாவும் அஜித் உடன் நடிக்கும் போது நடந்த சம்பவங்கள், தான் அஜித்துடன் நடிக்கப் போகிறேன் என்றபோது தனக்கு ஏற்பட்ட சந்தோசம் குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார்.
குட் பேட் அக்லி பட நடிகர்
நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும், துணைக் நடிகராகவும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை பற்றி பல்வேறு வதந்திகள் வந்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தன்னுடைய அடுத்த கட்ட
முன்னேற்றத்தை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறார்.
பிரசன்னாவின் பதிவு
இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், என்னுடைய ஆதர்ச நடிகருடன் திரையில் இடம்பெறுவதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் மிகச் சிறியதாக உள்ளது என்ற உன்னதமான மனிதருடன் செலவழித்த ஒவ்வொரு தருணத்தையும் நான் தோற்றுவேன்.
கனவு நிறைவேறியது
அஜித் சார் நான் உங்களை நேசிக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நன்றி, "இதோ ராஜா வருகிறார்" என்று அஜித்தை குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு பலர் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் பிரசன்னா குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைவது குறித்து ஆரம்பத்திலேயே ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் இந்த முறை நான் நம் அன்பான தல அஜித் குமாரின் படத்தில் ஒரு பகுதியாக இருப்பது கடைசியாக நிறைவேறி இருக்கிறது.
சறுக்கல்கள்
இது எனக்கு ஒரு கனவு நினைவாகி உள்ளது. மங்காத்தா படத்தில் இருந்து ஏகே சாரின் ஒவ்வொரு படமும் அறிவிக்கப்படும்போது நானும் அந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இது பற்றி நான் பல இடங்களில் பேசி இருக்கிறேன். அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து நீங்கள் அடுத்த படத்தில் இருப்பீர்கள் என்று ஆசீர்வதித்தார்கள். ஆனால் அந்த வார்த்தை நிஜமாகும் முன்பு பல சறுக்கல்கள் ஏற்பட்டன.
கிடைத்த வாய்ப்பு
கடைசியில் நம்முடைய நேரம் சிறப்பாக இருக்கிறது. இப்போது நான் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருக்கிறேன். இதற்கு கடவுளுக்கும் அஜித் குமார், ஆதிக் ரவிச்சந்திரன், மைத்ரி மூவிஸ், சுரேஷ் சந்திரா கடைசியாக அஜித் சார் படத்தில் என்னை பார்க்க விரும்பிய அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த வாய்ப்பு எனக்கு வந்த போது நான் உற்சாகமாக இருக்கிறேன்.
அனைவருக்கும் நன்றி
இப்போது என்னால் படத்தை பற்றி அதிகமாக சொல்ல முடியாது மன்னிக்கவும். குட் பேட் அக்லி படத்திற்கான சூட்டிங் முடித்துவிட்டேன். ஒரு விஷயத்தை மட்டும் என்னால் சொல்ல முடியும் அஜித் யார் என்பதற்காகவும், அவரை ரசிகர்கள் எதற்காக மிகவும் நேசிக்கிறார்கள் என்பதற்காகவும் இந்த படம் விளக்கம் கொடுக்கும் என்றும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

நடிகர்களின் பதிவு
இப்போது அஜித்குமாரோடு எடுத்த புகைப்படங்களையும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பிரசன்னா பகிர்ந்து இருக்கிறார்கள். நடிகர் பிரசன்னா போலவே நடிகர் அர்ஜுன் தாஷும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அஜித் படத்தில் தான் வில்லனாக நடித்த அனுபவம் மற்றும் சந்தோஷம் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications