செருப்பால் அடித்தேன்.. கெட்ட வார்த்தையில் திட்டினேன்.. வாணி - ராணி சர்ச்சை! போட்டுடைத்த பிரித்விராஜ்
சென்னை: நடிகர் பப்லு பிரித்விராஜ், வாணி ராணி சீரியலில் நடித்த அனுபவம் குறித்து அண்மையில் ஒரு விருது வழங்கும் விழாவில் பேசியுள்ளார். அந்த சீரியலில் ராதிகாவுடன் நடித்தது குறித்து அவர் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சு பெரிய அளவில் சர்ச்சையானது. அந்த கருத்துக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
வாணி ராணி அனுபவம்
பப்லு பிரித்விராஜ் பேசுகையில், "என்னுடைய நண்பர் ஒருவர் மூலமாக வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு" என்று குறிப்பிட்டார். ராதிகா பல வருடங்களாக சினிமாவில் இருப்பதால், அவரை அவ்வையார் என்று கூட சொல்லலாம் என்றும், அவருக்கு ஜோடியாக நடித்ததால் தன்னை வயதானவனாகவே மக்கள் நினைத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

அந்த சீரியல் எனக்கு கிழவன் என்கிற ஒரு பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டது. அதற்குப் பிறகு நான் சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் நடித்தேன். அந்த சீரியலிலும் அப்பா கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த சீரியலில் நடித்தது எனக்கு ஏழரை சனி போல ஆகிவிட்டது" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஓவர் ஆக்டிங் சர்ச்சை
வாணி ராணி சீரியல் சமயத்தில் தான் அடிக்கடி திட்டு வாங்கியதாகவும் பப்லு தெரிவித்தார். "அவ்வப்போது என்னை கூப்பிட்டு ஏன் ஓவர் ஆக்டிங் பண்றீங்க என்று திட்டுவார்கள். இப்படி எல்லாம் ஓவர் ஆக்டிங் செய்யாதீர்கள்.. உங்கள் மேடம் திட்டுறாங்கன்னு சொல்லுவாங்க. அதை கேட்டு நானும் கொஞ்சம் மாற்றி நடிப்பேன். அந்த சீரியல் என்னை அதிகமாக கட்டுப்படுத்தியது, அப்படி செய்யாமல் இருந்திருந்தால் நான் எனது போக்கில் நடித்திருப்பேன்.
எங்கேயும் திட்டு வாங்காம பண்ணனும் என்ற எண்ணம் அதற்கு பின்தான் எனக்கு வந்தது. அப்போது என்னை அப்படியே விட்டிருந்தால் நான் என் போக்கில் நடித்திருப்பேன். அவர்கள் அப்படி சொன்னதால் நான் அந்த வாணி ராணி சீரியல் முழுக்க அளந்து அளந்துதான் நடித்தேன் என்று பப்லு கூறினார்.
விளக்கம் அளித்த பப்லு
விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது வாணி ராணி சீரியல் குழுவினரை புண்படுத்தியிருக்கலாம் என்பதால், பின்னர் அவர் இதுகுறித்து விளக்கம் அளித்தார். ரெட்நூல் என்ற யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்கிரீனில் வாணி ராணி சீரியல் புகைப்படம் வந்ததும் அப்படி பேசிவிட்டேன். வாணி ராணி சீரியலை ஏழரை நாட்டு சனி என்று கூறிவிட்டேன். கெட்ட விஷயங்களை நினைக்க வேண்டாம் என்று கொஞ்சம் அப்படி பேசிட்டேன். அப்படி சொல்லி இருக்க கூடாது.. நான் சொல்லிவிட்டேன் என்ன செய்வது. அளந்து அளந்து நடிக்க வேண்டிய நிலை வந்ததால் அப்படி கூறிவிட்டேன்.
ஆனால் ராதிகா நல்ல நடிகை. சீனியர் நடிகை. அவர் நான் சொன்னதை பற்றியெல்லாம் தவறாக நினைக்க மாட்டார். ஆம் அவனை நான் செருப்பால் அடித்தேன்.. கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டினேன் என்பார்.. அவர் அதை பற்றி எல்லாம் யோசிக்க மாட்டார். அவர் இதை பெருமையாக நினைப்பார் அவன் அப்படி கூறினானா.. அது வைரல் ஆகிறதா? ஆகட்டும்.. அதனால் என்ன என்று சொல்லும் நபர் அவர்.. நான் சொன்னதை பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். என்று பப்லு பிரித்விராஜ் கூறினார்.
பப்லு பிரித்விராஜ் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தாலும், அது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் கூறப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications