திருமணத்திற்கு பிறகு புகழ் தனது மனைவியைப் பற்றி வெளியிட்ட நெகிழ்ச்சியான செய்தி.. பிரபலங்கள் வாழ்த்து
சென்னை: திருமணம் முடிந்து ஒரு சில நாட்களில் புகழ் தனது மனைவியைப் பற்றி நெகிழ்ச்சியான மகிழ்ச்சி செய்தியை கூறி இருக்கிறார்.
புகழ் தனது காதல் மனைவியின் மீது தனக்கு இருக்கும் காதலை இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கேப்ஷனாக வெளிகாட்டி இருக்கிறார்.
புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்ததை விடவும் தற்போது அவருடைய திருமண போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக வைரல் ஆகி அவரை பிரபலமாக்கி இருக்கிறது.

ஆரம்பத்தில் கஷ்டம் தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலமாக பலருக்கும் பிரபலமான புகழ் ஆரம்ப காலகட்டத்தில் அதிக அளவில் வாய்ப்புகளுக்காக கஷ்டப்பட்டு உள்ளார். கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த புகழ் தனக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக யாருடைய துணையும் இல்லாமல் சினிமா துறையில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் ஒவ்வொரு இடங்களிலும் வாய்ப்புக்காக பல சோதனைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஆரம்ப காலகட்டத்தில் பெண் வேடமிட்டு பலரையும் மகிழ்வித்து இருந்தாலும் அப்போது கூட புகழுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை.

உதவியை மறப்பதில்லை
எப்போதும் கஷ்டப்படுபவர்கள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டே இருக்க மாட்டார்கள், அவர்களுடைய முயற்சியும் உழைப்பும் இருந்தால் முன்னேறி காட்டுவார்கள் என்பதற்கு உதாரணமாக புகழும் இருந்து வருகிறார். ஆனால் அவர் கஷ்டப்பட்ட நேரங்களில் அவருக்கு உதவியவர்களை தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெருமையாக பேசவும் புகழ் தவறவில்லை. திரை உலகில் வடிவேலு பாலாஜி போன்ற ஒரு சிலரை தனக்கு மகிழ்ச்சியான நேரங்களில் எல்லாம் கண்ணீர் மல்க புகழ் நினைவுபடுத்தி கொண்டிருக்கிறார்.

எல்லாமே நடிப்பு தானாம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக இவர் பல நேரங்களில் பிறரிடம் அடி வாங்குவது போல நடித்துக் கொண்டிருப்பார். அப்போது கூட ஒரு சிலர் புகழ் இப்படி எல்லாம் நடிக்கிறாரா?? அல்லது உண்மையான கேரக்டரை இதுதானா?? என்று கருத்து தெரிவித்து வந்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் ஒரு முரட்டு சிங்கள் என்கிற போர்வையில் வலம் வந்த புகழ் ரம்யா பாண்டியன் தொடங்கி தர்ஷா குப்தா, பவித்ரா என பலருடனும் இம்பிரஸ் இருக்கின்ற மாதிரி பலருக்கும் என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இவரை பல ரசிகர்கள் முரட்டு சிங்கிள் என்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம்.

நெகிழ்ச்சியான வார்த்தை
புகழ் தற்போது வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நாயகனாகவும், காமெடி நடிகராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் தான் ஒரு பெண்ணை காதலிக்கும் விஷயத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். தற்போது அதே பெண்ணை காதலித்து திருமணமும் செய்து இருக்கிறார். புகழின் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. தற்போது திருமணத்திற்கு பிறகு புகழ் தனது காதல் மனைவியான பென்சியாவை, "நான் கஷ்டப்பட்ட நேரத்தில் இஷ்டப்பட்டு வந்தவள்...என் அவள், இப்போது என்னவள் காதல் வென்றது" என்றும் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும்.!!!! ஆக இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். புகழின் இந்த போஸ்ட் பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கும்போது பிரபலங்கள் பலரும் அவருக்கு ஹார்ட்டின்களை அனுப்பி வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications