Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ்கிரண் திடீரென வெளியிட்ட கடிதம்..! மகளுக்காக எடுத்த முயற்சி.. ஆனால் இப்படி ஒரு பதிலடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்போதே ராஜ்கிரண் பிரியா என்னுடைய மகள் கிடையாது வளர்ப்பு மகள் தான் அதுபோல அந்த சின்னத்திரை நடிகர் பணத்திற்காக தான் என்னுடைய மகளை திருமணம் செய்து இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரியா தான் முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டேன் என்றும், ராஜ்கிரண் அப்பா தான் தனக்கு சில உதவிகளை செய்தார் என்றும் பேசி வீடியோ வெளியிட்டு ராஜ்கிரணிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த நிலையில் ராஜ்கிரண் வெளியிட்டதாக ஒரு கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முனீஸ் ராஜாவுக்கு ராஜ்கிரண் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

actor Rajkiran daughter divorce issue but he new post

அந்த வகையில் வெள்ளி திறையில் முன்னணி நடிகராக இருக்கும் ராஜ்கிரண் நடிகராகவும், இயக்குனராகவும் பலருக்கும் பரிச்சயமாகி இருக்கும் நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு அவருடைய வளர்ப்பு மகள் திடீர் திருமணம் செய்தது தான் அதிகமாக பேசப்பட்டது. அதாவது அவருடைய வளர்ப்பு மகளான பிரியா என்ற பெண் சன் டிவியில் நாதஸ்வரம் சீரியல் மூலமாக பிரபலமடைந்த முனீஸ் ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் திடீரென்று வீடியோ வெளியிட்டு இருந்தனர். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போது ராஜ்கிரண் நீண்ட விளக்கம் ஒன்று கொடுத்திருந்தார். அதாவது பிரியா என்னுடைய மகள் கிடையாது வளர்ப்பு மகள் தான் அதுபோல அந்த சின்னத்திரை நடிகர் என்னிடம் இருந்து பணம் பெறுவதற்காகத்தான் என்னுடைய பொண்ணை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்.

ஆனால் இனி எந்த இடத்திலும் என்னுடைய பெயரை என்னுடைய வளர்ப்பு மகளோ அல்லது அவருடைய கணவரோ பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரியா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தான் முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டதாகவும் தற்போது தான் தனியாகத்தான் இருந்து வருவதாகவும் தனக்கு மனரீதியாகவும், பணரீதியாகவும் உதவி செய்தது தன்னுடைய வளர்ப்பு தந்தை ராஜ்கிரண் தான் என்று அவரிடம் மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார்.

இந்த நிலையில் ராஜ்கிரண் வெளியிட்டதாக இப்போது இணையத்தில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில் பணக்கார குடும்பங்களை குறிவைத்து பணம் பறிப்பது தான் முனீஸ் ராஜா மற்றும் அவருடைய குடும்பத்தினருடைய வேலை. இந்த செயலுக்காக கொல்லிமலையில் வசியம் செய்யப்பட்ட சில மருந்துகளை வாங்கி சம்பந்தப்பட்ட பெண்களை சாப்பிட வைக்கிறார்கள்.

பிறகு அந்த பெண்கள் இவர்கள் சொல்றதுதை தான் செய்கிறார்கள். இப்படி ஏழு எட்டு பெண்கள் கிட்ட அந்த குடும்பமே பணம் பறிச்சுருக்காங்க. இதுதான் அவர்களுடைய வேலை இது தெரியாம என் பொண்ணு மாட்டிக்கிட்டு. அதுபோல அந்த பையனை என் பொண்ணு பிரிஞ்சி அஞ்சு மாசம் ஆயிடுச்சு. இப்போ என் பொண்ணை நான் தான் வீடு எடுத்து தனியா தங்க வைத்திருக்கிறேன்.

என் பொண்ணு கூட அந்த பையன் வாழனும்னு நினைக்கிறானா என் பொண்ணை ஒழுங்கா வச்சு வாழ்றவனா இருக்கணும். அதை விட்டுட்டு பணம் வாங்கிட்டு வா என்று டெய்லி அடிச்சு உதைத்து சித்திரவதை பண்றவனா இருக்க கூடாது. எல்லா வகையான கொடுமைகளையும் என் பொண்ணு கிட்ட அவன் செஞ்சிருக்கான். என் பொண்ணு கிட்ட நான் திருமணத்திற்கு முன்பே சொன்னேன்.என் எதிர்ப்பு மீறி நீங்க திருமணம் பண்றிங்க ஒரு வருஷம் அவன் உன்னை வச்சு நல்லபடியா வாழ்ந்தான்னா நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்.

இல்லனா நீ முகத்திலேயே முழிக்காதன்னு சொன்னேன். ஆனா ஆறு ஏழு மாசத்திலேயே என் பொண்ணு பிரிஞ்சு வந்துட்டா. தினமும் குடிச்சுட்டு வந்து அடிச்சதால உடல் ரீதியா என் பொண்ணு ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தா. இந்த விஷயம் ஆரம்பத்தில் எனக்கு தெரியாது. பிறகு ஒருத்தர் மூலமாக தெரிய வந்ததால் நான் அவரை மருத்துவமனையில் சேர்த்தேன் என்று அந்த பதிவில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+