Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளர்ப்பு மகளுக்காக நடிகர் ராஜ்கிரண் செய்த செயல்.. திடீரென்று வெளியிட்ட வீடியோ..குவியும் கருத்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து இருந்த நிலையில் சமீபத்தில் முனீஸ் ராஜாவை தான் பிரிந்து விட்டேன் என்று பிரியா பேசிய வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ராஜ்கிரண் தன்னுடைய மகள் பேசிய வீடியோ ஒன்றை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதே நேரத்தில் பிரியா ஆரம்பத்தில் தான் முனீஸ் ராஜாவை திருமணம் செய்ய வேண்டாம் என்று எத்தனையோ அறிவுரைகளை தன்னுடைய தந்தை ராஜ்கிரண் சொல்லியிருந்த நிலையில் தான் அதை கேட்காததால் இப்போது கஷ்டப்படுகிறேன் என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

Actor Rajkiran has shared a video of his daughters speech on his Facebook page

கடந்த 2002 ஆம் ஆண்டில் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜாவை வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்திருந்தார். அதனால் கோபமான ராஜ்கிரண் பிரியா என்னுடைய மகள் கிடையாது என்று கூறியிருந்தார். அதோடு தங்கள் பேச்சை மீறி பிரியா அந்த சின்னத்திரை நடிகரை திருமணம் செய்து இருப்பதால் இனி அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியிருந்தார்.

இதனால் அந்த நேரத்தில் ராஜ்கிரண் பற்றி அதிகமான விமர்சித்தும் வந்தது. அதாவது சினிமாக்களில் மட்டும்தான் ராஜ்கிரண் காதலுக்கு சப்போர்ட் பண்ணுகிறார் ஆனால் நிஜத்தில் தன்னுடைய மகள் காதலித்து திருமணம் செய்தால் இப்படி எதிர்க்கிறாரே என்று கூட பலர் கூறியிருந்தனர். இப்படியான நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து ப்ரியா இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.

அதாவது நான் சில மாதங்களுக்கு முன்பே முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டேன். அவர் குடித்துவிட்டு தினமும் என்னை அடித்து கொடுமை படுத்துகிறார். என்னுடைய தந்தை வீட்டிலோ அல்லது என்னுடைய உறவினர்களிடமோ நான் பணம் வாங்கி வந்து அவருக்கு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். கோடிக்கணக்கில் என்னிடம் பணம் கேட்கிறார். அதோடு ஏற்கனவே அவருக்கு இரண்டு திருமணம் நடந்திருக்கிறது.

அதனால் எங்களுடைய திருமணம் முறைப்படி ஆனது கிடையாது. நான் முனீஸ் ராஜாவால் ரொம்பவே மன அழுத்தத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய வளர்ப்பு தந்தை ராஜ்கிரண் தான் எனக்கு உதவி செய்தார். நான் ராஜ்கிரண் அப்பாவை முனீஸ் ராஜாவின் பேச்சைக் கேட்டு எவ்வளவோ பேசி இருக்கிறேன். ஆனால் அதை எல்லாம் மறந்து எனக்கு உதவி செய்தது ராஜ்கிரண் அப்பா தான்.

ஒரு முறை என்னுடைய உறவினர் ஒருவர் எனக்கு போன் பண்ணி இருந்தார். நான் அப்போது என்னுடைய கஷ்டங்களை எல்லாம் அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் என்னுடைய அப்பாவிடம் அந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார் என்று எனக்கு தெரியாது. உடனே ராஜ்கிரண் அப்பா எனக்காக ஒரு வீடு எடுத்து தந்து என்னை தனியாக தங்க வைத்தார். அதோடு நான் கவுன்சிலிங் போக வேண்டும் என்று சொல்லி என்னை அதற்கு அனுப்பி வைத்தார்.

எனக்கு மருத்துவ செலவுகளை எல்லாம் ராஜ்கிரண் அப்பா தான் பார்த்தார். நான் இருந்த வீட்டில் பர்னிச்சரில் இருந்து வீட்டுக்கு தேவையான எல்லா சாமான்களையும் பார்த்து பார்த்து எனக்காக வாங்கி தந்திருக்கிறார். இப்படி எல்லாம் அவர் செய்வார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அப்பாவின் அருமையை புரியாமல் நான் தப்பு செய்துவிட்டேன்.

என்னுடைய வாழ்க்கை தான் முக்கியம் என்று நான் சுயநலமாக தான் அவரைப் பற்றி ஆரம்பத்தில் நான் பேசியிருந்தேன். ஆனால் அவர் அதை எல்லாம் அவர் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. நான் கஷ்டத்தில் இருக்கிறேன் என்றதும் எனக்காக ஓடி வந்து உதவி செய்தார் என்று வீடியோ பேட்டி ஒன்றில் பிரியா பேசியிருக்கும் நிலையில் அந்த வீடியோவை ராஜ்கிரண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதற்கு அதிகமான ரசிகர்கள் லைக் கொடுத்து ராஜ்கிரனை பாராட்டி வருகிறார்கள். தன்னுடைய பிள்ளை தவறு செய்தால் அதை மன்னித்து ஏற்றுக் கொள்வது தந்தையின் பண்பு என்பதை இவர் நிரூபித்து விட்டார் என்று சிலர் பாராட்டுகின்றனர். இன்னும் ஒரு சிலர் நீங்கள் எதற்காக ஆரம்பத்தில் இவர்களுடைய காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இப்போது புரிகிறது என்று கூறி வருகின்றனர். இப்படியாக அதிகமான கமெண்ட்கள் குவிந்து வரும் நிலையில் அதற்கு ராஜ்கிரண் லைக் கொடுத்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+