என் வாழ்க்கையில் இந்த குறை மட்டும் இருக்கு! மகள் குறித்து கண்ணீரோடு பேசிய நடிகர் ராமராஜன்
சென்னை: நடிகர் ராமராஜன் 23 வருடங்களுக்குப் பிறகு நடிக்கும் சாமானியன் திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராமராஜன் தன்னுடைய வாழ்க்கையில் தன்னுடைய மகள் குறித்த ஒரு கவலை மட்டும் தான் எனக்கு அதிகமாக இருக்கிறது என்று உருக்கமாக பேசியிருந்தார். அது குறித்து பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஆடை, அழகு எல்லாம் நடிப்புக்கு தேவையே இல்லை என்று புரட்சியை செய்தவர்தான் நடிகர் ராமராஜன் இவர். ராமராஜன் கதாநாயகனாக அறிமுகமான காலகட்டத்தில் நடிகர் ரஜினி, கமல்ஹாசன் போன்றோர் பிரம்மாண்டமாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தனர்.

ஆனால் அரைக்கால் டவுசர் ரோடு படம் முழுக்க வலம் வந்து அதிகமான ரசிகர்களை தன் பக்கம் திருப்பிய பெருமையை ராமராஜனுக்கு தான் சேரும். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்த ராமராஜன் அந்த நேரத்தில் அதிகமான ரசிகர்களை தன் வசப்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதுபோல ராமராஜனே பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியும் இருந்தார்.
நடிகர் ராமராஜன் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சின்ன ஊரில் பிறந்து அங்கிருக்கும் சினிமா கொட்டகையில் டிக்கெட் கிழித்துக்கொண்டு இருந்த வேலை மற்றும் வாழை இலை விற்பனை செய்வது போன்ற வேலைகளை பார்த்து, பிறகு சென்னைக்கு வந்து சினிமா இயக்குனராகவும் பிரபலமான நடிகரும் மாறி பலருக்கும் ரோல் மாடலாகவும் மாறி இருந்தார். அந்த நேரத்தில் தான் நடிகை நளினியை காதலித்து திருமணமும் செய்திருந்தார்.
இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு நளினி மற்றும் ராமராஜனுக்கு அருண் மற்றும் அருணா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தது. ஆனாலும் சில வருடங்கள் கழித்து சில காரணங்களால் இருவரும் மனம் ஒத்து போய் விவாகரத்து செய்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதில் அருணுடைய கல்யாணத்தை நளினி மற்றும் ராமராஜன் இருவரும் சேர்ந்துதான் நடத்தி வைத்திருந்தனர்.
அருண் மற்றும் பவித்ராவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு தான் சென்னையில் வைத்து திருமணம் நடந்தது. மேலும் ராமராஜனின் மகளான அருணா பிரபல தனியார் வங்கியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அருணாவிற்கு திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லை என்பதுதான் தனக்கு பெரிய வேதனையாக இருக்கிறது என்று ராமராஜன் பேட்டியில் பேசியிருக்கிறார்.
தன்னுடைய மகனுக்கு ஒரு பையன் இருக்கிறான். அவர் என்னை மாடு (Cow) தாத்தா என்று தான் கூப்பிடுவார். எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் ராமராஜன் பால் கறக்கும் கேரக்டரில் நடித்திருந்ததால் அவருடைய பேரன் அவரை மாடு தாத்தா என்று கூப்பிடுவாராம். தொடர்ந்து பேசிய ராமராஜன் என்னுடைய மகன் குழந்தையாக இருக்கும்போது நான் ஒரு சயின்டிஸ்ட் ஆகப்போகிறேன் என்று சொன்னான்.
அதனாலே நான் ஒருமுறை பிளைட்டில் வரும்போது என்னோடு பயணித்த அப்துல் கலாம் ஐயாவிடம் சென்று சார் நான் உங்களுடைய தீவிரமான ஃபேன் சார் என்னுடைய பையன் உங்களைப் போல வரணும்னு சொல்றான். எனக்கு ஒரு ஆட்டோகிராப் வேணும் என்று வாங்கி என்னுடைய மகனிடம் கொடுத்தேன்.
ஆனால் பிற்காலத்தில் என்னுடைய மகனின் வாழ்க்கை வேறு விதமாக மாறியது. அதுபோல என்னுடைய பேரன் நானும் தாத்தா போல நடிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போது டான்ஸ் கிளாஸ் எல்லாம் போய்க் கொண்டிருக்கிறார். வெளிநாட்டில் அவர்கள் செட்டில் ஆகிவிட்டாலும் நான் அடிக்கடி அவர்களோடு வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் என்னுடைய மகளுக்கு திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் ஒரு குழந்தை இல்லை என்ற கவலை எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்து விட்டால் என்னுடைய மனசு ரொம்பவே சந்தோஷம் அடைந்து விடும் என்று அந்த பேட்டியில் வருத்தமாகவே ராமராஜன் பேசி இருக்கிறார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications