வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கீதா.. 47 வயதில் அப்பாவாகும் ரெடின்.. குவியும் வாழ்த்து
சென்னை: கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா ஜோடி தாங்கள் விரைவில் பெற்றோராக போகிறோம் என்ற செய்தியை தற்போது அறிவித்திருக்கின்றனர். இவர்களுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தொழிலதிபர், காமெடி நடிகர், டான்சர் என்று கலக்கி கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லிக்கூட ஆரம்பத்தில் நடிக்க ஆர்வம் இருந்தாலும் அவருக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 40 வயதிற்கு மேலே தான் இவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க துவங்கியது.

இவருக்கு இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தான் இயக்கிய திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கியது. அதிலும் முதல் திரைப்படம் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் இவருடைய வித்தியாசமான மேனரிசம் பலரையும் கவர்ந்தது.
கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்திலும் கிங்ஸ்லி நடித்திருந்தார். முதல் திரைப்படத்திற்கும் இரண்டாவது திரைப்படத்திற்கும் அதிகமான மாற்றங்கள் இருந்தது. அதுபோல ரெடின் கிங்ஸ்லியின் காமெடி மற்றும் வித்தியாசமான பேச்சு வழக்கு பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

டாக்டர் திரைப்படத்தில் ஆக்சனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த திரைப்படத்தில் யோகி பாபுவை கிங்ஸ்லி ஓவர் டேக் செய்திருந்தார் என்றே சொல்லலாம். அதனாலேயே அந்த திரைப்படத்திற்கு பிறகு அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல திரைப்படத்தில் ரெடீனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதுபோல சமீபத்தில் கூட கனா காணும் காலங்கள் வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சங்கீதா கர்ப்பமாக இருப்பதால் அவர் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் சங்கீதா மற்றும் ரெடின் இருவரும் தாங்கள் பெற்றோராகப்போகும் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அதுபோல சமீபத்தில் கூட கனா காணும் காலங்கள் வெப் சீரி செல்லும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சங்கீதா கர்ப்பமாக இருப்பதால் அவர் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் சங்கீதா மற்றும் ரெடின் இருவரும் தாங்கள் பெற்றோராக போகும் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதனால் இது வதந்தியா என்றும் கேள்விகள் எழும்பி வந்த நிலையில் தன்னுடைய முதலாவதாக ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ள சங்கீதா “தாங்கள் பெற்றோராக போகிறோம், விரைவில் எங்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரப் போகிறது” என்று உறுதி செய்து இருக்கிறார்.
இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் வெளியான சமயத்தில் இது நிஜத் திருமணமாக இருக்காது, ஷூட்டிங் திருமணம் ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அப்போது பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
அதற்குப் பிறகுதான் சங்கீதா அதிகாரப்பூர்வமாக தங்களுக்கு திருமணமானதை அறிவித்தார். அதுபோல இரண்டு மாதத்திற்கு முன்பே சங்கீதா சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியலில் இருந்து விலகிய போது அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதை இப்போதுதான் சங்கீதா உறுதி செய்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications