நான் சம்பாதிச்ச காசுல நான் ஆடுறேன்! என் பொண்ண பார்த்து, அந்த கமெண்ட்.. கடுப்பான ரோபோ சங்கர்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவிற்கும் அவருடைய மாமா கார்த்திக்குக்கும் கடந்த வாரத்தில் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் சொந்த ஊரான மதுரையில் நடைபெற்று இருந்த நிலையில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இவர்கள் வீட்டில் பங்க்ஷன் களைகட்ட தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வர அதை பார்த்து பலர் வாழ்த்துக்கள் கூறினாலும் சிலர் அது குறித்து அதிகமாக திட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
இதனால் கடுப்பான ரோபோ சங்கர் சமீபத்தில் அதற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அதில், நான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எல்லோருக்கும் தெரிந்தது கொஞ்சம் விஷயம்தான். என்னுடன் கூட இருந்த என்னுடைய மனைவி,குழந்தை மற்றும் என்னுடைய உறவினர்களுக்கு மட்டும்தான் என்னைப் பற்றி முழுமையாக தெரிந்து இருக்கும்.

ஆரம்பத்தில் நான் அவ்வளவு வலி வேதனைகளோடு ஒவ்வொரு இடத்திலும் போராடி வெற்றி பெற்றேன். என்னுடைய உழைப்பால் தான் நான் இன்று இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறேன். ஆனால் சில மதங்களுக்கு முன்பு நான் இறந்து போய் விடுவேன் என்று மருத்துவர்கள் கைவிட்டு இருந்தார்கள். ஆனாலும் என்னை என்னுடைய குடும்பத்தினர்கள் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போது எனக்கு இருக்கிற வாழ்க்கையை நான் என்ஜாய் பண்ணுகிறேன்.
சன் டிவி சீரியல் காதல் ஜோடியின் திடீர் திருமணம்... யார் தெரியுதா? குவியும் வாழ்த்துக்கள்
அதை சிலர் தவறாக பேசுகிறார்கள். நான் என்னுடைய ஒரே பொண்ணு கல்யாணத்தை அவளுக்கு பிடித்த மாதிரி சந்தோஷமாக நடத்துகிறேன். அதற்கு சிலர், ஏன் இவர்கள் இந்த ஆட்டம் போடுறாங்க? இப்போ இவ்வளவு பண்றவங்க இன்னும் ஒரு வருஷத்தில் ஆளுக்கு ஒரு பக்கமா பிரிஞ்சு போயி இன்னொரு சேனலில் பேசிக் கொண்டிருப்பாங்க என்றெல்லாம் கமெண்ட் போடுகிறார்கள். நாங்க இப்ப கமெண்ட் எல்லாம் நொடிப் பொழுதில் இவ்வளவு தானா? என்று தள்ளிவிட்டு போய்விடுவோம்.
ஆனால் இந்த மாதிரி கமெண்ட் போடுறவங்க அந்த பலனை அனுபவிப்பாங்க என்று பேசியிருக்கிறார். அப்போது பக்கத்தில் இருந்த ரோபோ சங்கரின் மாப்பிள்ளையும் இந்திரஜாவின் கணவருமான கார்த்திக் நானும் என்னுடைய மாமாவும் ஆரம்ப காலகட்டத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டோம்.. நான் பெட்ரோல் பங்கில் வேலை செய்தேன். என்னுடைய மாமா அலுமினிய வேலை செய்தார். அப்படி தொடங்கிய எங்களுடைய வாழ்க்கை இன்று நல்லா இருக்கிறது.
இப்ப கூட 20 குழந்தைகளை நாங்க தான் முழு பொறுப்பெடுத்து பாத்துக்குறோம் அதுக்காக யாரிடமும் நாங்கள் உதவி கேட்கவில்லை நாங்களே எல்லாத்தையும் பார்த்துக்கிறோம். நாங்கள் உழைத்த பணத்தை வைத்து என்ஜாய் பண்ணுகிறோம் அதில் சிலருக்கு என்ன கஷ்டம் வந்தது என்று தெரியவில்லை. சிலர் பொறாமையில் தான் தப்பு தப்பா கமெண்ட் போடுறாங்க.
நான் என்னுடைய மாமாவை எமனிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டேன் இந்த மாதிரி தப்பு தப்பா கமெண்ட் போடுறவங்க எல்லாம் எம்மாத்திரம்? என்று கார்த்திக் கோபமாக பேசியிருக்கிறார். அப்போது ரோபோ சங்கர் நான் என்னுடைய மகள் எங்கேஜ்மென்டில் அவளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததை வைத்து சமூக வலைத்தளத்தில் அதிகமாக தப்பு தப்பா பேசுறாங்க.
ஒரு அப்பா பொண்ணுக்கு முத்தம் கொடுத்தால் என்ன ஆபாசம் இருக்கு என்று தெரியவில்லை. நான் அவள் குழந்தையாக இருக்கும்போதிலிருந்து அப்படித்தான் பாசமாக இருக்கிறேன். இன்னைக்கு அவளுக்கு கல்யாணம் முடிந்து விட்டது. அப்போதும் அதே பாசத்தோடு தான் இருக்கிறேன். ஆனால் பார்க்கிறவர்கள் என்ன நினைப்பாங்க என்று நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கண்டதையும் சிலர் கமெண்ட் ஆக போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு நான் கஷ்டப்படுற ஆளு கிடையாது என்று அந்த பேட்டியில் ரோபோ சங்கர் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications