Robo Shankar : ரோபோ சங்கர் உயிரிழப்புக்கு காரணம் இதுதானா? உடலில் மண்ணெண்ணெய்! கலங்கி பேசிய இளவரசு
சென்னை: இயல்பான கலை வெளிப்பாட்டால் மக்களை மகிழ்வித்த நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் தனது 46வது வயதில் காலமானார். அவரது மறைவு, தமிழ் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் ரசிகர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

நடிகர் இளவரசு அதிர்ச்சி தகவல்
ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், நடிகர் இளவரசு ஒரு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் தனது ஆரம்ப காலங்களில் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிடுவதற்காக, உடலெங்கும் சில்வர் பெயிண்ட் அடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த பெயிண்டை நீக்குவதற்காக, மண்ணெண்ணெய் வைத்துத் துடைப்பாராம். தொடர்ந்து இவ்வாறு செய்ததால், அவரது தோலின் வலு குறைந்து, அதுவே மஞ்சள் காமாலை வருவதற்கு ஒரு முக்கியக் காரணம் என்றும், இதுவே அவரது திடீர் மரணத்திற்கும் காரணமாக இருக்கலாம் என்றும் இளவரசு கூறியுள்ளார்.
சவால்கள் நிறைந்த வாழ்க்கை
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சி மூலம் ரோபோ சங்கர் என்ற பெயருடன் பிரபலமானார். தனது அசாத்தியமான பஞ்ச் கவுண்டர்களால் நகைச்சுவை செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். ஆனால், அவரது வாழ்க்கையில் சிரிக்க வைத்ததை விட, கண்ணீரும் சோகமும் அதிகம் கலந்திருந்தன.
கடந்த ஆண்டு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, உடல் மெலிந்து காணப்பட்டார். அந்த நோயிலிருந்து மீண்டு வந்தபோது, "நான் மீண்டும் உயிர் பிழைத்து வந்ததற்கு என் மனைவிதான் காரணம்" என்று நெகிழ்ந்து பேசியிருந்தார். சமீபத்தில், சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில், முதல் எலிமினேஷன் சுற்றிலேயே அவர் வெளியேறினார். அப்போது, "நான் எந்த எலிமினேஷனுக்கும் பயப்படற ஆள் கிடையாது. பல எலிமினேஷன்களைப் பார்த்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்" என்று தைரியமாகப் பேசிய அவரது வீடியோ, இன்று அவர் இல்லாத நிலையில், ரசிகர்களை மேலும் கண்கலங்க வைத்துள்ளது.
அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
ரோபோ சங்கரின் மரணம் பல பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் தனுஷ், விஜய் ஆண்டனி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பரும், சக கலைஞருமான சிவகார்த்திகேயன், அவர் உடலுக்கு மாலை அணிவித்துவிட்டு கலங்கி நின்ற காட்சி, காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, சிவகார்த்திகேயனைக் கண்டதும் கண்ணீர்விட்டு கதறி அழுதார். இந்த நெகிழ்ச்சியான தருணம், இருவருக்கும் இடையிலான ஆழமான நட்பை வெளிப்படுத்தியது.
ரோபோ சங்கரின் உடல், இன்று மாலை 4 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. சிரிப்பை மட்டுமே கொடுத்த ஒரு கலைஞனின் மரணம், அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications