என் 3 வயசுல அப்பா பட்ட கஷ்டம்.. இது பலருக்கும் தெரியாது.. குடும்ப ரகசியத்தை உடைத்த ரோபோ சங்கர் மகள்
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளாக இந்திரஜா சங்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சிறுவயதில் தன்னுடைய தந்தை பட்ட கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். ரோபோ சங்கரை பிரபலமாக எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடைய ஆரம்ப காலம் எவ்வளவு வலி வேதனை நிறைந்தது என்பது பற்றி அவருடைய மகள் பேசிய பிறகு பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் இப்போது வெள்ளி திரையிலும் முன்னணி நடிகர்களோடு முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டு உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார். அப்போது பலரும் இவருடைய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்திருந்தனர். அதே நேரத்தில் இவருடைய உடல் எடை குறைந்ததற்கு காரணம் அதுவாக இருக்கும் இதுவாக இருக்கும் என்று பல வதந்திகளும் பரவி வந்தது.

ஆனால் எல்லாவற்றையும் உடைத்து ரோபோ சங்கர் மீண்டும் பழைய நிலைக்கு மாறியிருக்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கரின் மகள் நிச்சயதார்த்தம் முடிவடைந்து இருக்கிறது. விரைவில் அவருடைய மகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ரோபோ சங்கரின் மகள் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய தந்தை குறித்து பெருமையாக பேசி இருந்தார்.
அதில் தன்னுடைய அப்பாவின் ஆரம்பகால புகைப்படங்களை நாங்கள் அவ்வளவு பத்திரமாக வைத்திருக்கிறோம். காரணம் அப்பா ஆரம்பத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார். நான் பிறந்த பிறகு அப்பா எனக்கு மகாலட்சுமி பிறந்திருக்கிறாள் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாராம். காரணம் நான் வளர வளர அப்பாவும் வளர்ந்து இருக்கிறார். எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அப்பா பண நெருக்கடியால் அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கிறார்.
அந்த நேரத்தில் ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய உடம்பில் போடப்படும் பெயிண்டால் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. அந்த பெயிண்ட் போடுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதை சரியாக போடவில்லை என்றால் உடம்பில் கொப்பளங்கள் வந்துவிடும். அதை எல்லாம் தாண்டி தான் அவர் மேடையில் ஜெயித்திருக்கிறார்.
அதே நேரத்தில் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவுக்கு வாய்ப்புகள் வந்த பிறகு அப்பா காலையில் ஷூட்டிங்கில் இருப்பாராம். மாலையில் ஜிம்மில் ஒர்க் அவுட்டில் இருப்பாராம். அவர் ஒரு ட்ரெயினராக இருந்ததால் ஜிம் திறப்பதற்கு முன்பு சீக்கிரமாக அவரே அங்கே சென்று எல்லா வேலைகளும் செய்து வைக்க வேண்டும். அதற்காக அப்பா வீட்டிலிருந்து சைக்கிள் எடுத்துக் கண்டு கிளம்புவார்.
அப்போது எங்க வீட்டில் பைக்கெல்லாம் கிடையாது. சைக்கிளில் போய் அங்கு எல்லா வேலைகளையும் செய்து முடித்து விடுவாராம். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் வீட்டில் யாரிடமும் தன்னுடைய கஷ்டத்தை காட்டிக்கொள்ள மாட்டார். எங்க அப்பா மற்றும் அம்மாவின் காதல் கதையை கேட்டு தான் நான் வளர்ந்தேன். அதுபோல ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து இருந்ததால் பட்ட கஷ்டங்கள் குறித்தும் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.
நான் இப்போது காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். இந்த விஷயம் வீட்டில் தெரிஞ்சதும் எல்லோரும் சந்தோஷம்தான் பட்டார்கள். யாரும் எதிர்ப்பு சொல்லவில்லை. அந்த மாதிரி எனக்கு ஒரு அப்பா கிடைத்தது எனக்கு பெருமை தான். அதுபோல அப்பா உடல்நிலை பிரச்சனை ஏற்பட்ட பிறகு நடிக்க வைக்க வேண்டாம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
ஆனால் நாங்கள் அப்படி சொல்லவே மாட்டோம். காரணம் அவருடைய திறமைகளை நாங்கள் எங்கேயும் அடக்கி வைக்க முடியாது. அப்பா உன்னால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு செய்யலாம் ஆனால் முடியாத நேரத்தில் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம். அப்பாவும் அதைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறார் என்று அந்த பேட்டியில் ரோபோ சங்கர் மகளான இந்திரஜா சங்கர் கண் கலங்க பேசியிருந்தார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications