சினிமாவில் விஜய்க்கு வில்லன்! கண் முன்பு இறந்த அம்மாவிற்காக எடுத்த சபதம்.. இப்போ பல பேர் ஹேப்பி!
சென்னை: பொதுவாக திரைப்படங்களில் வில்லனாக நடிப்பவர்கள் நிஜத்தில் அப்படி இருக்க மாட்டார்கள். ஆனால் வில்லனாக நடிக்கும் ஒரு சிலருடைய இன்னொரு பக்கம் யாரும் எதிர்பார்க்காத ஒரு விதத்தில் இருக்கிறது. அதுபோலத்தான் நடிகர் சாயாஜி ஷிண்டே தன்னுடைய அம்மா பட்ட கஷ்டங்களை பார்த்து அவருக்காக ஒரு பெரிய நல்ல விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார்.
சாயாஜி ஷிண்டே தமிழில் ஒரு சில படங்களில் பார்த்திருப்போம். அதிலும் சேட்டை படத்தில் மூலமாகத்தான் இவர் தமிழில் அறிமுகமானார். அதற்கு பிறகு தாண்டவம், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், வெடி, வேட்டைக்காரன், ஆதவன், படிக்காதவன், அழகிய தமிழ் மகன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.

கடைசியாக பாரதி படத்தில் பாரதியாராகவும் நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இங்கிலீஷ், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். ஆனால் சயாஷிக்கு அவருடைய அம்மாவின் இறப்பு தான் அவருடைய வாழ்க்கையே மாற்றி விட்டதாம். அவருடைய அம்மா இறப்பதற்கு முன்பு மூச்சு விடுவதற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டு இறந்திருக்கிறார்.
அதனால் அம்மா மீது இருந்த அன்பு மற்றும் பாசத்தால் இவருடைய மனதிற்குள் ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. அம்மா இந்த அளவிற்கு மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டதற்கு காரணம் நல்ல காற்று இல்லாததுதான். அதனால் அதற்கு நான் நிறைய மரங்களை நட்டால் தான் சுற்றுச்சூழல் மூலமாக நமக்கு நல்ல ஆக்சிஜன் கிடைக்கும், அதனால் பல உயிர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று அம்மாவிற்காக மரங்களை நட வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

அதற்காக தனி அமைப்பை தொடங்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட தொடங்கி இப்போது லட்சக்கணக்கான மரங்களை வளர்த்து வருகிறார். இந்த பசுமை முன்னேற்ற திட்டத்தில் பள்ளி குழந்தைகள், பெண்கள் மற்றும் தொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களையும் பங்கெடுக்க வைத்திருக்கிறார்.
கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் தூய்மையான காற்றை உறுதி செய்யும் விதமாக மரம் நடுதல் வழியாக பசுமை சூழ்நிலையை உருவாக்கி, வனவிலங்குகளுகும் பாதுகாப்பை அழித்து வருகிறார். சாயாஷி திரை நட்சத்திரமாக மட்டுமல்லாமல் சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னேற்றத்திலும் ஒரு முன் மதிரியாக உயர்ந்து இருக்கிறார். இவர் செய்த செயலால் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications