திடீரென ரோஜா சீரியல் அர்ஜுன் வெளியிட்ட உருக்கமான பதிவு! இந்த ஒரு நிலைமையை எதிர்பார்க்கலையே ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் அர்ஜுன் கேரக்டரில் நடிக்கும் சிபு சூர்யன் ரசிகர்களுக்காக உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பல வருடங்களாக சன் டிவி அர்ஜுன் ஆக வாழ்ந்து வந்த சிபு சூர்யன் ரசிகர்கள் ஒரு சில மாதங்களாகவே எது நடந்து விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தார்களோ அது நடந்து விட்டது என தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகன் வெளியிட்ட ரகசியம்
சன் டிவியில் ரோஜா சீரியலின் அர்ஜுன் கேரக்டரில் நடிக்கும் சிபு சூரியன் ரோஜா சீரியல் விரைவில் முடிவடைய இருக்கும் ரகசியத்தை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். ஒரு சில மாதங்களுக்கு முன்பே இந்த சீரியல் முடிவடைய போகிறது என்ற தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அது உண்மை அல்ல என்று சீரியலில் அர்ஜூனின் அம்மாவாக நடிக்கும் மெட்டிஒலி புகழ் காயத்ரி சாஸ்திரி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அதைத்தொடர்ந்து ரோஜா சீரியலின் ரசிகர்கள் பெருமூச்சு விட்டபடி அப்பாடா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாச்சி என இருந்தனர். இந்த நிலையில் தற்போது சீரியலின் கதாநாயகனே இந்த சீரியல் முடிவடைய போகிறது என்றும் கடைசி நாள் சூட்டிங் ஸ்பாட் அனுபவங்களையும் ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

உருக்கமான பதிவு
நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தற்போது முடிவடைய இருக்கிறது. இந்த சீரியலில் நடித்து வந்த கதாநாயகி பிரியங்கா நல்கரி ஒரு பக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றியையும், இந்த சீரியலில் இருந்து தான் முடிவடைவதால் தனக்கு இருக்கும் வேதனைகளையும் பகிர்ந்து இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது சீரியலின் கதாநாயகனும் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், "என்ன ஒரு அற்புதமான நான்கு ஆண்டு பயணம், இதில் பல மகிழ்ச்சியான நினைவுகள் எனக்கு கிடைத்திருக்கிறது. அன்புகளும் குறைவில்லாமல் கிடைத்திருக்கிறது. இன்று ரோஜா சீரியலில் எனது இறுதி படப்பிடிப்பை முடித்த இவ்வேளையில் அதிகமாக ரசிக்கப்பட்ட அர்ஜுன் கதாபாத்திரத்தை என்ன நம்பி எனக்களித்த சரிகம நிறுவனத்திற்கும், சன் டிவிக்கும் நன்றி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
சமீபத்தில் தான் பல திருப்பங்களுக்கு பிறகு போராட்டங்களோடு ரோஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது .குழந்தை பிறந்ததும் இந்த சீரியல் திடீரென முடிக்கப்படுகிறது. இந்த சீரியலுக்கு பிறகு இதே நேரத்தில் விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா மானசாவின் புது சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதால் அந்த சீரியல்தான் இந்த டைமில் ஒளிபரப்பாக அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனாலும் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்கரியும் அர்ஜுன் ஆக நடிக்கும் சிபுவும் மீண்டும் நாங்கள் உங்களோடு வருவோம் என்று கூறி இருப்பதை தொடர்பு இவர்கள் மீண்டும் சன் டிவி சீரியலில் தொடர்வார்களா? என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

கேரக்டரை நினைத்து வருந்தும் நடிகர்கள்
சன் டிவி சீரியலில் கணவரை அர்ஜுன் சார் என்று அழைத்து, பல சீரியல்களில் மட்டுமல்லாமல் வீட்டிலும் கணவரை சார் என்று அழைக்கும் ஒரு முறையை கொண்டு வந்தது இந்த ரோஜா சீரியல்தான். அதிலும் அர்ஜுன் ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை அதிகமாக கவர்ந்து இழுக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. பொதுவாக இல்லத்தரசிகள் மட்டும் தான் சீரியலை ரசிப்பார்கள் ஆனால் இந்த சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் அதிகமாக ஆதரவு உண்டு இந்த சீரியலில் அர்ஜுன் கேரக்டில் சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கரி, வில்லி அணு கேரக்டரில் விஜே அக்ஷயா, மற்றும் அர்ஜுனின் அம்மாவாக மெட்டி ஒலி புகழ் காயத்ரி சாஸ்திரி அர்ஜுனனின் பாட்டி கேரக்டரில் வடிவுக்கரசி அர்ஜுனன் அப்பாவாக சிவா என பல பிரபலங்கள் நடித்து வந்தனர். அவர்களும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் சீரியலின் முடிவு குறித்தும் பல வருத்தமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications