“வாழை” படத்தை பார்த்ததும்.. மாரி செல்வராஜ்க்கு முத்தம் கொடுத்த சூரி.. விஷயமே இதுதானா?
சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளி வந்து இருக்கும் வாழை திரைப்படத்தினை பார்த்த நடிகர் சூரி, மாரி செல்வராஜிக்கு முத்தம் கொடுத்து தன்னுடைய பாராட்டை தெரிவித்து இருக்கிறார். இதை மாரி செல்வராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு மாறுபட்ட இயக்குனராக இருந்து வருகிறார். அவருடைய முதல் படமே பரியேறும் பெருமாள் திரைப்படம் தான். அந்த திரைப்படத்திற்கு பிறகு கர்ணன், மாமன்னன் என எல்லா படங்களுமே ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை தத்துரூபமாக எடுத்து சொல்லும் படமாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த வரிசையில் வாழை திரைப்படத்தையும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது ரிலீஸ் செய்திருக்கிறார்.

நாளை இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பு பிரபலங்கள் பார்க்கும் சோ காட்டப்பட்டிருக்கிறது. அதில் பலர் படத்தை பார்த்ததும் மாரி செல்வராஜ் பாராட்டி இருக்கிறார்கள். இயக்குனர் பாலா படத்தை பார்த்து முடித்ததும் வெளியே வந்து எதுவும் பேசாமல் மாறி செல்வராஜின் கன்னத்தில் மற்றும் நெத்தியில் முத்தம் கொடுத்து அவரை பாராட்டி இருக்கிறார்.
பிறகு சிறிது நேரம் யோசித்து விட்டு நீ எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து தான் படங்களை இயக்குகிறார் என்பது இப்போ தெரிகிறது என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அதுபோல இந்த படத்தை தியேட்டரில் பார்த்ததும் வெளியே வந்த சூரி மாரி செல்வராஜை கண்டுபிடித்து அவருடைய நெற்றி மற்றும் கன்னத்தில் முத்தம் கொடுத்து இருக்கிறார். படத்தைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை படம் முழுக்க நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் என்று மாரி செல்வராஜை சூரி பாராட்டி இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மாரி செல்வராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். வாழை திரைப்படம் பற்றி ஏற்கனவே மாரி செல்வராஜ் பேசுகையில் இந்த படம் போல இனி ஒரு படம் என்னால் எடுக்க முடியுமா? என்று என்னால் சொல்ல முடியாது. ஏன்னா இந்த படம் என்னுடைய வாழ்க்கையின் வலிகளை சொல்லும் படம். நான் பட்ட அடிகளை சொல்லும் படம். ஒரு திரைப்படம் என்பது யாரும் பேசாத பேசுபொருளை பேசணும்.

இன்னொன்னு ஒரு மக்களின் வலிகளை கடத்தணும். எந்த சமூகம் கடத்துதோ அதை அழுத்திக்கிட்டு இருக்கிற சமூகத்துக்கு ஒரு குற்ற உணர்ச்சியா இருக்கணும். நாம இப்படி பண்ணிட்டோமே இந்த விஷயங்கள் எல்லாம் வெளியே வந்துட்டேன்னு அவங்க பீல் பண்ணனும். அதுதான் சிறந்த சமூகத்திற்கான படைப்பாக இருக்கும் என்பதுதான் எதார்த்தம்.
வாழைப்பழத்தில் வாழைத்தார் வெட்டுவது, அங்கு நடக்கும் ஒடுக்குமுறை, பள்ளி செல்லும் மாணவர்கள் தங்களுடைய குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு போவது பிறகு ஆசிரியர் மாணவர்கள் உறவு பற்றிய பல கதைகள் அந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை புரிய வைக்கிறதுக்கு பல சூழ்நிலைகள் இந்த படத்துல வருகிறது என்று சொல்லி இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications